மனோஜிடம் ரோகிணி கேட்ட ஒரே ஒரு வார்த்தை.. விஜயாவும் மாட்டியாச்சு! கடைசியில் குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் வேலைக்கு போகாமல் தினமும் வேலைக்கு போவதாக நடித்துக் கொண்டிருக்கும் ரகசியம் வீட்டிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர்.

அது தெரியாத மனோஜ் வீட்டிற்கு வந்ததும் எப்போதும் போல சீன் போட்டு நடித்துக் கொண்டிருக்க இதனால் ரோகிணி கோபத்தின் உச்சத்துக்கே சென்று விடுகிறார். அதே நேரத்தில் விஜயா இத்தனை நாட்களாக நடித்துக் கொண்டிருந்ததும் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது.

இத்தனை நாட்களாக வேலைக்கே போகாத மனோஜுக்காக ஓவர் பில்டப் கொடுத்த விஜயாவை முத்து மற்றும் அண்ணாமலை திட்டி தீர்க்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December January 9th Episode Rohini asked Manoj word

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் முத்து மனோஜ் பற்றிய வீடியோவை வீட்டில் போட்டு காட்ட எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் மனோஜ் வாசலில் பூக்கடை வைத்திருப்பதால் எனக்கு கேவலமாக இருக்கிறது என்னை பார்க்க என்னோடு வேலை பார்க்குறவங்க யாராவது வந்தா என்ன நினைப்பாங்க என்று எப்போதும் போல சீன் போட்டுக்கொண்டு வீட்டிற்குள் வர அதை அமைதியாக முத்து அப்படியா உனக்கு அவமானமா இருக்கா என்று நக்கல் செய்து கொண்டிருக்கிறார்..

அதோடு மனோஜ் நிறுத்தாமல் எல்லோரும் என்ன வீட்டில் ஒன்றாக இருக்குறீங்க எதுவும் பேசிட்டு இருந்தீங்களா? என்று கேட்டுக் கொண்டு இன்னைக்கு எங்க ஷோரூமுக்கு விஜய் வந்தாரு.. என்னதான் எங்க முதலாளி கார் பற்றி அவரிடம் பேச சொன்னாரு ஏன்னா எனக்கு தானே கார் பத்தி எல்லாமே தெரியும்.

siragadikka aasai serial December January 9th Episode Rohini asked Manoj word

அதனால நான் தான் விஜய் கிட்ட என் காரை பத்தி விவரிச்சு சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்க அதற்கு நக்கலாக முத்து சிரித்துக் கொண்டிருக்க விஜயா மனோஜை தடுக்க பார்க்கிறார்.. ஆனாலும் மனோஜ் மீண்டும் மீண்டும் கதை அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கோபமான முத்து நீ நிறுத்தறியா? இன்னைக்கு எப்படி ஷோரூமில் வேலை பார்த்த என்கிறதை இங்க ஒரு குறும்படம் ஓடிக்கிட்டு இருக்கு அதை பாரு என்று டிவியை போட்டு காட்ட மனோஜ் காலையில் இருந்து மாலை வரைக்கும் பார்க்கில் செய்த எல்லா செயலும் அங்கு வர அதை பார்த்து மனோஜ் அதிர்ச்சியாகிறார்..

siragadikka aasai serial December January 9th Episode Rohini asked Manoj word

கூடவே ரோகிணி எதுவும் பேசாமல் கோபத்தில் அழுது கொண்டே இருக்க பிறகு முத்து இந்த உண்மை எல்லாம் அம்மாவுக்கு தெரியுமா? அம்மாவுக்கு தெரிஞ்சு தான் இத்தனை நாளா அவன் வேலைக்கு போறான்னு சொல்லி வீட்டில் இவ்வளவு டார்ச்சர் பண்ணி அவனுக்கு சாப்பாடு கட்டி கொடுத்துட்டு இருந்தீங்களா? முத்துவும் மீனாவும் கேள்வி மேல் கேட்க அதற்கு அவனுக்கு வேலை இல்லை என்கிறது எனக்கு தெரியும் ஆனா சொன்னா அவனை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு தான் நான் சொல்லல என்று விஜயா சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி கோபப்பட்டு ரூமிற்கு சென்று விட மனோஜ் பின்னாடியே சென்று ரோகிணியிடம் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு ரோகிணி நான் உன்னிடம் உண்மையா தானே இருந்தேன்? நீ என்கிட்ட இதைப்பற்றி ஏன் சொல்லல உங்க அம்மாவுக்கு தெரிஞ்சது கூட நீ ஏன் என்கிட்ட சொல்லல இதை என்கிட்ட சொல்லி இருந்தா உன் தம்பி மீனா முன்னாடி நான் இன்னைக்கு அவமானப்பட்டு இருக்க மாட்டேன் என்று சட்டையை பிடித்து அழுது கொண்டே பேசுகிறார்.

siragadikka aasai serial December January 9th Episode Rohini asked Manoj word

அதோடு அடுத்த கட்டத்தில் ரோகிணி தன்னுடைய தோழியிடம் நடந்தவை எல்லாவற்றையும் சொல்ல அதற்கு அவர் நாம் பார்க்கில் பார்க்கும்போதே சந்தேகப்பட்டேன் என்று சொல்லிக் கொண்டு நீயும் உன்னுடைய விஷயத்தை வீட்டில் சொல்லிவிடு உனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்தது வீட்டிற்கு தெரிய வரும்போது இதைவிட பெரிய பூகம்பமாக இருக்கும் என்று சொல்ல ரோகிணி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது அதைத் தொடர்ந்து நாளைக்காக என்று வெளியான வீடியோவில் மனோஜ் ரோகிணிக்கு போன் செய்து கொண்டு இருக்க ரோகிணி போனை எடுக்கவில்லை. இதனால் கோபமான மனோஜ் முத்துவின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். பிறகு எல்லோரும் தெருவில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+