சிறகடிக்க ஆசை: நல்லது செய்யபோன முத்துக்கு வந்த சிக்கல்..‌ இது பலருக்கும் பாடம்! விஜயாவுக்கு சரியான அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2026 பிப்ரவரி 3ஆம் தேதிக்கான எபிசோடில் நீத்துவின் ரெஸ்டாரண்டை ஆள் வைத்து அடித்து உடைத்ததும், நீத்துவை தாக்கியதும் முத்து தான் என நினைத்து ரவி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது யார் என்று உண்மையை குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial Feb 3 episode) நீத்து பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, முத்துவுடன் ஏற்பட்ட மன உளைச்சலால் செல்வம் காரில் செல்லும் போது அருணின் அம்மா மீது மோதி விபத்து ஏற்படுத்துகிறார். அந்த விபத்தில் அருணின் அம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Siragadikka Aasai serial Vijay TV

அருண் கொடுத்த அதிர்ச்சி

அருணின் அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிற முத்துவை, வாசலிலேயே அருண் தடுத்து நிறுத்துகிறார். "என் அம்மாவின் சாவுக்கு நீ தான் காரணம். செல்வத்தைத் தூண்டி விட்டது நீ தான்" என்று குற்றம் சாட்டுகிறார். பலரும் சமாதானப்படுத்த முயன்றும் அருண் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. கடைசியாக ஒருமுறை அம்மா முகத்தை பார்க்க அனுமதிக்குமாறு முத்து கெஞ்சியும், அருண் அனுமதிக்காமல் அனுப்பி விடுகிறார்.

ஸ்ருதிக்கு தெரிந்த உண்மை

மற்றொரு புறம், நீத்துவின் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்கிய ரௌடிகள் ஸ்ருதியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஸ்ருதியின் தந்தை பணம் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஸ்ருதி, உண்மையை நேரடியாக கேட்கிறாள். அதற்கு, "என் மகள் வாழ்க்கையை கெடுக்கும் ஒருத்தியை நான் சும்மா விட மாட்டேன்" என்று சொல்லி, நீத்துவின் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்க ஆள் அனுப்பியது நான் தான் என்று ஸ்ருதியின் தந்தை ஒப்புக்கொள்கிறார். இதனால், இனி ரவியுடன் சேரவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன் என்று ஸ்ருதி வேதனைப்படுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

இந்த உண்மையை ஸ்ருதி, மீனாவுக்கு தொலைபேசியில் தெரிவிக்கிறாள். மீனா அதை வீட்டிலுள்ள அனைவரிடமும் சொல்லிவிடுகிறார். அப்போது செல்வத்தின் மனைவி முத்துவை சந்தித்து, கணவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர உதவுமாறு கெஞ்சுகிறார். அருண் கோபபடுகிறார் என்று தெரிந்திருந்தும், மனிதாபிமானத்தால் முத்து உதவ சம்மதித்து, வக்கீலை சந்திக்க புறப்படுகிறார்.

இதற்கிடையில், நீத்துவை தாக்கியதற்கு ஸ்ருதியின் தந்தையே காரணம் என்று தெரிந்ததும் ரவி நேரடியாக அவரிடம் சண்டை போடுகிறார். "வேறு யாராவது இதை செய்திருந்தால் நான் வேற மாதிரி டீல் பண்ணியிருப்பேன். ஸ்ருதியின் அப்பா என்பதால்தான் நிதானமாக பேசுகிறேன்" என்று சொல்கிறார். நீத்துவின் மருத்துவ செலவுக்கு 4 லட்சமும், ரெஸ்டாரண்ட் சேதத்தை சரி செய்ய 5 லட்சமும் சேர்த்து மொத்தம் 9 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ரவி கண்டிஷன் வைக்கிறார்.இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+