சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் வசமாக சிக்கிய அருண்.. சதியில் விழுந்த மீனா.. நறுக்குன்னு முத்து கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 14ஆம் தேதிக்கான எபிசோடில் அருண் மறைத்த உண்மைகள் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு இன்ஸ்பெக்டர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதுபோல முத்து எடுத்த முடிவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அருணுக்கு இன்ஸ்பெக்டர் போன் போட்டு வீடியோவை பார்த்தியா? அதுல அந்த அம்மா தன்னை காப்பாற்றியது ஒரு டிரைவர் தான் என்று சொல்லி அந்த பையனுக்கு செயின் போட்டு மரியாதை பண்ணி இருக்கிறாங்க. நமக்கு பப்ளிக் உதவி செஞ்சா அவங்களை நாம தான முதலில் பாராட்டணும். நீ இப்படி நடந்து கொண்டதால போலீஸ் மேல பப்ளிக் நம்பிக்கை போய்விடும், உன்னை நான் நேர்ல பாத்துக்குறேன் என்று திட்டி விட்டு போனை வைக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

உண்மை உடைந்தது

அதனால் அருண் டென்ஷனாக இருக்கிறார். அப்போது சீதா போன் போட்டு மாமா தான் அந்த லேடியை காப்பாற்றி இருக்காங்க. ஆனா நீங்க அதை பத்தி எதுவுமே சொல்லல. அந்த இடத்தில் நீங்க இதை சொல்லி இருந்தீங்கனா மாமாவுக்கு உங்க மேல இருந்த ஒபினியன் மாறி இருக்கும். நீங்க இப்படி பண்ணிட்டீங்களே என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அதைத்தொடர்ந்து அருண் உடைய அம்மாவும் என்னவென்று விசாரித்து விட்டு அவரும் சீதா சொன்ன விஷயத்தை சொல்கிறார்.

அருண் வாக்குவாதம்

மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் மீனாவின் அம்மா பூக்கட்டும் கோயிலுக்கு வருகின்றனர். அங்கு மீனா அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அருண் அந்த கோவிலுக்கு வருகிறார். அருணை பார்த்ததும் முத்து எதுக்காக இந்த கோவிலுக்கு வந்த என்று கேட்க கோவில் ஒன்னும் உங்களுடைய சொந்த இடம் கிடையாது இங்கு யாரு வேணாலும் வரலாமே என்று கேட்கிறார். அதோடு நீ என்னை பழி வாங்குவதற்காக தானே அந்த அம்மாவை வர வச்சி வீடியோ வெளியிட்டு இருக்கிற என்று அருண் கேட்க, அந்த வீடியோ வந்துடுச்சா? அது என்னுடைய தம்பி பொண்டாட்டி தான் எடுத்தா.

முத்து கேட்ட கேள்வி

ஆனால் நீ போலீஸ்காரனா இருந்தும் இவ்வளவு முட்டாளா பேசுற? நான் எப்படி அந்த அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர வச்சு எனக்கு செயின் போட சொல்ல முடியும்? நீ சொன்ன மாதிரி இப்பதான் பவர் ஜெயித்திருக்கு என்று முத்து சொல்ல, அருண் கோபப்பட்டு அங்கிருந்து போகிறார். பிறகு முத்து தனக்கு கொடுத்த செயினை மீனாவிடம் கொடுத்து சீதாவுக்கு போட சொல்கிறார். அதற்கு சீதாவும் அவருடைய அம்மாவும் வேண்டாம் என்று சொன்னாலும் முத்து நான் சீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கிறேன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா நகை சேர்த்தாதான் முடியும் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

பார்வதி சப்போர்ட்

மறுபக்கத்தில் ரோகிணி பார்வதியை சந்தித்து ஆன்ட்டி என்னையும் மனோஜையும் வாழ விடாமல் பிரிச்சு வச்சிருக்காங்க அதனால சாமியாரை பார்க்கணும் என்று கேட்க அதற்கு பார்வதி உதவி செய்வதாக சொல்கிறார். மறுபக்கத்தில் சீதா மீனாவுக்கு போன் போட்டு அருண் உங்ககிட்ட ஏதோ பேசணும்னு சொல்றாரு என்று ஒரு லொகேஷன் அனுப்ப மீனாவும் அங்கு போகிறார்

வசமாக சிக்கும் மீனா

அங்கு போன பிறகு அருண் நான் இப்போதுதான் யோசித்து பார்த்தேன் ஆனால் அந்த இடத்தில் உங்க கணவருடைய பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நான் விட்டுட்டேன் ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு இப்போ தெரியுது. ஆனால் இனி எங்களுக்குள் கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லி எங்க அம்மா வேற இடத்தில் பொண்ணு பார்க்கத் தொடங்கிட்டாங்க. எங்களுக்கு கல்யாணம் நடக்கணும்னா நீங்க நினைச்சா மட்டும் தான் நடக்கும் என்று சொல்ல, மீனா யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+