சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி முத்து கண்டுபிடித்த மற்றொரு ரகசியம்! மொத்தமாக ஏமாந்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 11-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அதில் ரோகிணி பற்றிய இன்னொரு விஷயத்தையும் முத்து கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் விஜயாவிற்கு அவருடைய டான்ஸ் கிளாஸ் ஸ்டுடென்ட் மூலமாக ஏமாற்றம் கிடைக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவின் காரில் மலேசியாவில் இருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் முத்து மலேசியா பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நபர்கள் பக்கத்தில் ஏதாவது கோயில் இருந்தால் நிறுத்துங்க இவருக்கு அறுபதாவது பிறந்த நாள் என்று சொல்கிறார். உடனே முத்து இதை சிறப்பாக கொண்டாடிடலாம் என்று மீனாவுக்கு போன் போட்டு கோவிலில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார்.

அந்த நேரத்தில் சிட்டி கோவிலுக்கு வர சத்யா பூக்கடையில் இருக்கிறார். அக்கா உள்ளே போயிருக்காங்க இவன் ஏதாவது பிரச்சனை பண்ணுவான் என்று சத்யா பயப்பட, அதற்கு சீதா அப்படியெல்லாம் இருக்காது என்று சொல்கிறார். பிறகு சிட்டி கோவில் நிர்வாகியிடம் ஒரு கேசுக்காக சிசிடிவி புட்டேச் தேவைப்படுகிறது கிடைக்குமா? என்று கேட்க, அதற்கு அவர் முடியாது என்று சொல்கிறார்.
உடனே சிட்டி மீனாவும் அவங்க அம்மாவும் தெரியும். சத்யா என் பிரண்டு தான் என்று சொல்ல மீனா என்கிட்ட கேட்டதுக்கே நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். அதுல ஒரு ரூல்ஸ் இருக்கு நீங்க போலீஸோட வந்தா கொடுப்போம் இல்லன்னா கோர்ட்டில் கேஸ் போட்டு கேஸ் மூலமா வந்து கேட்டா கொடுப்போம் மத்தபடி வேற யாருக்கும் கொடுக்க முடியாது என்று சொல்ல சிட்டி வேற வழி இல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்ததாக கோவிலில் இருந்த நிர்வாகி மீனாவிடம் நீ கேட்டது போல இன்னொருதங்க வீடியோ கேட்டு வந்தாங்க என்று சொல்ல யார் என்று கேட்டதும் சிட்டியின் பெயரை சொல்ல மீனா யோசிக்கிறார். பிறகு வெளியே வந்த மீனா விடம் அம்மா சிட்டி வந்த விஷயத்தை சொல்ல, அவன் எதற்காக வந்தான்னு தெரியும் என்று சொல்கிறார்.

நாம கேட்ட அதே புட்டேஜை கேட்டு தான் வந்திருக்கிறான். ரோகிணிக்காக தான் இவன் வந்திருப்பான் ரோகிணிக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றானா இவங்களுக்குள்ள என்னவோ இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் முத்து மலேசியா தம்பதியை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார். பிறகு அவர்கள் சாமி கும்பிடுகிறார்கள்.
அப்போது இருவரும் மாலை மாற்றி கொள்கிறார்கள் அதை முத்து போட்டோ எடுத்து கொடுக்கிறேன். பிறகு இவர்கள் இருவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம் அவங்களுக்கு விருந்து வச்சுட்டு அப்படியே ரோகினியின் அப்பா பற்றிய விசாரிக்கலாம் என்று மீனா சொல்கிறார். அதற்கு நான் அப்பாவிடம் முதலில் சொல்லி விடுகிறேன் என்று முத்துவும் சந்தோசமாக சொல்கிறார்.
மறுபக்கத்தில் சிட்டி ரோகிணியை சந்தித்து வீடியோ எடுக்க முடியாத விஷயத்தை சொல்கிறார். நீங்க வீடியோ மட்டும் எடுத்து கொடுங்க நான் கண்டுபிடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னதும் ரோகிணி மனோஜுக்கு போன் போட்டு போலீஸ் வந்தா கொடுப்பேன்னு சொல்லி இருக்காங்க நீ கம்பளைண்ட் கொடுத்த போலீஸ் கிட்ட கேளு என்று சொல்லி போனை வைக்கிறார்.
அடுத்த கட்டத்தில் விஜயா டான்ஸ் ஸ்கூலில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் படான்ஸ் கற்றுக்கொள்ளும் காதலர்களான ரதியும் அவருடைய காதலரும் விஜயாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு நீங்க இங்கிருந்து போயிட்டா நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம், உங்க டான்சையும மிஸ் பண்ணுவோம் என்று ஃபீல் பண்ணி பேசுகின்றனர்.
அதற்கு விஜயா நான் எங்க போறேன் என்று கேட்க நீங்கதான் ஈசியார் வீட்டுக்கு போறேன்னு சொன்னீங்களே என்று கேட்டதும், அதற்கு விஜயா உங்க எல்லோரையும் விட்டுட்டு என்னால போக முடியாது என்று நடிக்கிறார். பிறகு மாணவர்களை அனுப்பிவிட்டு விஜயாவும் பார்வதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பார்வதி, மனோஜ் ஏமாந்த விஷயத்தை இவங்க கிட்ட சொல்லாம நீ எவ்வளவு அழகா நடிக்கிற என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது வெளியே வந்த ரதியும் அவருடைய காதலரும் இந்த அம்மா நம்மகிட்டயே ஏமாத்திட்டு இருக்கிறாங்க. இவங்க பையன் யாரோ ப்ரோக்கர் கிட்ட பணத்தை கொடுத்து ஏமாந்துட்டாரு. எனக்கு அந்த விஷயம் தெரியும் நாம அவங்கள போலவே அவங்களை ஏமாத்திக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications