மலேசியா மாமாவால் முத்துவுக்கு வந்த சிக்கல்.. மனோஜ் செய்த பிரச்சனை.. ரோகிணி போட்ட அடுத்த ட்ராமா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மலேசிய மாமா மனோஜை குடிக்க வைத்தது முத்து தான் என்று பழியை தூக்கி முத்து மீது போட மொத்த குடும்பத்தினரும் முத்துவை திட்டுகின்றனர். முத்துவின் பாட்டியும் முத்துவை போட்டு அடிக்கிறார்.
இந்த நிலையில் மலேசியா மாமாவிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள முத்து போட்ட பிளானை ரோகிணி தெரிந்து கொண்டதால் மலேசிய மாமாவை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற அடுத்த பிளான் ரோகிணி போடுகிறார். இந்த நொடியில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் பித்து பிடித்தது போல உட்கார்ந்திருக்க, விஜயா உனக்கு என்னடா ஆச்சு என்று பதறி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து ரோகிணியும் மனோஜ் என்ன ஆச்சு ஏன் பேசாம இருக்கான் என்று கேள்வி கேட்க அப்போது ரவி வந்து பார்த்து குடிச்சிருக்காம்மா என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதை தொடர்ந்து முத்து தான் குடிக்க வச்சிருப்பான் என்று விஜயா தவறாக புரிந்து முத்துவை திட்ட நான் ஒன்னும் பண்ணல என்று முத்து சொல்லியும் கேட்காமல் ரோகிணி குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் மட்டுமே குடிக்க வேண்டியதுதானே எதுக்காக அவரை குடிக்க வச்சீங்க என்று கோபப்படுகிறார். அப்போது மலேசியா மாமாவும் உளறிக் கொண்டிருப்பதை பார்த்து அவரும் குடிச்சி இருப்பதை பார்த்து அவரையும் ரோகிணி சத்தம் போடுகிறார்.

அப்போது மனோஜை எதுக்கு குடிக்க வச்சீங்க என்று ரோகிணி கேட்க அதற்கு மலேசியா மாமா நானும் வேணான்னு தான் சொன்னேன். முத்துவும் அவனுடைய பிரண்ட்ஸ சேர்ந்து தான் மாப்பிள்ளைக்கு ஊற்றி விட்டுட்டாங்க என்று முத்து மீது பழியை போட எல்லோரும் முத்துவை திட்டுகின்றனர். அப்போது பாட்டி இப்பதான நான் எல்லாரும் குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னு சொன்னேன்.

அப்படி சொல்லி வாயை மூடுறதுக்குள்ள இப்படி பண்ணிட்டியேடா என்று சொல்லி இதையெல்லாம் அண்ணாமல பார்த்தாங்க. மனசு கஷ்டப்பட மாட்டான் ஆனால் அவனை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என்று திட்டிக் கொண்டிருக்க, அப்போது செல்வம் உண்மையை சொல்ல வர அதற்குமுத்து வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். பிறகு மனோஜை ரோகிணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு முத்து அவளை இப்ப பேச வைக்கணும் அவ்வளவுதானே என்று மோரை கொண்டு வந்து கொடுக்கிறார்.
அதை குடித்த முத்து உப்பு கம்மியா இருக்கு என்று பேசுகிறார். பிறகு விஜயாவை பார்த்து, அம்மா நீ மட்டும் தான் அம்மா என் மேல ரொம்ப பாசமா இருக்க ஓடிப்போய் கட்டி பிடிக்க அதற்கு விஜயா நாத்தம் தாங்கல என்று பிடித்து கீழே தள்ளி விடுகிறார். பிறகு ரவியை பிடித்து என் தம்பி கல்யாணத்துக்கு என்னை கூப்பிடாம விட்டுட்டியேடா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்ததாக பாட்டியை கட்டிப்பிடித்து கலாட்டா செய்கிறார்.
கடைசியாக ரோகிணியை பார்த்ததும் கட்டிப்பிடித்து காலில் விழுந்து கதறுகிறார். நான் சீக்கிரம் ஏதாச்சும் வேலைக்கு போயிடுறேன், என்னை விட்டுட்டு போயிடாத என்று புலம்பி கொண்டு இருக்க, ரோகிணி மனோஜை ரூமுக்கு கூட்டிட்டு போய் அடிக்கிறார். பிறகு மனோஜ் அந்த சரக்கு நல்லா இருந்துச்சு ஒன்ஸ்மோர் கிடைக்குமா என்று கேட்கிறார். ரோகிணி மரியாதையா படுத்து தூங்குங்க இதுவே முதலும் கடைசிமா இருக்கணும் என்று வார்னிங் கொடுக்கிறார்.

பிறகு செல்வமும் முத்துவும் பின்பக்கம் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த மலேசியா மாமா மேல இன்னும் சந்தேகம் அதிகமா இருக்கு. இந்த பார்லர் அம்மா என்னமோ டிராமா போடுது. இன்னைக்கு மலேசியா மாமா தப்பிச்சுட்டாரு நாளைக்கு பிடிக்கிறேன் என்று முத்து பேசிக்கொண்டிருப்பதை ரோகிணி கேட்டு விடுகிறார். பிறகு ரோகிணி ரூமுக்கு வந்து மனோஜை எதுக்காக குடிக்க வச்சீங்க என்று மலேசியா மாமாவை தலையில் கொட்டி கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் நாளைக்கு வேறொரு பர்பாமென்ஸ் வச்சிருக்கேன் என்று பெருமையாக பேச, அதற்கு பிறகு நீங்க பண்ணுன வரைக்கும் போதும் நாளைக்கு காலைல உங்களுக்கு ஒரு போன் வரும் உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லுவாங்க நீங்க இங்க இருந்து கிளம்பி போயிட்டே இருக்கணும் என்று மிரட்டுகிறார். அதற்கு மலேசியா மாமா நீ அடிக்கடி கதையில் ட்விஸ்ட் கொடுக்கிற, நீயே ஒரு கதையை எழுதி மணிரத்னம் சார் கிட்ட கொடுத்துடு என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications