சிறகடிக்க ஆசையில் செம டுவிஸ்ட்.. மனோஜின் ஓடிப்போன காதலி மீண்டும் வந்தாச்சு.. இனி இதுதான் கதையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். அதாவது இந்த சீரியலில் ஏற்கனவே பரபரப்பான பல திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது அதில் ஏற்கனவே மனோஜை காதலித்து அவரிடம் 27 லட்சம் பணத்தை தூக்கிக்கொண்டு ஓடிப் போன காதலி மீண்டும் வந்திருக்கும் நிலையில் அவரோட ரீல்ஸ் வீடியோவை நடிகர் ஸ்ரீ தேவா எடுத்திருக்கிறார். அதை தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாளும் மனோஜ் ஏமாற்றிக் கொண்டிருந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே வேலைக்கு போகாமல் ஏமாற்றிக் கொண்டிருந்த விஷயம் முத்து மூலமாக மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்தது. அதற்கு பிறகு ரோகிணி வற்புறுத்தி சொன்னதால் மனோஜ் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருந்தார்.
ஆனால் அங்கேயும் தன்னால் வேலை பார்க்க முடியாமல் வேலையை விட்டுவிட்டார். இந்த நிலையில் மனோஜ் தன்னுடைய பார்க் நண்பரிடம் கடன் வாங்கி வைத்திருந்த விஷயமும் இப்போது ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. அந்த நண்பர் வீட்டிற்கே வந்து மனோஜை மிரட்டி விட்டு போயிருக்கிறார். இப்படியான நிலையில் இனி மனோஜ் தரப்பில் எதுவும் மறைப்பதற்கு இல்லை.
ஆனால் ஒவ்வொரு முறையும் வீட்டில் மனோஜ் எதையாவது பேசும்போது முத்து அவர் ஏற்கனவே கல்யாணத்திற்கு முன்னாடி தூக்கிட்டு போன 27 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது வீட்டில் தான் கனடா போக வேண்டும் என்று அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றும் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா ஒரு க்யூட்டான வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மனோஜின் முதல் காதலி அதாவது ஆரம்பத்தில் அண்ணாமலையின் 27 லட்சம் ரூபாய் பணத்தை மனோஜ் இடம் இருந்து ஏமாற்றி வாங்கிக் கொண்டு ஓடிப்போன ஜீவா இப்போது மீண்டும் சூட்டிங் வந்து இருக்கிறார். அவரோடு தான் ஸ்ரீ தேவா ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கும் நிலையில் இனி கதையில் அதிரடியான மாற்றம் நடக்கப் போகிறதா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதாவது ஒரு வேலை ரோகிணி பணத்துக்கு ஏற்பாடு செய்து மனோஜை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் போது கனடாவில் ஜீவாவை மனோஜ் சந்திக்கப் போகிறாரா?
அல்லது இதே ஊருக்குள் வேறு ஏதேனும் இடத்தில் வைத்து மனோஜ் சந்திக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி ஜீவா மீண்டும் மனோஜ் வாழ்க்கையில் வரும்போது ரோகிணிக்கு அடுத்த பிரச்சனை காத்திருக்கிறது. ஏற்கனவே ரோகிணி விஷயம் வீட்டில் எப்போது தெரியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இது என்ன புது ட்விஸ்ட் என்றுதான் சொல்லத் தோணுகிறது.
ஏற்கனவே முத்து மீனாவை பிரிக்க வேண்டும் என்று சிட்டி ஒரு பக்கம் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். விஜயா ஒரு பக்கம் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது மீண்டும் ஜீவா அறிமுகமாகி இருப்பதால் யார் இந்த வீட்டை விட்டு வெளியே போக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications