சிறகடிக்க ஆசையில் இன்று படையப்பா படத்தை காப்பி பண்ணி வச்சிருக்காங்க.. முத்துக்கு தான் சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயாவும் மனோஜும் சேர்ந்து அண்ணாமலைக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி கையெழுத்து வாங்குகின்றனர். கடைசியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசையில் நேற்று
சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் பிசினஸுக்காக மேலும் கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும், விஜயா அதிர்ச்சியடைகிறார். அந்தக் கடனை அடைக்க மனோஜுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இதற்காக சிந்தாமணியிடம் விஜயா கடன் கேட்க, சொத்து பத்திரம் இருந்தால் தான் கடன் தருவார்கள் என சிந்தாமணி நைசாக பேசிவிடுகிறார்.
அண்ணாமலையின் கையெழுத்து இல்லாமல் சொத்து பத்திரத்தை அடமானம் வைக்க முடியாது என்பதால், அவரது கையெழுத்தை நானே போடுகிறேன் என்று மனோஜ் கூறுகிறார். இதற்கு விஜயாவும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு
அண்ணாமலையின் கையெழுத்தை அச்சுப்பிசுறாமல் போடுவதற்காக, அவரிடம் பொய் சொல்லி, பேங்கில் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணணும், அதற்காக உங்களின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டு அண்ணாமலையிடம் மனோஜ் கையெழுத்து வாங்குகிறார்.
அண்ணாமலையும் கையெழுத்து போட போக, மீனா தும்முகிறார். ஏதோ அபசகுணமாக இருக்கிறது என்று முத்து சொல்லி கையெழுத்து போடாமல் நிறுத்துகிறார். பின்னர் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு, மனோஜ் கையெழுத்து போட சொல்லி பேனாவை கொடுக்க, பேனா எழுதாமல் போகிறது.
இதனால் அண்ணாமலைக்கு மேலும் சந்தேகம் வருகிறது. இதையடுத்து வேறு ஒரு பேனாவை கொடுத்து மனோஜ் கையெழுத்து வாங்குகிறார். (இன்று அண்ணாமலையை கையெழுத்து போடும் போது நடந்த சம்பவங்களை பார்க்கும்போது படையப்பா படத்தில் ரஜினி நிலத்தை தன்னுடைய சித்தப்பாவுக்கு எழுதிக் கொடுக்கும் போது நடந்த சம்பவம் போலவே இருந்தது)
தப்பித்த மனோஜ்
அடுத்ததாக அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் போகும் மனோஜ், அவரது கையெழுத்தை போட்டு பழகுகிறார். கையெழுத்து போட்டு பழகிய அந்த பேப்பரை கசக்கி கீழே போடுகிறார். அந்த பேப்பர் ஹாலில் இருக்கும் முத்துவின் கையில் சிக்குகிறது.

தப்பித்த மனோஜ்
அதை முத்து பிரித்துப் பார்க்க திறக்கும் போது, அவருக்கு செல்வத்திடமிருந்து போன் வருகிறது. அருணிடம் சமாதானம் பேச அழைத்திருக்கிறார்கள். அதனால் நீயும் வா என அழைக்கிறார். உடனே முத்துவும் கிளம்புகிறார். அங்கே போகும் போது தன் கையில் உள்ள பேப்பரை பிரித்துப் பார்க்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்கிறார் முத்து. இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகி உள்ளார் மனோஜ்.
சிந்தாமணியிடம் உதவி கேட்கும் ரோகிணி
மறுபக்கத்தில் ரோகிணி வீட்டுக்கு செல்லும்போது, அங்கு கிரிஷுக்கு காய்ச்சல் அடிப்பதாக ரோகிணியின் அம்மா சொல்கிறார். உடனே ஆஸ்பத்திரி போவதற்காக கேப் புக் பண்ணுகிறேன் என ரோகிணி முயற்சி செய்ய கேப் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் சிந்தாமணிக்கு போன் போட்டு, ஏதாவது கார் இருந்தால் அனுப்புமாறு கேட்கிறார். சிந்தாமணியோ, எனக்கு தெரிந்த டாக்டர் இருக்காங்க, அவங்களை கூட்டிட்டு உன் வீட்டுக்கே வர்றேன் என சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து சிந்தாமணி டாக்டரை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து கிரிஷ்க்கு ட்ரீட்மென்ட் பார்க்கிறார். அதற்காக ரோகிணி சிந்தாமணிக்கு நன்றி சொல்கிறார். அப்போது ரோகிணியிடம் சிந்தாமணி மனோஜ் என்ன சொல்கிறார் என கேட்கிறார். நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அவர் என் பேச்சை கேட்க மாட்டேங்குறார் என ரோகிணி சொல்கிறார்
சிந்தாமணியின் நாடகம்
மனோஜை உன் வழிக்கு கொண்டுவரப் பாரு, இல்லேனா விஜயா அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க என்று சிந்தாமணி போட்டு கொடுக்கிறார். அதற்கு "நான் ஒருபோதும் விடமாட்டேன்" என ரோகிணி வில்லியாக பேசுகிறார்.
மறுபுறம் வக்கீல் கிருஷ்ணா ஆபிஸில் சமாதானப் பேச்சு நடக்க இருப்பதால், செல்வத்துக்காக நான் அங்க போறேன் என்று முத்து சொல்ல அதற்கு மீனா, நீங்க அங்கு போனா பிரச்சனை வரும், அதனால் நானும் கூட வருகிறேன் என்கிறார்.
அதேபோல் சீதாவும் வருவதாக முத்து சொல்ல, உடனே சீதாவுக்கு மீனா போன் போட்டு பேசுகிறார். அப்போது அருண் தன்னை வரச் சொன்னதாகவும், அங்கு வந்து உங்க மாமா எவ்வளவு மோசமானவர் என்பதை நீயே பாரு என்று சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஆனால் நிச்சயம் இந்த சமாதானப் பேச்சின் போது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications