சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா! முத்து செய்த செயல்.. கோபத்தில் மீனா! அதிர்ச்சியில் ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2025 ஜூலை 28ஆம் தேதிக்கான எபிசோடில், ரதி தீபன் கல்யாணத்தை நடத்துவதற்காக முத்து மீனா இரண்டு குடும்பத்தினரை சம்மதிக்க வைக்கின்றனர். அதே நேரத்தில் நல்லது சொன்ன சந்திராவை விஜயா திட்டிய அவமானப்படுத்துகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் அலட்சியம்

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ் கட்டிப் போடப்பட்ட நிலையில், "ரொம்ப வலிக்குது ரோகிணி, அவிழ்த்து விடு!" என்று கெஞ்சுகிறார். ஆனால் ரோகிணி, "என்ன, தலைகீழாக கட்டிப்போட்டுட்டாங்களா? என்ன பண்றது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. மசாஜ் பண்றேன்," என்று அலட்சியமாகப் பேசுகிறார்.

முத்துவின் ஆக்‌ஷன்

வெளியில் தகராறு சத்தம் கேட்கவே, ரோகிணி, "என்னவென்று போய் பார்!" என்று மனோஜிடம் சொல்கிறார். அதற்குள் முத்து, தீபனை அழைத்து வந்து குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருக்க, இரு குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கோபத்தில் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் இரு குடும்பத்தினரையும், முத்து தன் குரலை உயர்த்தி அமைதிப்படுத்துகிறார். "இப்ப எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க? அவங்க வீட்ல இருந்து வந்துகிட்டு இருக்காங்க, பொறுமையாக பேசலாம்," என்று சொல்லி அனைவரையும் சமாதானப்படுத்துகிறார்.

மீனாவின் சரியான வாதம்

தீபன் குடும்பத்தினர், "இவன் எங்களோட குழந்தையை ஏமாத்திருப்பான்!" என்று குற்றம் சாட்ட, மீனா குறுக்கிட்டு, "உங்க பொண்ணு ஒன்னும் குழந்தை கிடையாது. அவ வயித்துல குழந்தை இருக்கு. இரண்டு பேரு மீதும் தப்பு இருக்கு. நீங்க எப்படி ஒருத்தர மட்டும் தப்பு சொல்ல முடியும்? அவங்க வீட்ல வந்தவங்ககிட்ட பேசுங்க," என்று அறிவுரை கூறுகிறார். கொஞ்ச நேரத்தில் தீபனின் உறவினர்களும் வந்துவிட, அடிதடியில் இறங்கத் தயாராகின்றனர்.

முத்துவின் மிரட்டல்

நிலைமை மோசமாவதைக் கண்ட முத்து மீண்டும் கத்தி அனைவரையும் அமைதிப்படுத்துகிறார். "இப்போது நீங்கள் பேசுறீங்களா இல்ல போலீசை கூப்பிடவா? அவங்க கூப்பிட்டா இரண்டு பேரும் மேஜர்கள். கல்யாணம் பண்ணி வச்சுட்டுப் போயிட்டே இருப்பாங்க. இல்லைனா என் பொண்டாட்டி கல்யாணம் பண்ணி வச்சிருவா. அவளுக்கு இதுல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு!" என்று கோபத்துடன் சொல்ல, மீனா அவரை முறைக்கிறார்.

"இவங்களைப் பற்றி மட்டும் பேசுங்க," என்று முத்து சொன்னதும், மனோஜ் என்ன நடக்கிறது என்று கேட்க, "இரண்டு பேரை சமாதானப்படுத்தி வைக்கப் பார்க்கிறாங்க," என்று பதில் வருகிறது. முத்து இரு குடும்பத்தாரிடமும், "இரண்டு குடும்பமும் பேசுங்க. அதுக்கப்புறம் எல்லாம் முடிவு எடுக்கறதுன்னு பார்த்துக்கொள்ளலாம்," என்று சொல்ல, இரண்டு குடும்பத்தினரும் மேலே சென்று பேசுகின்றனர்.

விஜயாவின் மண்சோறு பிரார்த்தனை

மறுபக்கம், விஜயா மற்றும் பார்வதி இருவரும் கோவிலில் மண்சோறு சாப்பிட ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சாப்பிட உட்காருகின்றனர். "இதைச் சாப்பிட்டால் என் பிரச்சனை தீர்ந்துவிடுமா?" என்று விஜயா கேட்க, "அப்படித்தான் அந்தச் சிந்தாமணி சொன்னாங்க, சாப்பிடுவோம்!" என்று பார்வதி சொல்கிறார்.

சந்திரா மாலையுடன் வந்து பூசாரியிடம் கொடுத்துவிட்டு, "அவர்களோட வேண்டுதலைச் சிறப்பாகப் பண்ணி கொடுங்க," என்று சொல்கிறார். அதற்கு பூசாரி, "அவங்க மீனாவைத் திட்டினாலும், நீங்கள் அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க, ரொம்பச் சந்தோஷம்," என்று சொல்கிறார்.

சந்திரா விஜயாவிடம் வந்து, "சாதாரணமான விஷயத்துக்கு மண்சோறு சாப்பிட மாட்டாங்க. தீராத பிரச்சனைக்குத்தான் சாப்பிடுவாங்க. அப்படி உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்க, பார்வதி, "டான்ஸ் ஸ்கூல்ல ரதி," என்று ஆரம்பிக்க, சந்திராவிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என விஜயா தடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

"என்ன நடந்தால் உங்களுக்கு என்ன? நான் கஷ்டப்படுறது சந்தோஷமா? நீங்களும் உங்க பொண்ணும் போனில் சிரிச்சு பேசணும் அப்படித்தானே?" என்று சந்திரா கேட்க, "அப்படியெல்லாம் இல்லம்மா. நம்ம வீட்ல கஷ்டமா இருக்கும்போது நாங்க எப்படி சந்தோஷப்படுவோம்? என்ன பிரச்சனை?" என்று சந்திரா விடாமல் கேட்கிறார். "பிரச்சனை பண்ணினால் பலிக்காது. உனக்குத் தெரியாதா? கோயில் வாசலில் தானே இருக்கீங்க, இதுகூட புரிஞ்சுக்க மாட்டீங்களா? எதுக்கு வந்தீங்க? பூ கொடுக்கத்தானே வந்தீங்களா? போய் உங்க வேலையை பாருங்க!" என்று விஜயா திட்டி அனுப்பி விடுகிறார்.

சமாதானத்தில் இரு குடும்பத்தினர்

மறுபக்கம், இரு குடும்பத்தினரின் சம்மதத்திற்காக முத்துவும் மீனாவும் காத்துக் கொண்டிருக்க, இரு குடும்பத்தினரும் சமாதானமாகி 'சம்பந்தி' என்று பேசி வருவதைப் பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். "நீ ரொம்ப பெரிய விஷயம் பண்ணி இருக்க முத்து," என்று சொல்ல, "உட்கார்ந்து பேசினால் நாட்டுப் பிரச்சனையே தீரும், வீட்டுப் பிரச்சினை தீராதா சார்?" என்று முத்து சாமர்த்தியமாகப் பேசுகிறார். பிறகு அனைவரும் முத்துவை பாராட்டிப் பேசிவிட்டு, உடனே மனோஜ் பக்கம் வருகின்றனர். "நீ இப்படி இருக்க, ஆனா உங்க அண்ணன் வேற மாதிரி நடந்துக்கிறார்," என்று மனோஜிடம் சொல்கிறார்கள். "என் அண்ணனா? என்ன பண்ணான்?" என்று மனோஜ் கேட்க, அவரை அழைத்துச் சென்று ரூமில் காட்டுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+