வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட ரோகினியின் மாமா.. குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த முத்துவின் பாட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்திருக்கும் நபர் மீது முத்துவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முத்து ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி வாயை விட்டு குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் சில நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடைபெற்றது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பிரவுன் மணி வாயை விட்டு உளறிக் கொண்டிருப்பதை பார்த்து கோபமான ரோகிணி நீங்க தண்ணி கேட்டீங்களா? வாங்க உங்களுக்கு ரூம்ல வச்சிருக்கேன் என்று கூட்டிட்டு போய் தேவையில்லாம எதுக்காக ஓவர் ஆக்டிங் பண்ணுறீங்க, உங்களை யார் இதெல்லாம் பண்ண சொன்னது என்று கோபப்பட்டு இனி நானா சொல்ற வரைக்கும் இந்த ரூம விட்டு வெளியே வரக்கூடாது.

siragadikka aasai serial December January 25th episode Uncle of trapped Rohini

ஏதாவது திரும்பவும் ஓவர் ஆக்டிங் பண்ணுனா நானே உங்களை துரத்தி விடுவேன். அதோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மிரட்டுகிறார். மறுபக்கத்தில் முத்து அங்கும் இங்கும் நடந்து யோசித்துக் கொண்டிருக்க செல்வம் எதற்குடா இப்படி பண்ணுறா என்று கேட்க, அதற்கு அந்த நபரை பார்த்தால் மலேசியா மாமா மாதிரி தெரியல மந்தவெளி ஆள் மாதிரி தெரியுது எனக்கு என்னமோ தப்பா இருக்குன்னு சொல்ல அதற்கு செல்வம் நீ அவர்கிட்ட சரக்கு கேளு,

siragadikka aasai serial December January 25th episode Uncle of trapped Rohini

அவர் மலேசியாவில் இருந்து இருந்தா மலேசியா சரக்கு இருக்கும். இல்லன்னா அவருடைய உண்மை தெரிஞ்சிடும் என்று சொல்ல இந்த ஐடியா செம ஐடியாவா இருக்கு அந்த ஆளை தனியா தள்ளிட்டு போய் உண்மையை வாங்கணும் என்று செல்வமும் முத்துவோம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் மீனா,ரோகினி, ஸ்ருதி மூவரும் பானையில் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றனர்.

siragadikka aasai serial December January 25th episode Uncle of trapped Rohini

அப்போது ஸ்ருதியும், ரோகிணியும் அடுப்பு பத்த வைக்க தெரியாமல் திணறிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் மீனா சமாளித்து பொங்கல் வைத்து முடிக்கின்றனர். அப்போது முத்து பாட்டி இடம் செல்லமாக விளையாடிக் கொண்டிருக்க அதற்கு பாட்டி கோபப்படுகிறார். அதற்கு அண்ணாமலை நீங்க வளர்த்த பையன் தானே அதான் அவனுக்கு நீங்க அம்மா மாதிரி, அதனாலதான் உங்க கூட விளையாடுறார் என்று சொல்கிறார்.

அதற்கு பாட்டி அவன் உன்னை மாதிரி கள்ளக் கபடம் இல்லாமல் நல்ல மனசோட இருக்கான் என்று சொல்ல, அப்ப மனோஜும், ரவியும் எங்களை பத்தி சொல்ல மாட்டீங்களா என்று கேட்க அதற்கு முத்து நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தான்... உங்களை சொல்லி தப்பு இல்ல, வளர்ப்பு அப்படி, ஓடு காலி பிரதர்ஸ் என்று கலாய்க்கிறார். அடுத்த கட்டத்தில் பொங்கல் வைத்து முடித்ததும் எல்லோரும் பொங்கல் சாப்பிட ரெடி ஆகின்றனர்.

அப்போது விஜயா ரோகினியை உங்க மாமாவை கூட்டிட்டு வாம்மா என்று சொல்லி அனுப்பி வைக்க ரோகினி மாமாவை எழுப்பி வெளியே கூட்டிட்டு வர அவருக்கும் பொங்கல் கொடுக்கின்றனர். அப்போது அவரிடம் பொங்கல் எப்படி இருக்குனு கேட்க, அதற்கு அவர் ரத்த பொறியல் மாதிரி சாப்பிட்டா இருக்கு. மட்டன் சுக்கா இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் என்ன காம்பினேஷன் தப்பா இருக்கு என்று யோசிக்கின்றனர்.

siragadikka aasai serial December January 25th episode Uncle of trapped Rohini

அப்போது ரோகினி இடையில் நுழைந்து அவர் ஜோக் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று வழக்கும் போல சமாளிக்கிறார். அந்த நேரத்தில் பாட்டி எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று ஆசைப்பட முத்து எல்லாரையும் சாப்பிட விடாமல் அவசரமாக வெளியே கூட்டிட்டு வருகிறார். பிறகு எல்லாரும் குடும்பத்தோடு சேர்ந்து போட்டோ எடுக்கின்றனர். அந்த நேரத்தில் முத்து ரோகினியின் மாமாவை மட்டும் தனியா போட்டோ எடுத்து வை அது தேவைப்படும் என்று செல்வத்திடம் சிக்னல் காண்பிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+