சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு ஆப்பு வைத்த ஸ்ருதி.. முத்து குடும்பத்திற்கு வரும் உறவு.. மகிழ்ச்சியில் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 5ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவிடம் பிரச்சனை செய்த ட்ராபிக் போலீசுக்கு சீதா உதவி செய்கிறார். அதே நேரத்தில் மீனாவிற்கு ஸ்ருதி திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி மற்றும் ரவியின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடகர் பாட்டு பாட அங்கிருந்த முத்து மீனா, ரவி சுருதி மற்றும் மனோஜ் ரோகிணி என எல்லா ஜோடிகளும் தங்களுடைய காதலை கண்களால் பகிர்ந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து அண்ணாமலை மற்றும் விஜயாவிற்காக பழைய பாடல் ஒன்று பாடப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும் தங்களுடைய காதலை பகிர்ந்து வெட்கப்படுகிறார்கள்.

பிறகு எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா தான் செய்த பொக்கே எடுத்து ரவி மற்றும் ஸ்ருதிக்கு கொடுக்கிறார்கள். அதைப் பார்த்து அழகாக இருக்கிறது என்று ஸ்ருதி பாராட்டுகிறார். அந்த நேரத்தில் ரவியின் ஓனர் நீத்து வருகிறார். அவரைப் பார்த்ததும் ரவி வரவேற்கிறார்.
உங்களுக்கு காலில் அடிபட்டிருக்கும் நேரத்தில் எதற்காக வந்தீங்க என்று கேட்கிறார். அப்போது ஸ்ருதியிடம் எனக்கு காலில் அடிபட்டிருந்ததால் தான் ரவி என்னை தூக்கினாரு என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி எல்லாம் தெரியும். நான் இப்போ ரவியை புரிஞ்சுகிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் தனியாக நின்று ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் பிரச்சனை செய்வதற்காக பேச வருகின்றனர். ஆனால் முத்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் எந்த பிரச்சனையும் செய்ய வரல இப்போ சாப்பிட போறேன் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து எல்லோரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது விஜயா டான்ஸ் ஆடுனதால கால் வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவி மற்றும் ஸ்ருதி வருகிறார்கள். அப்போது ஸ்ருதியிடம் அண்ணாமலை நீ ரொம்ப நேரமா காணலையே எங்க போயிருந்தா என்று விசாரிக்க, ஸ்ருதி என்ன நடந்தது என்று உண்மையை சொல்ல வருகிறார்.
அப்போது முத்து நான் கூட தான் வேலை இருக்குன்னு திடீர்னு வீட்ல சொல்லாம கிளம்பி போயிடுவேன். அதுபோல பல குரல் வேலை இருக்குன்னு போயிருந்தாலும் டைமுக்கு வந்துடுச்சு இல்ல என்று சொன்னதும் ஸ்ருதி ரவியிடம் நல்லவேளை நான் உண்மையை உளற பார்த்தேன் முத்து காப்பாத்திட்டாரு என்று சொல்கிறார். பிறகு தான் மீனாவிற்கு ஒரு செல்போன் வாங்கி இருக்கிறேன் என்று அதை கொடுக்கிறார்.
எங்களுடைய திருமண நாள் பங்க்ஷன் நல்லபடியாக நடக்க காரணமே நீங்க தான் என்று ஸ்ருதி சொன்னதும் விஜயா இவளுக்கு இது எல்லாம் எதுக்கு என்று கோபப்படுகிறார். அதற்கு ஸ்ருதி அவங்களோட பிசினஸ் வளருவதிற்கு இது யூஸ்ஃபுல்லா இருக்கும் மீனாவுடைய குணத்துக்கு டைமண்ட் கூட வாங்கிக் கொடுக்கலாம் என்று சொல்ல சொல்ல முத்து எனக்கு கூட மீனாவுக்கு போன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோணல பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மனோஜ் ரோகிணியிடம் நாம தங்கத்தில் மோதிரம் வாங்கி கொடுத்தோம் நமக்கு ஒரு கிப்ட் கூட தரல இவங்களுக்கு மட்டும் போன் கொடுத்திருக்காங்க என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு முத்துவிடம் பிரச்சனை செய்த ட்ராஃபிக் போலீஸ் தன்னுடைய அம்மாவோடு வருகிறார்.

அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அங்கு டாக்டர் அட்மிட் ஆகி ட்ரிப் போடணும் என்று சொல்கிறார். அப்போது போலீஸ் ஆபீசருக்கு போன் வந்து கொண்டே இருக்கிறது இதனால் என்ன பண்ண என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது சீதா உங்களுடைய நிலைமை எனக்கு தெரியுது நீங்க வேலைக்கு போயிட்டு வாங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார். போலீஸ் ஆபீஸர்க்கு சீதா மீது ஃபீலிங் வருகிறது.
சீரியல் டீச்சரையே நிஜத்தில் திருமணம் செய்த விஜய் டிவி நடிகர்.. மணப்பெண் கூட இந்த சன் டிவி நடிகை தான்
அடுத்ததாக வித்யாவும் ரோகிணியும் சிட்டியை சந்தித்து பேசுகின்றனர். அப்போது ரோகிணி முத்து போனில் இருந்து சத்யாவின் வீடியோவை லீக் செய்தது நீங்கதான் என்று சந்தேகப்படுறான் என்று சொல்ல, அதற்கு சிட்டி எனக்கு ஏற்கனவே தெரியும் அவனுக்கு என் மேல தான் சந்தேகம் வரும் என்று, அவனுக்கு இருக்கிற எதிரி நான் தானே!
அதனால் அவன் என்னைதான் சந்தேகப்படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் சிட்டியின் அடியாள் ஒருவன் சத்யா உன்னை பத்தி விசாரிச்சான் நீ தான் அந்த வீடியோவை லீக் பண்ணுனியான்னு என்கிட்ட விசாரிச்சான் என்று போட்டுக் கொடுக்க, அதற்கு சிட்டி அந்த சத்யாவை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.
சிறகடிக்க ஆசையில் பெரிய சம்பவம் இருக்கு! சிட்டியோடு ரோகிணி போட்ட பிளான்.. இவங்க ஆபத்து தான்!
சத்யா ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சனையில் மாட்ட இருந்தான். அப்போ நான் தான் அவனை காப்பாத்தி விட்டேன் ஆனால் இப்போ என்கிட்ட அவன் தப்பிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு வித்யாவிடம் அந்த சத்யா என்கூட இருக்கிற வரைக்கும் கணக்கை சரியா பார்த்துட்டு இருந்தான். இப்போ கணக்கு பார்க்க எனக்கு ஆள் இல்ல. அதனால நீ வேலைக்கு வா என்று சொல்ல, அதற்கு வித்யா நான் ஐடி எம்ப்ளாயி நான் உன்கிட்ட வேலைக்கு வரணுமா? என்று கோபப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications