சிறகடிக்க ஆசை: முத்து சொன்ன வார்த்தை, வீட்டுக்கு வந்த மீனா.. ரோகிணிக்கு ஆப்பு வைத்த ஸ்ருதி அம்மா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவும் மீனாவும் பேசி மீனா மீண்டும் முத்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணியை ஸ்ருதியின் அம்மா மிரட்டுகிறார். இனி ரோகிணிக்கு புது பிரச்சனை வர இருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி மீனாவின் இடத்திற்கு புதியதாக ஒரு பெண்ணை வேலைக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த பெண் வீட்டில் தடபுடலாக சமையல் செய்து முடிக்கிறார். பிறகு அதை எல்லோரும் சாப்பிட்டு பார்க்க எல்லோரும் காரத்தில் கத்துகின்றனர். பிறகு விஜயா "இந்த மாதிரி நான் சாப்பிட்டேனா எனக்கு நாலு நாளில் அல்சர் வந்துரும்" என்று சொல்ல, "ஒருவேளை இதற்காகத்தான் பார்லர் அம்மா இந்த பொண்ணை கூட்டிட்டு வந்திருக்குமோ" என்று முத்து சொன்னதும் ரோகிணி கோபப்படுகிறார்.

பிறகு விஜயா "இந்த பொண்ணை இப்படியே அனுப்பி வைத்து விடு, இங்க எல்லாம் சமைக்க வைக்க வேண்டாம்" என்று சொன்னதும் ரோகிணி பணத்தை கொடுத்து அந்த பொண்ணை அனுப்பி வைக்கிறார். அப்போது "என் பொண்டாட்டியை வேலைக்காரி என்று சொன்னவங்களுக்கு இப்பவாவது அவளோட அருமை தெரியட்டும்" என்று சொல்லிவிட்டு முத்து வெளியே கிளம்புகிறார். அதைத்தொடர்ந்து மீனா முத்து கார் விடும் செட்டுக்கு கார் டெக்கரேஷன் பண்ணுவதற்காக வருகிறார். அங்கு முத்துவும் வருகிறார்.
மீனாவை பார்த்ததும் முத்து இன்ப அதிர்ச்சி அடைகிறார். அப்போது மீனா தன்னுடைய தோழிகளிடம் பேசுவது போல "சாப்பிட்டாச்சா? ஏன் முகம் வாடி இருக்கு" என்று கேட்கிறார். அதற்கு முத்து செல்வத்திடம் பேசுவது போல "நான் நல்லா சாப்பிட்டேன் நிம்மதியா தூங்குறேன். தூக்கம் வரலைன்னா கட்டிங் போடுறேன்" என்று சொல்ல அதற்கு மீனா கோபப்பட்டு திட்டிகிறார். உடனே முத்து "நான் குடிக்கல" என்று சொல்ல "அப்ப நான் வீட்டில் இல்லை என்றாலும் உங்களுக்கு நிம்மதியா தான் இருக்கீங்க" என்று மீனா கேட்க, அதற்கு முத்து சமாளிக்கிறார்.
அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு காது குத்து பங்ஷனுக்கு லெட்டர் கொண்டு வருகிறார். முத்து மீனா இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்களிடம் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு போகிறார். பிறகு செல்வம் முத்துவிடம் "சிஸ்டரை வீட்டுக்கு வர சொல்லுடா" என்று சொல்ல, "நான் போதையில் ஆயிரம் சொல்லுவேன் அதற்காக வீட்டை விட்டு போயிடணுமா? வாழ வந்த வீட்டுக்கு வருவதற்கு யாரும் சொல்லி தான் வரணுமா?" என்று முத்து ஜாடையாக மீனாவை வீட்டிற்கு வர சொல்கிறார்.
அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் ஷோரூமில் இருக்கும்போது ஸ்ருதியின் அம்மா அங்கு வருகிறார். மிக்ஸி பார்ப்பதற்காக வந்ததாக சொல்கிறார். அப்போது ரோகிணியிடம் "ரவி ரெஸ்டாரண்டில் வேலை பார்ப்பது எனக்கு பிடிக்கல, அங்கிருந்து ரவியை வெளியே வர வைக்கணும், நீத்து மனசுல என்ன நினைச்சி இருக்கான்னு நீ கேட்டு சொல்லணும்" என்று சொல்ல, ரோகிணி "இதையெல்லாம் நான் எப்படி செய்ய முடியும்?" என்று சொல்ல, "நீ பணம் கேட்டதும் நான் தந்தேனே அதுக்காக இதை பண்ணி தான் ஆகணும்" என்று மிரட்டி விட்டு போகிறார். அதோடு தான் வாங்கிய மிக்சிக்கும் பணம் கொடுக்காமல் "இதை நான் தந்த பணத்தில் கழிச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு போகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications