சிறகடிக்க ஆசை: முருகனால் அருண் பற்றி முத்துக்கு தெரியும் உண்மை! சத்யா சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 2025 ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா ரெஜிஸ்டர் மேரேஜுக்கு எல்லா வேலைகளையும் செய்கிறார். அதே நேரத்தில் வித்யாவும் அவருடைய காதலன் முருகனும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய இருக்கிறார்கள். இதனால் முத்துவுக்கு அருணுடைய பிளான் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் சத்யா சந்தோஷமான விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா வீட்டிற்கு ஒரு பெண் கீரையை கொண்டு வர அந்தப் பெண்ணை பார்த்ததும் விஜயா அதிர்ச்சி அடைகிறார். காரணம் விஜயாவின் கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் பயந்து போய் அந்த பெண்ணிடம் கீரை வாங்காமல் அந்த பெண்ணை விரட்டி விடுகிறார். இதை பார்த்ததும் வீட்டில் இருப்பவர்கள் எல்லாருக்கும் சந்தேகம் வருகிறது. விஜயாவுக்கு எதுவும் வியாதி வந்துவிட்டதா என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விஜயாவின் மாற்றம்
அப்போது விஜயா, ரோகிணியையும், மனோஜையும் பூஜை ரூமுக்கு கூட்டிட்டு போய் ஆசீர்வாதம் செய்து நீ ரோகிணியை ஷோரூமுக்கு கூட்டிட்டு போ என்று மனோஜிடம் சொல்கிறார். மறுபக்கத்தில் சீதா வேலை செய்யும் இடத்திற்கு அருண் வந்து நாளைக்கு பத்து மணிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்க போகும் விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டதும் சீதா அதிர்ச்சியாகி இருக்கிறார். அந்த நேரத்தில் மீனா வர மீனாவிடமும் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மீனாவிற்கு தெரிந்த உண்மை
அப்போது சத்யா அங்கு வருவதை பார்த்ததும் அருண் ஒளிந்து கொள்கிறார். சத்யா மீனா மற்றும் சீதாவிடம் நான் எக்ஸாமில் அதிக மார்க் எடுத்து பாஸாகிவிட்டேன் என்று சந்தோசமாக சொல்கிறார். அதைக் கேட்டு மீனாவும் சீதாவும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லிட்டு வரேன் என்று சத்தியா கிளம்புகிறார். அப்போது அருண் வந்து என்னவென்று விசாரிக்க சீதா நீங்க அன்னைக்கு ஹெல்ப் பண்ணுனதால தான் சிட்டி சத்யாவை அடைச்சு வச்ச இடத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது என்று சொன்னதும், இந்த விஷயம் சீதாவிற்கு தெரிய வர சீதா அருணுக்கு நன்றி சொல்கிறார்.
முருகன் சொன்ன விஷயம்
மறுபக்கத்தில் முத்து கார் ஷெட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது முருகன் வருகிறார். என்ன விஷயம் என்று கேட்க, நானும் வித்யாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம். எங்க சைடு கொஞ்சம் ஆள் வருவாங்க நீங்க தான் எங்களுக்கு சப்போர்ட் பண்ணி வரணும், எனக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் பற்றி எதுவும் தெரியாது நீங்க நாளைக்கு வந்தா நாம போய் விசாரிச்சுட்டு வரலாம் என்று சொல்ல முத்துவும் சரி என்று சொல்கிறார்.
சத்யா சொன்ன மகிழ்ச்சி செய்தி
முருகன் போன கொஞ்ச நேரத்தில் சத்தியா வந்து தான் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கிட்டேன் என்று சொல்ல, அதை கேட்டு முத்து சந்தோஷப்பட்டு எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி கொடுக்கிறார். நாளைக்கு எல்லாருக்கும் பார்ட்டி என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications