சிறகடிக்க ஆசை: அப்பாவாகும் முத்து? மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி.. அதிர்ச்சியில் விஜயா, சந்தோஷத்தில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா குடும்பத்தினரிடம் மகிழ்ச்சி செய்தியை சொல்கிறார். அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலையும் மற்றவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவும் சந்திராவும் சத்தியாவிற்கு என்ன ஆனது என்று தெரியலையே என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சத்யாவை காப்பாற்றி விட்டதாக முத்து மீனாவுக்கு போன் பண்ணி சொல்கிறார். அதே நேரத்தில் அருணும் சீதாவிற்கு ஃபோன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார் .போலீஸ் போகிறதிற்குள் உங்க மாமாவே போய் உன் தம்பியை காப்பாத்திட்டாரு, அவர் ரொம்ப நல்லவரா தான் இருப்பாரு போல மனைவி குடும்பத்திற்காக இவ்வளவு வேகமா செயல்படுறாரு என்று அருண் பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

நன்றி மழை
அதற்கு சீதா எங்க மாமா ரொம்ப நல்லவர்தான். என்ன ரொம்ப கோபம் வரும் அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவிடம் அந்த போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிறவரும் ரொம்ப நல்லவரா இருக்குறாரு ஒரு நாள் சந்தித்து நன்றி சொல்லணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது சத்யா எக்ஸாமுக்கு டைம் ஆயிடுச்சு நான் போகணும் என்று சொன்னதும் முத்து நான் சத்யாவை விட்டுட்டு வந்துடுறேன் என்று போனை வைத்ததும் சீதாவும் அங்கு வந்து நிற்கிறார்.
மாட்டிக் கொண்ட சீதா
அப்போது மீனா சீதாவிடம் சத்யா கிடைச்சுட்டான் என்று சொல்ல, அதுதான் தெரியுமே என்று சீதா உளறி விடுகிறார். பிறகு எப்படி என்று மீனா கேட்க சந்தோஷமாக இருக்கிறதை வச்சு சொன்னேன் என்று சமாளித்து விடுகிறார். அப்பொழுது சந்திரா மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு ஒரு தூணா இருக்கிறார் இதே போல சீதாவுக்கும் ஒருத்தர் கிடைக்கணும் என்று சொல்ல, அதற்கு மீனா சீதாவே அப்படி ஒருத்தரை பார்த்து கூட்டிட்டு வந்துடுவா என்று சொல்கிறார். என்னடி சொல்லுற என்று சந்திரா கேட்க இல்லம்மா சும்மா சொன்னேன் என்று மீனா சமாளித்து விடுகிறார்.
ரோகிணியின் நாடகம்
மறுபக்கத்தில் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ரோகிணி வீட்டுக்கு வந்து ஆன்ட்டி என்று விஜயா பக்கத்தில் வந்து கூப்பிட விஜயா கேட்காதது போல இருக்கிறார். அண்ணாமலை கூப்பிட்டவுடன் என்ன என்று விஜயா கேட்கிறார். பிறகு ரோகிணியிடம் என்ன என்று கேட்க இதில் 20 ஆயிரம் பணம் இருக்கு என்று சொன்னதும் என்ன பணம் என்று விஜயா கேட்க, ஒரு பிரைடல் மேக்கப் போயிருந்தேன் என்று சொல்ல, இதை எதுக்கு என்கிட்ட கொடுக்க எனக்கு வேண்டாம் என்று விஜயா சொல்ல அதற்கு ரோகிணி நான் விருப்பப்பட்டு தான் உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அண்ணாமலை கேட்ட கேள்வி
அதற்கு மனோஜ் அவா விருப்பப்பட்டு தானே கொடுக்கிறா வாங்கிக்கோங்க அம்மா என்று சொல்ல விஜயா பணத்தை வாங்கிக் கொள்கிறார். நான் பணத்தாசை பிடிச்சவ எல்லாம் கிடையாது என்று சொல்ல ஸ்ருதி அப்போ வேற என்ன என்று கேட்க, ரவி சும்மா இரு என்று சொல்கிறார். அண்ணாமலை உனக்கு பணத்து மேல ஆசை இல்லைனனா அவ கேட்டாலும் அந்த பணத்தை நீ வாங்கி இருக்கக் கூடாது என்று சொல்ல, விஜயா அவ தப்பு பண்ணி இருக்கா அதுக்காகத்தான் இப்படி பண்ணுற.
மீனா பற்றி சந்தேகம்
கோர்ட்ல தப்பு பண்றவங்களுக்கு அபராதம் இருக்கிற மாதிரி இவ தப்பு பண்ணுனா தப்புக்கு தான் நான் காசு வாங்குறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் மீனா வருகிறார். மீனா சந்தோஷமான விஷயம் என்று கையில் சாக்லேடுடன் வரவும் அதை பார்த்து விஜயா ஒருவேளை அத்தை சொன்ன மாதிரி இவ கர்ப்பம் ஆகிட்டாளா என்று யோசித்து கொண்டு இருக்கிறார்.

விஜயாவின் திமிர்
அப்போது மீனா என்னுடைய தம்பி நல்லபடியா எக்ஸாம் எழுதி முடிச்சிட்டான் என்று சொல்லி எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கிறார். அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் வாழ்த்து சொல்ல விஜயா இப்போ என்ன கலெக்டர் பரீட்சையா எழுதி இருக்கிறான் என்று திமிராக பேசுகிறார். அதற்கு மீனா எங்களை மாதிரி குடும்பத்தில் இருந்து வர்றவங்க ஒரு டிகிரி படிக்கிறது ரொம்ப பெரிய விஷயம்.
மீனா சொன்ன ஹாப்பி நியூஸ்
நாங்க எந்த காசு பணத்திற்கும் ஆசைப்படுறவங்க இல்ல என்று சொல்ல, முத்து கையில 20 ஆயிரம் பணம் இருக்கும்போது நீ இரண்டு ரூபாய் சாக்லேட் கொடுத்தா எப்படி வாங்கிப்பாங்க என்று கேட்டதும் விஜயா கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு இரவு முத்துவுக்கு மீனா பால் எடுத்து கொண்டு வந்து கொடுக்க அப்போது மீனாவிடம் அந்த நேரத்தில் கேட்க முடியல சத்யா இருந்த லொகேஷன் எப்படி கிடைச்சது? நாங்களும் அதுக்கு முன்னாடி சைபர் கிரைம்க்கு போய் விசாரிச்சோம் ஆனால் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க என்று கேட்கிறார்.

முத்து சொன்ன விஷயம்
அதற்கு மீனா பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார். பிறகு நான் அதை பத்தி சீதா கிட்ட கேட்கல என்று சொல்கிறார். அதற்கு முதலில் நீ கேளு அவங்களுக்கு நன்றி சொல்லணும் என்று சொல்லிவிட்டு ரோகிணி விஜயாவிடம் பணத்தை கொடுத்தது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பணக்காரன் மருமக என்று அம்மா கணக்கு போட்டாங்க ஆனா ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சதும்அ தலையிலிருந்து கீழே இறக்கிட்டாங்க. இப்ப எப்படி சமாளிக்கிறது என்பதற்காக அம்மா மனசை மாத்த ரோகிணி பணத்தை கொடுத்து சமாளிக்க பாக்குது.
நன்றி சொன்ன அம்மா
ஆனால் அவங்க அதற்கெல்லாம் அசர மாட்டாங்க. இது அந்த பார்லர் அம்மாவுக்கு தெரியாமல் இருக்கு சரி என்னதான் நடக்கும் என்று பார்ப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் சீதாவும் அவருடைய அம்மாவும் அருண் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது அம்மாவிடம் உங்க பையன் செஞ்ச உதவியால் தான் என்னுடைய பையன் எக்ஸாம் எழுதி முடித்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அருணும் அங்கு வர அருணிடம் சீதாவின் அம்மா நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications