வீட்டை விட்டு போகும்போது வாயை கொடுத்து மாட்டிய மாமா.. முத்து கேட்ட கேள்வி.. பாட்டி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 30 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மலேசியா மாமாவை வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்று ரோகினி போட்ட பிளானால் முத்துவுக்கு மேலும் மலேசியா மாமா மீது சந்தேகம் வருகிறது.
அதே நேரத்தில் மலேசியா மாமா ஊரை விட்டு கிளம்பியதும் விஜயா நாமளும் சென்னைக்கு கிளம்பலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு நாச்சியார் பாட்டி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். இன்னும் இரண்டு நாட்கள் ஊரில் தான் இருக்க வேண்டும் என்று நாச்சியார் பாட்டி சொல்லி இருக்கும் நிலையில் சில கலகலப்பான காட்சிகள் இன்று நடைபெற்றது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மலேசியா மாமாவிடம் ரோகிணி நாளைக்கு உங்களுக்கு ஒரு போன் வரும் அதில் உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லுவாங்க உடனே நீங்க இங்கிருந்து கிளம்பிடனும் என்று சொல்ல அதற்கு பிரவுன் மணி அப்போ மணிரத்தினம் படம் வாய்ப்பு என்று கேட்க, அதற்கு ரோகிணி அதற்கு என் பிரண்டு வித்யாவை பாருங்க அவ உங்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பா என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையில் விஜயா காபி போட்டு கொண்டு வர அதற்கு அண்ணாமலை எனக்கு தானா காபி, நானும் உன்கிட்ட கேட்கலாம் என்று இருந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்க இது உங்களுக்கு கிடையாது சம்பந்திக்கு என்று நேராக மலேசியா மாமாவின் ரூமை விஜயா தட்டுகிறார். அப்போது அவரும் வெளியே வந்து காப்பியை வாங்கிக்கொண்டு குடித்துக்கொண்டே இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்க,

அப்போது நேற்று சைவம் சமையல் இன்னைக்கு அசைவம் ஆட்டை வெட்ட சொல்லி இருக்கோம் என்று சொல்ல, அதைக் கேட்டு மலேசியா மாமா சந்தோஷமாகி எனது ஆடு வெட்டியாச்சா? அதுல பீஸ் தான் ரொம்ப முக்கியம் என்று அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா இன்னைக்கு என்ன எல்லாம் சமைக்க போறோம் என்று லிஸ்ட் சொல்லிக் கொண்டிருக்க இதை கேட்டதும் மலேசியா மாமா இன்று செமையான சாப்பாடு இருக்குது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணிக்கு அவருடைய தோழி போன் பண்ண ரோகிணி போனை கையில் எடுத்தபடியே ஓடி வருகிறார். அப்போது எல்லாரும் என்னாச்சு என்று கேட்க அதற்கு ரோகிணி மாமா ஆன்ட்டிக்கு, உடம்பு சரியில்லை என்று சொல்ல அதற்கு பிரவுன் மணி என்னது ஆண்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா என்று விஜயாவிடம் கேட்கிறார். அதனால் கோபமான ரோகினி கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நான் ஆண்டினு சொன்னது உங்க வைஃப்பை மறந்துட்டீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு பிரவுன் மணி ஆமாம், நேற்றைக்கு பேசுனோம் இல்ல மறந்துட்டேன் என்று சொல்ல, அதற்கு முத்து என்னது நேத்து பேசினீங்க? என்று சந்தேகமாக கேள்வி கேட்க அதற்கு ரோகிணி இல்ல அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்னு நேத்திக்கு பேசினோம் என்று சமாளிக்கிறார். பிறகு உங்களை உடனே ஊருக்கு கிளம்பி வர சொன்னாங்க என்ற ரோகிணி சொல்ல அதற்கு பிரவுன் மணி இல்லை எனக்காக இங்க விதவிதமா சமைச்சி இருக்காங்க.
இன்னைக்கு சாப்பிட்டு நாளைக்கு காலையில் கிளம்புறேன் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி அவருடைய காலை மிதிச்சு கிளம்ப சொல்ல பிரவுன் மணி சரி என்று வேண்டா வெறுப்பாக ஊருக்கு கிளம்பி போகிறார். அடுத்ததாக ரோகிணி நாமளும் ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்ல, அதற்கு விஜயாவும் ஆமா இனிமே நமக்கு என்ன வேலை நம்மளும் கிளம்பலாம் என்று சொல்ல,

அதற்கு நாச்சியார் பாட்டி இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு தான் போகணும். உங்களுக்கு போர் அடிக்காம இருக்க இங்க நிறைய விளையாட்டுகளை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கோம் என்று சொல்கிறார். அப்போது ஸ்ருதி ஒரு பக்கம் ரவியிடம் நம்ம முத்துவை தோற்கடிக்கணும் அவர் நம்மளை எப்பவும் அவமானப்படுத்திக்கிட்டே இருக்கார் என்று பிளான் போடுகிறார். மறுபக்கத்தில் ரோகினி மனோஜிடம் அந்த முத்து மீனாவே ஜெயிக்க விடக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக விஜயா அங்கு வந்து நீங்க நான்கு பேரும் எப்படியாவது முத்து மீனாவை தோற்கடித்து நீங்கதான் என்னுடைய மானத்தை காப்பாத்தணும் என்று பிளான் போட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும்போது முத்து மீனா விடம் போட்டிக்கு ரெடியா நாமதான் ஜெயிக்கணும் என்று சொல்ல, அதற்கு மீனா யார் ஜெயிச்சா என்னங்க. குடும்பமா சேர்ந்து விளையாட போறோம் அதுவே பெரிய சந்தோஷம்தான் என்று சொல்ல அதற்கு பாட்டி மீனா ஓட மனசு இங்க யாருக்குமே இல்லை என்று மனசுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

கூடவே ஒரு பிளானை போட்டு எல்லாரையும் கூப்பிட்டு வைத்து பெண்கள் எல்லாம் ஒரு டீம், ஆண்கள் எல்லாம் ஒரு டீம். பெண்கள் டீமுக்கு அண்ணாமலை தலைவர், ஆண்கள் டீமுக்கு விஜயாவை தலைவராக வைக்கிறார். பிறகு அங்கு ஒரு உறியடி போட்டி தொடங்குகிறது. அதில் முதல் ஆளாக மனோஜ் களத்தில் இறங்குகிறார்.
அங்கு இருக்கும் எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கம்பை எடுத்துக் கொண்டு நேராக பானை உடைக்க ஓடுகிறார். அப்போது அவரை எல்லோரும் பிடித்துக் கொண்டு வந்து கண்ணை கட்டி சுத்தி விடுகின்றனர். அப்போது மனோஜ் பானையை தேடி தடுமாறிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications