சிறகடிக்க ஆசை: க்ரிஷின் எதிர்காலம்? ரோகிணி எடுத்த முடிவு - விஜயாவை மிரட்டும் கும்பல்! இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஜூலை 25ஆம் தேதிக்கான எபிசோட் கிருஷ்ஷின் எதிர்காலம் குறித்து ரோகிணி மற்றும் அவருடைய அம்மாவுக்கு விவாதம் வருகிறது, விஜயாவை மிரட்டும் மர்ம நபர்கள் குறித்த பரபரப்பான திருப்பங்களும் அரங்கேறின.

இன்றைய எபிசோடின் துவக்கத்தில், மீனா, கிருஷ்ஷை அவனது பாட்டியிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று முத்துவிடம் கூறுகிறார். ஆனால், விஜயா வழக்கம் போல் மீனாவிடம், "வேற வேலை இல்லையா? நீங்கள் போங்க" என்று கடுமையாகப் பேசுகிறார். பின்னர், ரோகிணி சும்மாதான் இருக்கிறாள், அவளே கிருஷ்ஷை அழைத்துச் சென்று வரட்டும் என்றும், ரோகிணியிடம் "இந்த பையனை கூட்டிட்டுப் போய் ஒழிச்சிட்டு வா" என்றும் பேசுகிறார். விஜயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த அண்ணாமலை, "என்ன பேசணும்னு யோசிச்சு பேசு. ஒரு குழந்தையை இப்படி வச்சுக்கிட்டு தான் பேசுவியா?" என்று கண்டிக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

குடும்பத்தின் குழப்பம்

முத்துவும் தனது அம்மாவிடம், "சின்ன வயசுல என்கிட்ட எப்படிப் பேசினீர்களோ, அதே மாதிரி பேசாதீங்க. அந்த வலியெல்லாம் நான் தாங்கிக் கொண்டேன், இவன் தாங்க மாட்டான்" என்று உருக்கமாகக் கூறுகிறார். இதற்கிடையில், பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை, அவரைச் சென்று பார்த்து வரச் சொல்கிறார்கள். அப்போது கிருஷ், "பாட்டி சாமிகிட்ட போயிடுவாங்களா தாத்தா?" என்று கேட்க, அண்ணாமலை அவனைக் கடிந்து கொள்கிறார்.

ரோகிணி, "நானே கிருஷ்ஷைக் கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வரேன். நீங்கள் ஆன்ட்டி (ரதி) விஷயத்தைப் பாருங்கள்" என்று சாமாதானம் செய்கிறார். மீனா சமையலறைக்குச் செல்ல, முத்து அவரிடம், "முதலில் அந்தப் பையனை (ரதியின் காதலனை) பற்றித் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறுகிறார். அதற்கு மீனா, பார்வதியிடம் பேசி அவன் நம்பரையும், முகவரியையும் வாங்குவதாகச் சொல்ல, முத்து, "சூப்பர் மீனா! வாங்கி வை. அதுக்குள்ள நான் அந்தப் பையனை எப்படி மீட் பண்றதுன்னு யோசிக்கிறேன்" என்று கூறுகிறார்.

ரோகிணியின் கவலை

ரோகிணி மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, டாக்டர் இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். இந்த நிலையில், கிருஷ், "எனக்கு அந்த வீட்டில் இருக்குறது ரொம்ப புடிச்சிருக்கு பாட்டி. அங்க எல்லாரும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. தாத்தா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தராரு, ஐஸ்கிரீம் வாங்கித் தராரு" என்று சந்தோஷமாகப் பேசுகிறான். மேலும், "நீங்களும் அங்க வந்துடுங்க. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்" என்று கேட்க, ரோகிணி, "அப்படி எல்லாம் பேசாதே" என்று அவனைத் தடுக்கிறார்.

கிருஷ்ஷின் மகிழ்ச்சி

அதற்கு ரோகிணியின் அம்மா" அவன் இவ்வளவு நாள் தனிமையில் இருந்துவிட்டான் இப்போது சொந்தங்களைப் பார்த்தவுடன் சந்தோஷமா இருக்கான்" என்று சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால், ரோகிணி, "ஏற்கனவே என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்க. இதைப் பத்தி தெரிஞ்சா என்னை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க. மனோஜ் எப்படி எடுத்துப்பான்னு கூட தெரியாது" என்று தனது கவலையை வெளிப்படுத்துகிறார். பின்னர், "சரி, நீ பயப்படாதே ரோகிணி. எனக்கு கொஞ்சம் சரியானதும் நான் கிருஷ்ஷைக் கூட்டிட்டுப் போயிடுறேன்" என்று அம்மா அவரிடம் கூறுகிறார்.

விஜயாவை சூழ்ந்த ஆபத்து

மறுபக்கம், முத்து கிருஷ்ஷுக்கு பள்ளி சீருடை அணிவித்து தயார் செய்ய, மீனா சாப்பாடுப் பையை எடுத்துக் கொண்டு வருகிறார். அண்ணாமலை வேலைக்குக் கிளம்ப, ஸ்ருதி கிருஷ்க்கு சாக்லேட் கொடுக்கிறார். அனைவரும் கிருஷ்ஷிடம் சந்தோஷமாகப் பேசுவதைப் ரோகிணி பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவருக்கும் 'பாய்' சொல்லிவிட்டு கிருஷ் கிளம்ப, விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

பின்னர், மனோஜ் ரோகிணியை அறைக்கு அழைத்துச் சென்று, "முதலில் இந்தப் பையனை (கிருஷ்) வீட்டை விட்டுத் துரத்தி விடு. அப்பதான் அம்மா சமாதானமாவாங்க" என்று சொல்ல, ரோகிணி, "முதலில் ஆன்ட்டி (ரதி) பிரச்சனையைத் தீர்க்கப் பார்க்கலாம்" என்று பேச்சை மாற்றி விடுகிறார். அனைவரும் வெளியில் சென்றுவிட, விஜயா மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறார். அப்போது பார்வதி மற்றும் சிந்தாமணி இருவரும் வந்து விஜயாவைச் சந்தித்தனர்.

பார்வதி, "அந்த ரதியோட வீட்டிலிருந்து வந்து உன்னை மிரட்டுனாங்கன்னு கேட்டவுடனே பதறிப் போயிருச்சு" என்று சொல்கிறார். சிந்தாமணியும் விஜயாவை பயமுறுத்தும் விதமாக, "அவர்கள் சும்மா இருக்க மாட்டாங்க. கொலை கூட பண்ண தயங்க மாட்டாங்க. உஷாரா இருங்க" என்றெல்லாம் பேசுகிறார். அதோடு நீங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க என்று கூப்பிட்டதும் ரவி அவங்களுக்கு வீடு இருக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் அவங்க இங்கேதான் இருப்பாங்க என்று சொல்கிறார்.

அப்போது சிந்தாமணி மீனாவை வம்பு இழுப்பது போல பேசிக் கொண்டிருக்க ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் மீனாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். இதனால் சிந்தாமணி மீனாவை ஏத்தி விடுவது போல பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதை தொடர்ந்து ஸ்ருதியின் அம்மாவும் வந்து விஜயாவிடம் உங்க டான்ஸ் கிளாஸில் இரண்டு பேரு தப்பு பண்ணிட்டாங்கலாமே என்று கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+