சிறகடிக்க ஆசை: முத்து பற்றி அருணுக்கு தெரிந்த உண்மை.. சீதாவிடம் மீனா சொன்ன விஷயம்.. சந்தோஷத்தில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 14ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து பற்றி சீதா குடும்பத்தினர் அனைவரும் பெருமையாக பேச அதைக் கேட்டு அருண் கோபப்படுகிறார். அதே நேரத்தில் சீதாவிற்கு மீனா சில அட்வைஸ் கொடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி தன்னுடைய அறையில் உட்கார்ந்திருக்கும் போது மனோஜ் வருகிறார். அவரிடம் வீட்டில் நடந்த ஒரு விஷயத்தை கவனிச்சியா, மீனா எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருந்தாலும் முத்து விட்டுக் கொடுக்காம உங்க அம்மா கிட்ட பேசுறாரு என்று சொன்னதும் மனோஜ் கோபத்தில் எழுது சென்று விடுகிறார். உடனே அருகில் சென்று ரோகிணி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நான் சொல்லல, நான் மீனாவை விட எந்தவிதத்துல குறைஞ்சு போயிட்டேன்?

ஆனால் உங்க அம்மா திட்டும்போது நீ ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணி பேசல என்று சொல்ல, இனிமே நான் சப்போர்ட் பண்ணுவேன் என்று மனோஜ் சொன்னதும் ரோகினி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு இருவரும் சிரித்த சத்தம் கேட்டு விஜயா என்ன சத்தம் என்று கேட்டதும் மனோஜ் தண்ணி சிந்தும் சத்தம் என்று சொல்ல, இந்த ரோகிணி எங்கே என்று கேட்டதும் அவ குளிச்சிட்டு இருக்கிறா என்று மனோஜ் பொய் சொல்லி விடுகிறார்.
இதனால் விஜயா போன பிறகு ரோகிணி ஓடி வந்து மனோஜை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். எனக்கு நீ இப்படித்தான் இருக்கணும், பழைய மனோஜா இருந்தா இங்க தான் இருக்கான்னு என்னை போட்டு கொடுத்திருப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் சீதா, மாமியார் வீட்டுக்கு கிளம்ப ஹவுஸ் ஓனர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் வந்து அருணிடம் முத்து பற்றி பெருமையாக பேச அருண் கோபத்தில் நிற்கிறார்
எந்த விஷயமா இருந்தாலும் முத்துவிடம் கேட்டு முடிவெடு என்று எல்லாரும் சொல்ல அருண் கோபத்தில் அம்மா வெயிட் பண்ணுவாங்க கிளம்பலாமா சீதா என்று கேட்கிறார். அப்போது சந்திராவும் மீனாவும் சீதாவுக்கு அட்வைஸ் சொல்கின்றனர். அப்போது சீதா ரூமுக்கு போய் வீட்டுக்கு கிளம்பறேன் என்று முத்துவுக்கு போன் போட்டு சொன்னதும் சந்தோஷமா போயிட்டு வா எனக்கு வேலை இருக்கிறது அதனால் தான் வர முடியல என்று சொல்லிவிட்டு அவரும் அட்வைஸ் பண்ணுகிறார்.
பிறகு முத்து வீட்டிற்கு வரும்போது மீனா இல்லாததை பார்த்து வருத்தப்படுகிறார். பிறகு கார்செட்டுக்கு வந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்கின்றனர். அதற்கு முத்து நான் வீட்டை விட்டு போனு சொன்னா உடனே மீனா போயிருவாளா? அவளாக தான் இனி வரணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நீ சாப்டியா என்று செல்வம் கேட்க, இலலை என்று முத்து சொன்னதும் இந்தா சாப்பிடு என்று சாப்பாட்டை கொடுக்க வீட்டில் இருந்து கொண்டு வந்தியா என்று முத்து கேட்க, இல்லை மீனாதான் கொண்டு வந்து தந்துட்டு போனாங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிகிறது.












Click it and Unblock the Notifications