சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் அருண் அம்மா கேட்ட கேள்வி, அதிகரிக்கும் க்ரைம் ரேட்.. இது நல்லாவா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோடில் சீதாவின் கல்யாண விஷயத்தால் மீனா மற்றும் முத்து இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது. அதே நேரத்தில் அருணின் அம்மா விஜயாவிடம் பேசுகிறார். அப்போது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சீதாவின் காதல் விஷயம் முத்து மற்றும் மீனாவிற்கு தெரிந்ததுதான் தெரிந்தது மூன்று வாரங்களாக இதே பஞ்சாயத்துடன் இழுத்துக் கொண்டு இருக்கிறது. முத்து கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்வதும் மீனாவும் அவருடைய குடும்பத்தினரும் சீதாவிற்காக, முத்துவிடம் பேசுவதும், அதற்கு முடியவே முடியாது என்று சொல்வதும் தான் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

முடியாத பிரச்சனை

இன்று அதற்கு ஒரு படி மேலே போய் அருண் அம்மா விஜயாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அதாவது இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா பூ கட்டி கொண்டிருக்கும் போது வீட்டிற்கு கோபமாக வரும் முத்து மீனாவிடம் உங்க அம்மாவிடம் நீதான சொல்லி அனுப்புன? என்று கேட்க, அதற்கு மீனா எங்க அம்மாவிடம் நான் எதுவும் சொல்லல, என்ன ஆச்சு? என்று கேட்க, நீ பொய் சொல்லுற.. நீதான் சீதாவின் கல்யாணத்திற்காக என்னிடம் பேச அனுப்பி வச்சா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மீனா சொன்ன வார்த்தை

அப்போது மீனா எங்க அப்பா இருந்திருந்தால் இப்போது சீதா ஆசைப்பட்ட மாப்பிள்ளைக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிருப்பாரு என்று சொல்ல, அதற்கு முத்து அருண் நல்லவன் இல்ல, மாமா இருந்தாலும் இதையே சொல்லி இருப்பார். நீ வேணா ஆவி கிட்ட பேசுற ஆளை வர வச்சு கேட்டுப்பாரு என்று சொல்ல, எனக்கு தெரிந்த அக்கா இருக்காங்க அவங்களிடம் சொல்லி அந்த ஆளை வர சொல்லுறேன் என்று மீனாவும் சொல்கிறார்.

அருண் அம்மா கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் இருக்கும் போது அங்கு அருணில் அம்மா விஜயாவை தேடி வருகிறார். அருணும் சீதாவும் காதலிக்கிறாங்க, ஆனா உங்க பையன் தான் அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறாங்க, அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த பிரச்சனையை மனசில் வைத்து இப்பொழுது பழிவாங்குறாரு என்று சொல்ல, அதற்கு விஜயா கோபமாகி, போயும் போயும் இந்த பூ கட்டுறவா வீட்டுல தான் உங்க பையனுக்கு பொண்ணு கிடைச்சதா? உங்க பையனுக்கு இரண்டாம் கல்யாணமா? அதனால்தான் இவளை கட்டி வைக்க போறீங்களா? என்று கேட்டதும் அதற்கு அருண் அம்மா கோபமாகி உங்க பையனை சமாதானப்படுத்துவீங்கன்னு உங்ககிட்ட வந்தேன்‌. ஆனா நீங்க இப்படி பேசுறீங்க என்று திட்டி விட்டுப் போகிறார்.

அதிர்ச்சி கொடுத்த முத்து

மறுநாள் காலையில் சாமியார் ஒருவர் வர மீனா தான் அவரை வர வைத்திருப்பார் என்று முத்து அவரை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து இவரு ஆவியுடன் பேச வந்திருப்பதாக சொல்கிறார். பிறகு அந்த சாமியாரிடம் ஆவியை வர சொல்லுங்க நான் உடனே பேசணும் என்று முத்து சொல்ல, அதற்கு சாமியார் நீங்க சொல்றதை பார்த்தா எனக்கே பயமா இருக்கு என்று, அவர் வீட்டை விட்டு ஓட பார்க்கிறார்.

சாமியார் செய்த வேலை

அவரை முத்து இழுத்து பிடித்து வைத்திருக்கும் நேரத்தில் விஜயாவும் பார்வதியும் வருகின்றனர். அதற்குப் பிறகுதான் இது மனோஜின் கட்டை பிரிப்பதற்காக கூட்டி வந்த சாமியார் என்று தெரிகிறது. பிறகு சாமியார் உட்கார்ந்து மனோஜின் கட்டை பிரித்து பிரிக்க சொல்கிறார். பிரித்துவிட்டு அம்மா என்று சொல்ல சொல்ல மனோஜ் தட்டு தடுமாறி அம்மா என்று சொல்கிறார். அப்போது மனோஜ் வாயில் சாமியார் சூடத்தை போட்டு விட விஜயா பதறி விடுகிறார். பொதுவாக வாயில் அடிபட்டு இருப்பதற்கு ஆபரேஷனில் கட்டு போட்டால் அதை ஹாஸ்பிடல் போய் தான் கட்டு பிரிப்பார்கள். ஆனால் இந்த சீரியலில் மட்டும் தான் எதற்கெடுத்தாலும் சாமியார்களை கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+