பார்லர் ரகசியத்தை வீடியோவாக காட்டிய முத்து.. ஆனால் விஜயா சொன்னது தான் ஷாக்.. வீட்டை விட்டு போன மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி பார்லரை இன்னொரு பெண்ணிடம் விற்று விட்டார் என்பதும் பார்லருக்கு விஜயாவின் பெயர் இல்லை என்பதும் முத்துவுக்கு தெரிய வர அந்த உண்மையை வீடியோவாக எடுத்து அண்ணாமலையிடம் காட்டி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஆனால் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறார். இந்த நிலையில் பல சுவாரசியமான காட்சிகள் இன்றைய எபிசோட்டில் நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பித்தில் முத்துவின் காரில் வந்த பார்லரின் ஓனர் பணம் கொடுக்காமலே பார்லருக்குள் சென்றுவிட, முத்து பணத்தை வாங்குவதற்காக கடைக்குள் போகிறார். ஆனால் அந்த பெண் அங்கிருந்த ஊழியரிடம் இவருக்கு பணத்தை கொடுத்து செட்டில் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போகிறார் .
அதைப் பார்த்து முத்து இந்த அம்மா என்ன ஓனர் மாதிரி நடந்துக்கிறது என்று கேட்க அதற்கு அங்கிருந்த பெண் ஆமா இவங்கதான் ஓனர் இந்த பார்லரை ரோகிணி இந்த ஓனரிடம் விற்று விட்டாங்க. இப்போ ரோகினியும் எங்களைப் போல இங்கே ஒரு ஊழியராக தான் இருக்கிறாங்க என்று சொல்ல அங்கிருந்த பெயர் மாற்றப்பட்ட போர்டை முத்து போட்டோ எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலை இடம் அப்பா பக்கத்துல வாங்க ரகசியம் பேசணும் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை என்ன ஆச்சு என்னவென்று கேட்க அதற்கு நீங்க தானே எந்த விஷயத்தையும் முதலில் என்கிட்ட சொல்லு பெருசு படுத்தாதன்னு சொன்னீங்க அதனாலதான் ஒரு பெரிய பிரச்சனையை உங்ககிட்ட சொல்றேன் என்று சொல்லி, விஜயா பெயரில் பியூட்டி பார்லர் இல்லை என்பதும் அதை பியூட்டி பார்லரை ரோகிணி இன்னொரு நபரிடம் விற்றுவிட்டு அங்கேதான் வேலை பார்க்கிறார் என்ற விஷயத்தையும் சொல்கிறார்.

அதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சியோடு குழப்பம் அடைகிறார். எதற்காக இந்த பொண்ணு பியூட்டி பார்லரை விற்றிருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இதைப்பற்றி இப்போது குடும்பத்தில் யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்போ தான் உண்மை வெளியே வருதுன்னு பார்ப்போம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த ரோகிணியை விஜயா விழுந்து விழுந்து கவனிக்கிறார். அதோடு என்னுடைய பெயர் பியூட்டி பார்லரில் வைத்திருக்கிறாய் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுபோல நானே அந்த கல்லாப்பெட்டியில் வந்து உட்காருகிறேன் என்று சொல்ல, அப்போது முத்து இருமி நக்கல் செய்கிறார். அப்போது முத்து பார்லர் விஷயத்தை உளறி வர அப்போது அண்ணாமலை கையை பிடித்து தடுக்கிறார். பிறகு முத்துக்கு மீனா தோசை சுட்டுக்கொடுத்து கிச்சனில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது விஜயா வந்து இது என்ன புது பழக்கமா இருக்கு என்று மீனாவை திட்டுகிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் எனக்கு சாப்பாடு ரெடியா என்று கேட்டபடியே வர அதற்கு முத்து இவனுக்கு பத்து தோசை கூட சுட்டுக்கொடு இவன் என்ன வேலைக்கு போறான் பார்க்ல படுத்துட்டு தூங்கு தான போறேன் என்று நக்கல் அடிக்க அந்த நேரத்திலேயே அயன் செய்த துணிகளை கொண்டு ஒரு நபர் வந்து அவர் 350 ஆச்சு என்று சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சியான முத்து இவ்வளவு பணத்துக்கு யாரு அயன் பண்ண கொடுத்தது என்று கேட்கிறார் .
அப்போது அந்த நபர் இது மனோஜ் சார் உடையது என்று சொல்ல அதற்கு மனோஜ் ஆமா அதுக்கு இப்ப என்னடா என்று சொல்ல, சரி அதற்கு பணத்தை நீயே கொடுத்துடு என்று முத்து சொல்கிறார். அதற்கு மனோஜ் பணமா என்கிட்ட இல்லையே என்று தடுமாற அதற்கு முத்து ஆமா உனக்கு தான் வேலையே இல்லையே, வேற பணம் எங்கிருந்து வரும் என்று அவமானப்படுத்துகிறார்.

அதற்கு விஜயா நீ கடைக்கு போனா அங்க வந்து தருகிறேன் என்று அந்த நபரை அனுப்பி வைக்க முயற்சி செய்ய அதற்கு முத்து அந்த நபரை பிடித்து வைத்து இவனெல்லாம் நம்பாத பணம் வராது என்று அந்த நபரிடம் சொல்லி அசிங்கப்படுத்த அதற்கு கோபமான ரோகினி பணத்தை எடுத்துட்டு வந்து கொடுக்கிறார் .
பிறகு முத்து நீ எப்படியும் வேலை தேடி வேலைக்கு போக போறது கிடையாது பேசாம ஒரு அயன் கடையை வைத்து விடு, ஒரு வீட்டுக்கு 350 ஒரு நாளைக்கு பத்து வீடுனா கூட 3500 மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்கலாம் என்று சொல்ல அவமானப்பட்டு ஒரு மனோஜ் நிற்கிறார். அதோடு ரோகிணி இதுக்கு தான் எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கல என்று சொல்ல அதற்கு அண்ணாமலை முத்து விட நீ வேலைக்கு போடா எதுக்கு இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்க போ என்று திட்டுகிறார்.

அதற்கு முத்து ஆமா எனக்கு வேலை இருக்கு நான் வேலைக்கு போறேன் என்று கிளம்ப, மனோஜ் வெளியே கிளம்புகிறார் அப்போது விஜயா மற்றும் ரோகினி இருவரும் சாப்பிட்டு போக சொல்ல எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சோகமாகவே மனோஜ் வீட்டை விட்டு வெளியே போகிறார். அதனால் விஜயா மீனாவை முறைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications