சிறகடிக்க ஆசை: ரோகிணி கொண்டு வந்த நகை.. முத்து கேட்ட கேள்வி.. விஜயா கண்டுபிடித்த உண்மை.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 21 ஆம் தேதிக்கான எபிசோடில், நகையை கொடுத்து விஜயாவின் மனதை மாற்றலாம் என ரோகிணி பிளான் போட கடைசியில் அது அவருக்கே பிரச்சனையாக வருகிறது. முத்து நகையை பார்த்ததும் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவியும் ஸ்ருதியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதி இனி அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போகக்கூடாது என்று சொல்ல, அதற்கு ரவி அப்படி எல்லாம் உடனே நிற்க முடியாது, நான் இந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போவது என்னுடைய ஸ்கில் டெவலப் பண்றதுக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பி போய் விடுகிறார். மறுபக்கத்தில் சீதா அருண் வீட்டிற்கு வருகிறார். அப்போது அருணை மீண்டும் சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க என்று அவருடைய அம்மா பீல் பண்ணி செல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அருண் சொன்ன விஷயம்

இதனால் என்ன நடந்தது என்று சீதா அருணிடன் விசாரிக்க அருண் ஏற்கனவே ஒரு நபரை பற்றி சொல்லி இருக்கேனே அவனால தான் இப்போ எனக்கு சஸ்பெண்ட் ஆயிடுச்சு என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சீதா, இந்த சஸ்பெண்டை நாம சாதகமா செஞ்சுக்கலாம் எங்க அக்கா மாமாவை வந்து உங்கள சந்திக்க சொல்லுறேன். அவங்க சம்மதம் சொல்லிட்டாங்கன்னா அப்புறம் அம்மாகிட்ட பேசிக்கலாம் என்று சொல்கிறார். இதனால் அருண் சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு அருணின் அம்மாவும் சந்தோஷமாக இருக்கிறார்.

மீனா அம்மாவுக்கு சந்தேகம்

மறுபக்கத்தில் மீனா அவருடைய அம்மாவை பார்ப்பதற்காக வருகிறார். அவர் சீதாவின் நடவடிக்கை இப்போ சரியில்ல எப்போதும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு மீனா சீதா எந்த தப்பான விஷயமும் செய்ய மாட்டா. நான் அவ கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார். பிறகு அங்கு சீதாவும் வருகிறார். சீதா மீனாவிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

விஜயா கேட்ட கேள்வி

அப்போது மீனா இன்னும் எத்தனை நாளைக்கு கல்யாணத்தைக்கு தள்ளி போடலாம் என்று இருக்க என்று கேட்க, நாளைக்கு நீயும் மாமாவும் வந்து நான் காதலிக்கும் நபரிடம் பேசுங்க உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா அம்மாகிட்ட சொல்லிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு மீனா சரி என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி வீட்டிற்கு லேட்டாக வருகிறார். அதனால் விஜயா எங்க போயிட்டு வர என்று சத்தம் போடுகிறார்.

ரோகிணி போடும் நாடகம்

அப்போது உங்களுக்காக ஒரு நகை வாங்கிட்டு வந்திருக்கிறேன் இது கண்டிப்பா பிடிக்கும், எனக்கு அம்மா இருந்தா அவங்களுக்கு கொடுத்து இருப்பேன். இப்போ இதை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு விஜயா இதெல்லாம் எனக்கு வேண்டாம்,, நான் கோபத்தில் இருக்கிறேன் என்று நீ நகை வாங்கி கொடுத்து என்ன சமாதானப்படுத்த பார்க்கிறீயா? முன்னாடி எங்க அப்பா இருக்குறாரு, அவரு அதை செய்வாரு இதை செய்வாருன்னு ஏமாத்துன.

கோபத்தில் விஜயா

இப்போ இதை தந்து என்னை ஏமாற்ற போறியா என்று கோபப்படுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை மனோஜ் எல்லோரும் அந்த நகையை வாங்க சொல்லி விஜயாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, நான் வாங்க மாட்டேன் என்று பிகு பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் முத்து நகையை பார்த்ததும் இது யார் வாங்கியது என்று விசாரிக்க, ரோகிணி வாங்கியது என்று தெரிந்தது அம்மா ரோகிணி மீது கோபமாக இருக்கிறதால ரோகிணி நகை வாங்கி கொடுத்திருக்கு, நீயும் நகை வாங்கி கொடுத்தா அம்மா கோபம் போய்விடும் என்று முத்து சொன்னதும் விஜயா கோபப்படுகிறார்.

மீனா சொன்ன விஷயம்

பிறகு முத்து செல்வதை கேட்டு கோபத்தில் விஜயா நகையை எடுத்துக் கொள்வது போல நடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதைத்தொடர்ந்து மீனாவும், முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா காதலிக்கும் விஷயத்தை பற்றி மீனா சொல்ல முத்து அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+