சிறகடிக்க ஆசை: மொத்தமாக சிக்கிய ரோகிணி.. முத்து பிடித்த பாயிண்ட்.. போலீசுக்கு ஓடிய மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் மலேசியாவில் இருந்து முத்து வீட்டிற்கு வந்த நபர்களால் ரோகிணி பிரச்சனையில் சிக்குகிறார். அதே நேரத்தில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும் பேசும் போது நீங்க மட்டும் எப்பவுமே இப்படி வேலை பார்த்துட்டு இருக்கீங்க இது உங்களால் மட்டும் எப்படி முடியுது என்று ஸ்ருதி கேட்கிறார்.

இந்த வீட்டில் இருக்கும்போது இதுபோல வேலை செஞ்சு பழகிருச்சு அதனால்தான் என்னால் வேலை செய்ய முடிகிறது. நான் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பு அத்தை ஒரு வேலைக்காரங்க வச்சிருந்தாங்க. நான் வந்த அடுத்த நாள் அவங்கள வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி ஏன் என்று கேட்க, ஏன்னா நானும் அதே இடத்தில் தானே இந்த வீட்டில் இருக்கிறேன் என்று மீனா பீல் பண்ணி பேசுகிறார்.
அதற்கு ஸ்ருதி நீங்க இவ்வளவு வேலை செய்தும் அத்தை ஏன் உங்களை மதிக்க மாட்டேங்குறாங்கனு நான் கேட்க போறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா வேண்டாம் நீங்க கேட்டா அதுக்கும் என்னைதான் திட்டுவாங்க என்று தடுத்து விடுகிறார். அந்த நேரத்தில் விஜயா வந்து எதற்காக இவ்வளவு சமைக்கிறா.. ஏதோ கல்யாண வீட்டுக்கு சாப்பாடு செய்வது போல பண்ணுற என்று கேட்கிறார்.

அதற்கு மீனா, முத்து சவாரிக்கு வந்தவர்களுக்காக சமைக்க சொன்னார் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை வந்து நான் தான் உங்களை கூட்டிட்டு வர சொன்னேன். அவங்களுக்கு இன்னைக்கு அறுபதாவது பிறந்த நாள் என்று சமாதானம் செய்கிறார். அடுத்ததாக மீனா சமைத்து கொண்டிருக்கும்போது ரோகிணி உங்க காரில் வரவங்களுக்கெல்லாம் நீங்க சாப்பாடு போட ஆரம்பிச்சிட்டீங்களா என்று நக்கல் செய்துவிட்டு போகிறார்.
மறுபக்கத்தில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கதிர் பற்றி விசாரிக்க, இன்ஸ்பெக்டர் கோவப்படுகிறார். அவரைப் பற்றிய விவரங்களை நாங்கள் சேகரிக்கிறோம். நீ தேவையில்லாத விஷயங்களை பண்ணாத என்ற வார்னிங் கொடுக்கிறார். பிறகு மனோஜை கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொல்கிறார்.
அந்த நேரத்தில் முத்து கூட்டிட்டு வந்த கெஸ்ட் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களிடம் ஆரம்பத்தில் விஜயா முகம் கொடுக்காமல் பேசுகிறார். அப்போது அவர்கள் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்ததும் என்னுடைய மருமகளுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா என்று ரோகிணியை கூப்பிடுகிறார்.

ரோகிணி இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியாகி ரூமுக்குள் நிற்கிறார். பிறகு என்ன செய்வது என்று யோசித்து அங்கிருக்கும் பஞ்சை எடுத்து வாய்க்குள் வைத்து எனக்கு பல் வலிக்கிறது என்று பேச முடியாதது போல செய்கிறார்.
விஜயா உங்க அப்பா எந்த இடத்தில் இருக்காங்க? உங்க ரெஸ்டாரன்ட் எங்க இருக்கு என்று விசாரிக்க, எதுவும் சொல்ல முடியாமல் வலியில் துடிப்பது போல ரோகிணி நடிக்க இதையெல்லாம் பார்த்து முத்து சந்தேகப்படுகிறார். பிறகு அண்ணாமலை ரோகிணியை ஹாஸ்பிடலுக்கு கூட்டி போகும்படி ஸ்ருதியிடம் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications