சிறகடிக்க ஆசையில் இன்று: சுய ரூபத்தை காட்டிய மனோஜ்.. ரோகிணிக்கு தெரிய வந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவிடம் ரோகிணிக்கு சப்போர்ட்டாக மனோஜ் பேசுகிறார். அதே நேரத்தில் மனோஜ் உடைய மாற்றத்தை பார்த்து விஜயா கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் காய்ச்சலில் துடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ரோகிணி மருந்து மாத்திரை கொடுத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கிறார். இப்போ பரவாயில்லையா என்று ரோகிணி கேட்டதும், இப்போ பரவால்ல ரோகிணி படுத்துக்கோ என்று மனோஜ் சொன்னதும் ரோகிணி தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்க நீ என்கிட்ட கடைசிவரை பேசமாட்டே என்று நினைத்தேன், ஆனா நீ என்கிட்ட பேசுனது எனக்கு சந்தோஷம் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபத்தில் ஸ்ருதி

மறுநாள் காலையில் ஸ்ருதி கோபமாக இருக்கும்போது ரவி அவரிடம் பேச வருகிறார். அப்போது ரெஸ்டாரண்டில் என்னை ஒருத்தங்க கிண்டல் பண்றாங்க அவங்கள நான் பழிவாங்க தான் அப்படி செஞ்சேன். ஆனால் நீ கிண்டல் பண்ணவங்களை பத்தி எதுவுமே கேட்கலையே என்று சொல்ல, அதற்கு ரவி நீ என்கிட்ட அந்த விஷயத்தை முதலில் சொல்லியிருக்கணும் என்று சொன்னதும், என்னை ஒருத்தன் ஹராஸ் பண்ண வந்தா நான் நீ எங்க இருக்கன்னு தேடி வந்து உன் பின்னாடி நிக்கணுமா? பொண்ணுங்களுக்கு எதுவும் யோசிக்க கூடாது என்று கோபப்படுகிறார்.

மன்னிப்பு கேட்ட ரவி

அந்த நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது ரவி ஸ்ருதி செய்தது தப்பு என்று சொல்லிக்கொண்டு கோபமாக கிளம்புகிறார். அப்போது அவருடைய ஓனர் நீத்து போன் பண்ணுகிறார். ஸ்ருதி இருக்காங்களா என்று கேட்க, பக்கத்தில் தான் இருக்காங்க என்று சொன்னது போனை ஸ்பீக்கரில் போட சொல்லி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்கிறார். நான் அந்த சம்பவம் நடந்த போது ஒரு ஓனரா நடந்து கொண்டேன் என்னை மன்னிச்சிடுங்க, இனி இதுபோல நடக்காது. கஸ்டமர் நமக்கு தேவையில்லை என்று நீத்து சொல்கிறார்.

தவிக்கும் மீனா

அதற்கு ஸ்ருதி நீங்கள் ஆவது புரிஞ்சிக்கிட்டீங்களே அதுவரைக்கும் போதும் என்று சொல்லி போனை வைத்ததும் ரவி ஸ்ருதி இடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு உன்னுடைய ஓனர் மன்னிப்பு கேட்டதும் நீ கேட்கிறாயா என்று சொல்லி கோபப்பட பிறகு இருவரும் சமாதானம் ஆகிறார்கள். அடுத்ததாக முத்து வீட்டிற்கு வரவில்லை என்பதால் மீனா அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து முத்து இன்னும் வீட்டுக்கு வரலையா எங்க போனான் என்று விசாரிக்கிறார்.

கோபப்படும் முத்து

அப்போது சவாரிக்கு போய் இருப்பார் என்று மீனா சொல்ல, நீ போன் பண்ணி கேட்டு பாரு என்று அண்ணாமலை சொன்னதும் மீனா போன் செய்கிறார். போனை எடுத்ததும் நான் சவாரிக்கு வந்து இருக்கிறேன் என்று கட் பண்ண போகிறார். அப்போது மீனா மாமா கேட்டாங்க என்று சொன்னதும் சொல்லிரு என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் மீனா கோபமாக இருக்கிறார். மறுநாள் காலையில் ரோகிணி சமைத்துக் கொண்டிருக்கிறார்.

ரோகிணிக்கு கிடைத்த ஐடியா

அப்போது அங்கு வரும் மீனா உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நானே செஞ்சு தரேன்னு சொல்ல, ஆமா நான் சொன்னா மட்டும் நீங்க செஞ்சுடுவீங்க என்று குத்தலாக பேசுகிறார். பிறகு இந்த வீட்டில் வந்த நாளிலிருந்து என்ன மட்டும்தான் அத்தை அசிங்கப்படுத்திட்டு இருந்தாங்க என்று மீனா பேச வரும்போது, ரோகிணி இப்போ என்னையும் அதேபோல பண்றதை பார்த்து உங்களுக்கு சந்தோஷமா இருக்கா என்று திமிராக பேசுகிறார்.

மீனா கொடுத்த ஐடியா

அப்போதும் திருந்தாத மீனா அவரிடம் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல வந்தேன். நீங்க பார்வதி அத்தை கிட்ட பேசினீங்கன்னா அவங்க நம்ம அத்தை கிட்ட பக்குவமா எடுத்து சொல்லி அவங்களோட மனசை மாத்துவாங்க என்று சொல்ல தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே வருகிறார். அந்த நேரத்தில் காபி கேட்டேன் இன்னும் போடலையா என்று விஜயா கிச்சனை எட்டி பார்க்க ரோகிணி சமைத்துக் கொண்டிருக்கிறார்.

கோபப்பட்ட விஜயா

நீ யாருக்காக காலையில் கஞ்சி வைக்கிற என்று விஜயா சத்தம் போடும்போது உங்க பையனுக்கு தான் காய்ச்சல் அதனாலதான் கஞ்சி வைக்கிறேன்னு சொல்ல உடனே விஜயா மனோஜ் ரூமுக்கு போகிறார். அங்கு அவரிடம் காய்ச்சல்னா எனக்கு சொல்லி இருக்கலாமே என்று கேட்டுக்கொண்டு எதனால் காய்ச்சல் வந்தது என்று விசாரிக்க அதற்கு மனோஜ் ஒருவேளை நான் ரோகிணி கிட்ட பேசாததால் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ என்று கேட்கிறார். இதனால் விஜயா கோபப்படுகிறார்.

விஜயா சொன்ன விஷயம்

ரோகிணி ஏமாற்றியதை நான் மன்னிக்க மாட்டேன். நீ அவளோட புருஷன் அவ உன்னை எவ்வளவு ஏமாற்றி இருக்கா? அதை நீ மன்னிக்க கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மனோஜ் ரோகிணிக்கு சப்போர்ட் செய்து கொண்டே இருக்கிறார். பிறகு அண்ணாமலை ஹாலில் இருக்கும் போது விஜயா ஹாலில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வீட்டிற்கு வருகிறார்.

அண்ணாமலை கேட்ட கேள்வி

முத்துவை பார்த்ததும் நைட்டு ஏன் வரல என்று அண்ணாமலை விசாரிக்க நீங்க குடிச்சிட்டு வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கீங்கல்ல அதான் அவன் வீட்டுக்கு வரலையா இருக்கும் என்று விஜயா நக்கல் செய்கிறார். ஆனால் முத்து நான் சவாரி இருந்து அதனால் தான் போயிட்டேன் என்று சொல்ல வீட்டில் உன் பொண்டாட்டி தேடிட்டு இருப்பா என்ற அக்கறை இருக்கா என்று அண்ணாமலை கேட்க வீட்டில இவ மூஞ்சை பார்க்க முடியாம தான் அவன் அங்கேயே இருக்கான் என்று விஜயா கவுண்டர் கொடுக்கிறார். அதனால் முத்து நீ ஆரம்பத்தில் இதனால் தான் நைட்டு ட்ரெயின் ஓட்ட போனியாப்பா என்று முத்து கேட்க விஜயா கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+