சிறகடிக்க ஆசை: மீனாவுக்கு விழுந்த அடி.. முத்துக்கு தெரிய வந்த உண்மை.. சிந்தாமணி ஆட்டத்துக்கு முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா சூழ்ச்சியால் சிந்தாமணியின் ஆட்கள் மீனாவிடமிருந்து பணத்தை பறித்து செல்கிறார்கள். இதனால் மீனாவுக்கு அடிபடுகிறது. இதுவரைக்கும் கோபமாக இருந்த முத்து மீனாவுக்காக ஓடி வந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து வந்ததும் அண்ணாமலை இனிமே நைட் வேலைக்கு எல்லாம் போகாத என்று அட்வைஸ் செய்கிறார். பிறகு முத்துவிடம் மீனா சாப்பிடவாங்க என்று கூப்பிட, அதற்கு முத்து நான் சாப்பிட்டு வந்துட்டேன் என்று முகத்தை திருப்பி கொள்கிறார். இதனால் மீனா அண்ணாமலையிடம் எனக்கு பணம் கிடைச்சுட்டு, பணத்தை மண்டபத்தில் கொடுத்துட்டு வந்துடுறேன் என்று மீனா சொல்லிவிட்டு கிளம்பும்போது முத்து இவளுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்.

முத்துக்கு வந்த சந்தேகம்
மீனாவும் அண்ணாமலையும் பேசுவதை எல்லாம் விஜயா கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா வெளியே சென்றதும் இதை எப்படியாவது சிந்தாமணி கிட்ட சொல்லணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி மண்டபத்து ஆர்டர் எனக்கு வேண்டும் என்று மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் அப்படி கொடுக்க முடியாது அவங்களும் வரட்டும் அவங்க பணம் ரெடி பண்ணிட்டாங்கன்னா ரெண்டு பேருடைய பெயரையும் குலுக்கி போட்டு யார் பெயருக்கு வருதோ அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
விஜயா செய்த சூழ்ச்சி
அந்த நேரத்தில் விஜயா போன் போட்டு மீனா பணத்துடன் அங்கே வருகிறார் என்று சொன்னதும் சிந்தாமணி தன்னுடைய அடியாள்களை அனுப்பி மீனாவிடமிருந்து பணத்தை பிடுங்கி விட வேண்டும் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் மீனா ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ரிப்பேர் ஆகி விடுகிறது. அதனால் மீனா ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருக்கும்போது சிந்தாமணியின் ஆட்கள் மீனாவிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு பைக்கில் சென்று விடுகிறார்கள்.
பணத்தை இழந்த மீனா
மீனா எவ்வளவோ போராடியும் அவர்கள் கீழே தள்ளிவிட்டு போய்விடுகிறார்கள். இதனால் மீனாவின் கையில் அடிபட்டு விடுகிறது. பணத்தை இழந்ததை நினைத்து நடுரோட்டில் நின்று மீனா அழுது கொண்டிருக்கும் போது அவருடன் வேலை பார்க்கும் பெண்கள் வருகிறார்கள். அவர்கள் என்னவென்று விசாரிக்கிறார்கள் அவர்களிடம் மீனா நடந்ததை சொல்கிறார்.
சிந்தாமணிக்கு கிடைத்த ஆர்டர்
அப்போது மீனாவின் கைகளில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் ஹாஸ்பிடலுக்கு முதலில் போகலாம் என்று கூட்டி செல்கிறார்கள். மறுபக்கத்தில் சிந்தாமணி ஆட்கள் மீனாவிடம் பணத்தை திருடிய விஷயத்தைச் சொன்னதும் சிந்தாமணி சந்தோஷப்பட்டு மண்டபத்துக்காரரிடம் மீனா இனி வரமாட்டா என்று சொல்லி ஆர்டர் வாங்கி விடுகிறார்.
ஓடி வந்த முத்து
அந்த நேரத்தில் முத்து பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். மீனாவை பார்த்ததும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று சொன்னவுடன் நான் கார் எடுத்துட்டு வந்துட்டேன் என்று சொன்னதும் மீனா இது சீதா சேர்த்து வைத்த பணத்தை கொடுத்து அது போதாது என்று அவளோட பிரண்டு கிட்ட கடன் வாங்கி பணம் கொடுத்து இருக்கா, இப்போ எல்லாரையும் நான் ஏமாத்திட்டேன் என்று அழுது கொண்டிருக்கிறார்.
அழுது கொண்டிருக்கும் மீனா
பிறகு முத்து மீனாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். மீனா கையில் கட்டு போட்டு இருப்பதை பார்த்ததும் குடும்பத்தினர் எல்லோரையும் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார்கள். அப்போது வண்டியில் போகும் போது கீழே விழுந்துட்டேன் என்று சொல்கிறார். அண்ணாமலை பைக்ல போகும்போது கவனமா போயிருக்கலாம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
விஜயாவின் திமிர் பேச்சு
அப்போது விஜயா இந்த சின்ன அடிக்கு குலுங்கி குலுங்கி அழுதுகிட்டு இருக்க என்று திட்டி கொண்டு இருக்க அதற்கு முத்து மீனா பைக்கில் போகும்போது கீழ விழலப்பா ஆட்டோவில் தான் போய் இருக்கா என்று சொன்னதும் மனோஜ் அப்போ ஆட்டோ கவிழ்ந்துவிட்டதா என்று கேட்க முத்து மனோஜை அடிக்க போகிறார். எல்லோரும் தடுத்ததும் மீனா பணத்தைக் கொண்டு போகும்போது ரவுடிகள் பணத்தை திருடி கொண்டு போனதை பற்றி முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications