சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டுக்கு வரும் புது மருமகள்! அண்ணாமலை எடுத்த உருப்படியான முடிவு.. அதிர்ச்சியில் ஸ்ருதி அப்பா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial Feb 18 Episode) 2026 பிப்ரவரி 18ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணியின் மகள் மீனாவின் தம்பியிடம் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். மறுபக்கத்தில் நீத்துவின் உண்மையான முகத்தை ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் ரோகிணிக்கு சிந்தாமணி சில பிளான் போட்டுக் கொடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில் சிந்தாமணியின் மகள் ரேகா, சத்யாவை நேரில் சந்திக்க அவன் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சந்திராவிடம் "சத்யாவை பார்க்க வந்தேன்" என்று சொன்னதும், அவர் "அவன் மாடியில் இருக்கான்" என்று சொல்ல, உடனே மாடிக்கு சென்று சத்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்கிறார்.
காதலை சொன்ன சிந்தாமணி பொண்ணு
சத்யா என்ன விஷயம் என்று கேட்டதும், எந்த தயக்கமும் இல்லாமல் "நான் உன்னை காதலிக்கிறேன்... என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று தனது காதலை வெளிப்படையாக சொல்லி அதிர்ச்சியடைய வைக்கிறார். இதைக் கேட்ட சத்யா பேசவே முடியாமல் திணறி நிற்கிறார். இருவரும் பல நாளாக பழகி வந்தாலும், அவர்கள் பரம எதிரிகளின் வாரிசுகள் என்பது இவர்களுக்கு தெரியாது. இந்த விஷயம் சிந்தாமணிக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்ற பதட்டத்தை இந்த காட்சி உருவாக்குகிறது.
விஜயா வாக்குவாதம்
மறுபுறம் வீட்டில் முத்து, மனோஜ் ரூமுக்கு கட்டிலை மாற்றிக் கொண்டிருக்கும் போது விஜயா "பாவம் மனோஜ் வெளியே எப்படி தூங்குவான், கொசு கடிக்கும்" என்று வருத்தத்தோடு பேசுகிறார். ஆனால் அண்ணாமலை கோபமாக "முடிந்து போன விஷயத்தை பற்றி பேசாதே... இவ்வளவு நாள் அவர்கள் வெளியே இருந்தபோது உனக்கு தெரியலையா?" என்று கண்டிக்கிறார். இதனால் அந்த பேச்சு அங்கேயே நிற்கிறது.
அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மீனா, ரோகிணி வந்து கிரிஷுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்ன விஷயத்தை எல்லோரிடமும் சொல்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை "ரோகிணியை நம்ப முடியாது... அவள் வீட்டுக்கு போகாதீங்க. ஆனா கிரிஷை வேற வழியில் எப்படி பார்க்கலாம் என்று யோசிங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு
அண்ணாமலையின் பேச்சை மீற முடியாமல் இருந்தாலும், காய்ச்சலுடன் இருக்கும் கிரிஷை நினைத்து முத்துவும் மீனாவும் கவலைப்படுகிறார்கள். "அவனை எப்படி பார்க்கலாம்?" என்று யோசிக்கும் நேரத்தில் முத்து திடீரென்று "ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் ஸ்ருதியின் அம்மா-அப்பா, ரவியின் சொன்னதற்காக நீத்துவை நேரில் சந்தித்து 9 லட்சம் ரூபாய் கொடுத்து, "ரவியின் வாழ்க்கையிலிருந்து விலகி போ" என்று எச்சரிக்கிறார்கள். மேலும் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லியும் பேசுகிறார்கள். ஆனால் நீத்து பணத்தை வாங்க மறுத்து, "இது எனக்கு வேண்டாம்... ஆனா நான் ரவியை காதலிப்பதை நிறுத்த மாட்டேன்" என்று சொல்கிறாள். இதனால் கோபமடைந்த அவர்கள் அங்கிருந்து போகிறார்கள்.
சிந்தாமணி கொடுத்த ஐடியா
இந்நிலையில் கிரிஷின் உடல்நிலையை நினைத்து ரோகிணி வருத்தப்படிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி வந்து அவரை மனசு மாற்றும் விதமாக பேசுகிறார். "நீ கிரிஷ் சொன்னதற்காக மீனாவை கூப்பிடாத... கிரிஷ் மனோஜை பார்க்கணும் என்று சொன்னதாக சொல்லு... அவனை உன் பக்கம் இழுத்துக்கோ" என்று ரோகிணியை ஏத்தி விடுகிறார். இதனால் ரோகிணி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பில் இன்றைய எபிசோடு முடிகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications