சிறகடிக்க ஆசை: வித்யாவை வைத்து ரோகிணி பற்றி மீனா கண்டுபிடிக்கும் அடுத்த உண்மை.. விஜயா எடுத்த அதிர்ச்சி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே இரண்டாம் தேதிக்கான எபிசோடில் வித்யாவை வைத்து ரோகிணி பற்றிய அடுத்த உண்மைகளை மீனா கண்டுபிடிக்க இருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி விஷயத்தில் விஜயா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி பார்வதி வீட்டிற்கு வந்து விஜயா தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் தான் ஏதாவது அத்தைகிட்ட சொல்லணும், என்னை புரிஞ்சிக்க சொல்லுங்க என்று சொல்ல உன்மேல எனக்கும் கொஞ்சம் கோபம் இருந்துச்சு ஆனா நீ மனோஜுக்காக தான் இப்படி எல்லாம் பண்ணி இருக்க, விஜயாவிடம் யாரு என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டா என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

விஜயா எடுத்த முடிவு
அந்த நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க விஜயாவா தான் இருக்கும் நீ இந்த ரூமுக்குள் இருந்துக்க என்று ரோகிணியை ரூமுக்குள் இருக்க வைத்துவிட்டு பார்வதி கதவை திறக்க, அங்கு வீட்டு வாசலில் விஜயா நின்று கொண்டிருக்கிறார். நீ சொன்ன சாமியாரை பாக்கணும் என்று சொல்ல, எதற்கு என்று பார்வதி கேட்டதும் ரோகிணியை என்னுடைய மகன் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமா பிரிக்கணும். அதனால் வசியம் செய்து எவனுடைய மகன் மனசை மாத்தி வேற பணக்கார பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல இதையெல்லாம் கேட்டு ரோகிணி கோபத்தில் இருக்கிறார்.
பார்வதி சொன்ன வார்த்தை
அந்த நேரத்தில் பார்வதி விஜயாவிடம் தன்னுடைய வீட்டில் கரண்ட் வேலை செய்யல என்று ஏதேதோ கதையை அளந்து விஜயாவை அனுப்பி வைக்கிறார். பிறகு ரோகிணி வந்து எனக்கும் அந்த சாமியாருடைய அப்பாயின்மென்ட் வேணும் எங்க அத்தை ஏதாவது பண்ணுனா எனக்கு பழிக்காமல் இருக்கணுமே அதுக்காக என்று சொல்லுகிறார். பார்வதி சரி ரெண்டு அப்பாயின்மென்ட் வாங்கிறேன் என்று சொல்கிறார்.
மீனா பார்த்த நபர்
மறுபக்கத்தில் மீனா பூ கொடுப்பதற்காக ஒரு கடைக்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி மனோஜை ஏமாற்றிய ப்ரோக்கர் ஒருவரிடம் அட்ரஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அவரை மீனா பார்த்து விடுகிறார். அந்த கடைக்காரர் மீனாவிடம் மாலை பற்றி பேசிக்கொண்டே இருக்கும் போது அவரிடம் பேசிவிட்டு திரும்பும் நேரத்தில் ப்ரோக்கர் காணாமல் போய்விடுகிறார்.
வீடு வாங்கும் முருகன்
மறுபக்கத்தில் வித்யாவை முருகன் வந்து சந்தித்து நான் உங்களுக்காக ஒரு புது வீடு வாங்க போறேன். அந்த வீட்டிற்கு நாளைக்கு நீங்க வந்து பாக்கணும் உங்களுக்கு பிடித்திருந்தால் அதை வாங்கலாம் என்று சொல்கிறார். முதலில் வேண்டாம் என்று வித்யா சொல்கிறார். பிறகு சரி என்று சொல்கிறார். ஆனால் நான் வரும்போது நம்முடைய காதலுக்கு சப்போர்ட் செய்த என் பிரண்டை கூட்டிட்டு வருவேன் என்று வித்யா சொல்கிறார்.
புரோக்கரை பார்த்த மீனா
அதேபோல முருகனும் எனக்கு சப்போர்ட் செய்த என்னுடைய அண்ணனை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் முருகன் மனோஜ் ஏமாற்றிய புரோக்கரை வந்து சந்திக்கிறார். அவரிடம் தான் வீடு வாங்குவதற்காக முருகன் பேசி வைத்திருக்கிறார். அவரை முருகன் பைக்கில் ஏற்றி செல்ல மீனா அந்த நேரத்தில் புரோக்கரை தேடிக் கொண்டிருக்கிறார்.

மீனா கேட்ட கேள்வி
பிறகு புரோக்கரை காணாமல் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் வித்யா போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார். மீனா அங்கு போனதும் முருகன் புதியதாக ஒரு வீடு வாங்க போகும் விஷயத்தை சொல்லி நாளைக்கு நீங்களும் என்கூட வரணும் என்று கூப்பிடுகிறார். மீனா சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு நீங்க ரோகணியையும் கூப்பிடுங்க என்ன இருந்தாலும் அவங்க தானே உங்களுடைய ஃப்ரெண்ட் ,ஆனா நீங்க அவங்க பற்றிய உண்மைகளை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்களே என்று கேட்க வித்யா அதிர்ச்சியாகிறார்.
சமாளித்த வித்யா
இதை பற்றி பேச மாட்டாங்கன்னு பார்த்தா பேசிட்டாங்களே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவ இதை பற்றி சொல்லாதனு அத்தனை முறை சொன்னா அதனாலதான் சொல்லல. நானும் பல முறை சொல்லணும்னு நெனச்சேன். ஆனா ரோகிணிக்கு பிரச்சனை வந்துடும்னு தான் சொல்லல என்று சொல்ல ரோகிணி பற்றிய ரகசியம் இது மட்டும்தான் இருக்கிறதா? இல்லை இன்னும் ஏதாவது மறைச்சி இருக்காங்களா? என்று கேட்க வித்யா அதிர்ச்சி ஆகிறார்.

சண்டை போடும் ரோகிணி
பிறகு ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். அதை மட்டும் தான் அவ உங்ககிட்ட மறைச்சிருக்கா வேற ஒன்னும் இல்ல என்று சொல்லி விடுகிறார். பிறகு மீனா அங்கிருந்து கிளம்பியதும் ரோகினி வித்யா வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா அங்கிருந்து போவதை பார்த்து வித்யாவிடம் வந்து சண்டை போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications