ரோகிணியின் அம்மா பற்றி பேசி மாட்டிய மாமா.. விஜயா கோபத்தில் சொன்ன வார்த்தை.. முத்துவின் அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்தவர் மீது முத்துவிற்கு சந்தேகம் வந்திருக்கும் நிலையில் அதை கண்டுபிடிப்பதற்காக புது முயற்சி எடுக்க அதில் ரோகிணி மாமாவாக நடிக்க வந்தவர் மாட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில் ரோகினியின் அம்மா இறந்து விட்டார் என்று கறிக்கடைக்காரர் ஓவர் பில்டப் செய்ய அதனால் கோபமான ரோகிணி கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். கடைசியில் விஜயா அதிர்ச்சியாகி, பிறகு ரோகிணிக்கு சமாதானம் செய்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் எல்லோரும் ஃபேமிலி போட்டோ எடுத்தது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்தவரிடம் மனோஜின் வேலை எப்படி போயிட்டு இருக்கிறது என்று கேட்க, அதற்கு முத்து எப்படி வேலை தேடுறீங்கன்னு கேளுங்க என்று கோர்த்து விடுகிறார்கள். என்னாச்சு என்று மாமா கேட்க அதற்கு மனோஜ் நான் நிறைய படித்து இருக்கிறேன்.

என்னை வைத்து வேலை வாங்குற திறமை யாருக்கும் இல்லை என்று சொல்ல, அதற்கு விஜயா அவனை கையை பிடித்து தூக்கி விட ஆள் இல்லை என்று சொல்லி புது பிசினஸ் தொடங்குவதற்காக பணம் கேட்பதற்காக பிளான் போடுகின்றனர். அப்போது முத்து மனோஜ் என்ன கிணத்துக்குள்ளயா விழுந்து கிடக்கிறான் என்று கலாய்த்து கொண்டிருக்கிறார்.

அதற்கு ரோகிணியின் மாமா விடுங்க மாப்பிள்ளை நீங்க எப்பவுமே இப்படித்தான் கிண்டலா பேசிகிட்டு இருப்பீங்க. ஆனா ரோகிணியின் அப்பாவுக்கு ரோகினி ஒரே பொண்ணு அதனால எல்லா சொத்துக்களும் மனோஜ் மாப்பிள்ளைக்கு தான வரப்போகுது என்று சொல்ல, அதற்கு மனோஜ் அது சரிதான் அதுவரைக்கும் நானா எனக்கு புடிச்ச ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு நான் ஊருக்கு போனதும் ரோகிணியின் அப்பாவிடம் பேசுறேன் என்று மாமா சமாளிக்கிறார்.
பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது வெத்தலை பாக்கு கொடுக்க அப்போது ரோகிணியின் மாமா மட்டன் பிரியாணி சாப்பிட்டு வெத்தலை போட்டா தனி சுகம் என்று சொல்ல, அதற்கு முத்துவின் பாட்டி இவரு வந்த நேரத்தில் இவருக்கு ஆடு மேல தான் ரொம்ப பிரியம் போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ரோகினியின் மாமா ரோகிணி ஓட அப்பாவுக்கு எப்பவுமே பணம் பணம்ன்னு தான் ஓடி ஓடி வேலை பார்ப்பாரு. வீட்டுக்கு வெளியே கூட ஒரு ஏடிஎம் மெஷின் வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கோங்க என்று ரோகிணியின் மாமா ஓவர் பில்டப் செய்கிறார். அதோடு ரோகிணியின் அப்பா பணம் பணம் என்று ஓடியதால் தான் அவங்க அம்மா மேல அவர் அக்கறை செலுத்தாமல் போயிட்டாரு.
அவங்க அம்மாவுக்கு கேன்சர் வந்துட்டு, ரோகினி ஓட அம்மாவுக்கு கேன்சர் வந்ததும் பக்கெட் ரத்தம் வாந்தி எடுத்து செத்தாங்க, அவங்க இறந்த 3 மாதத்தில் தான் ஒரு சின்ன பொண்ணை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு அதனாலதான் ரோகினி கோபமா இருக்கு என்று சொல்ல, அப்போது அம்மா இறந்துட்டாங்கன்னு சொன்னதை கேட்டதும் ரோகிணி கோவப்பட்டு எங்க அம்மா இறக்கல என்று கத்தி விடுகிறார். பிறகு எங்க அம்மா இறக்கல இப்போதும் என் கூட தான் வாழ்ந்துட்டு இருக்காங்க என்று ரோகிணி சமாளிக்கிறார்.
அதற்கு விஜயா ரோகினி அப்பாவுக்கும் ஒரு துணை வேணாமா என்று கேட்க, அதற்கு ரோகிணி மாமா விஜயாவிடம் உங்களுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் நீங்க செத்து போயிட்டீங்கன்னு வச்சுக்கோங்க. அப்போ மூணு மாசத்துல சம்பந்தி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா பசங்க அவரை மதிப்பாங்களா என்று விஜயாவுக்கு சங்கு ஊதி அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு விஜயா உங்களுக்கு எடுத்துக்காட்டு சொன்லுறதிற்க்கு வேற ஆளே இல்லையா? நான் தான் கிடைச்சனா என்று கோபப்படுகிறார்.
அப்போது முத்து எல்லோருக்கும் கரும்பு உடைத்துக் கொடுக்க மனோஜ் இந்த கரும்பு ஏண்டா இவ்வளவு ஹார்டா இருக்கு, ஜூஸ் போட்டு குடிக்கலாமா என்று கேட்டுக் கொண்டதற்கு மலேசியா மாமா என்ன மாப்ள நீங்க இதையே கடிக்க முடியவில்லை என்றால் நல்லி எலும்பை எல்லாம் எப்படி கடிப்பீங்க? என்று கேட்கிறார். அப்போதும் குடும்பத்தினர் அனைவரும் சந்தேகம் படுகின்றனர்.
பிறகு வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க ரோகினி இடம் விஜயா சமாதானம் செய்ய உனக்கு நான் அம்மாவா இருப்பேன் என்று சொல்கிறார். அதற்கு நாச்சியார்பட்டி ரோகிணிக்கு மட்டும்தான் நீ அம்மாவா இருப்பியா என்று கேட்க, இல்ல நான் ஸ்ருதிக்கும் அம்மாதான் என்று சொல்ல அதற்கு ஸ்ருதி வேண்டாம் நீங்க எனக்கு அம்மா எல்லாம் வேண்டாம் எனக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருந்து பண்ணற தொந்தரவு போதும் நீங்க எனக்கு ஆன்டியாகவே இருந்துடுங்க என்று ஷாக் கொடுக்கிறார்..

பிறகு முத்து வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரலாம் என்று செல்வத்திடம் பேச மலேசியா மாமா எனக்கு வீட்டிலே இருக்கிறது போர் அடிக்கிறது நானும் கிராமத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று அவரோடு போக கிளம்புகிறார். அப்போது ரோகிணி இதை பார்த்து அதிர்ச்சியாகி அதெல்லாம் வேண்டாம் என்று தடுக்க பார்க்கிறார். ஆனால் அதற்கு மலேசியா மாமா ஒத்து வராததால் மனோஜை கூட அனுப்பி வைக்கிறார்.
அப்போது எல்லாரும் ஒரு குளத்தின் அருகே நின்று குளம் நிறைஞ்சு போச்சுன்னா தண்ணீர் ஊருக்குள்ள வந்துடும் போல என்று ரோகிணியின் மாமா பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு போன வருஷம் எங்க வீட்டுக்குள் தண்ணீர் வந்துடுச்சு என்று சொல்ல, அதற்கு முத்து சென்னையில தான தண்ணி வீட்டுக்குள்ள வந்துச்சு மலேசியாவில் வந்துச்சா என்று கேட்க, அதற்கு அவர் எல்லா இடத்திலும் தான் வந்துச்சு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது செல்வம் அதெல்லாம் இருக்கட்டும் சரக்கு பற்றி கேளு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட மலேசியா மாமா என்னவென்று விசாரிக்க அதற்கு முத்து இவன் என் பிரண்டு நீங்கள் மலேசியாவில் இருந்து வந்திருக்கீங்கன்னு சொன்னதும் உங்களை பாக்கணும்னு ஆசைப்பட்டு வந்தான் என்று சொல்ல அதற்கு மாமா அப்படியா தம்பி இந்தா பாத்துக்கோங்க என்று முன்னும் பின்னும் திரும்பி உடம்பை காட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications