சிறகடிக்க ஆசை: அருண் பற்றி கான்ஸ்டபிள் சொன்ன உண்மை.. அண்ணாமலை கேட்ட கேள்வி! முத்து எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோடில் அருண் பற்றிய சில ரகசியங்களை கான்ஸ்டபிள் முத்துவிடம் சொல்கிறார். அதை வைத்து முத்து மீண்டும் குடும்பத்தில் பிரச்சனை செய்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதாவை டாக்டர் செக் பண்ணிவிட்டு அவருக்கு நெஞ்சுவலி வந்துடும் அளவிற்கு அவருக்கு பிபி இருக்கிறது என்று சொன்னதும், அதைக் கேட்டு மீனாவும் இந்திராவும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்போதைக்கு இந்த மாத்திரை கொடுக்கிறேன் சரியா பாத்துக்கோங்க என்று டாக்டர் போனதும், வெளியே வரும் மீனா நாம தான் சீதாவின் இந்த நிலைமைக்கு காரணம் என்று சொன்னதும், என்னடி இப்படி சொல்லுற என்று சந்திரா கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனா சொன்ன வார்த்தை

சந்திரா கேட்ட கேள்விக்கு மீனா, அவ விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியலையே? நீ அந்த அருணை பத்தி என்னம்மா நினைக்கிறா? என்று மீனா கேட்டதும்,அந்த பையனை பார்க்க நல்ல பையனா தான் இருக்கான். ஆனா மாப்பிள்ளைக்கு பிடிக்கலையே என்று சீதா அம்மா சொல்ல, அவரும் இவரும் மாறி மாறி பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க அதனால சீதா வாழ்க்கை தான் கேள்விக்குறியா இருக்கு என்று மீனா பீல் பண்ணுகிறார்.

ரோகிணியின் பிளான்

மறுபக்கத்தில் ரோகிணி மனோஜ்க்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கும் போது விஜயா அதை பார்த்து கடுப்பாகிறார். பிறகு மனோஜிடம் நீ ஷோரூம் போகலையா என்று கேட்க, மனோஜ் பேசுவது விஜயாவிற்க்கு புரியாமல் இருக்கிறது. அதனால் ரோகிணி இதை தனக்கு சாதகமாக்கி கொண்டு என்னால் இந்த நிலைமையில் எப்படி ஷோரூமுக்கு போக முடியும்? ரோகிணியும் வரவேண்டும் என்று சொன்னதாக ரோகிணி சொல்ல அதை நம்பாத விஜயா மனோஜிடம் இப்படியா சொன்ன என்று கேட்டதும் மனோஜ் ஆமாம் என்று தலையை ஆட்டுகிறார்.

கோபத்தில் முத்து

அடுத்ததாக மீனாவிடம் அண்ணாமலை சீதாவுக்கு இப்ப எப்படி இருக்கு என்று கேட்டதும் விஜயா அவளுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை அவளுக்கு ஏதோ உடம்பு சரி இல்லை அதுதான் கேட்டேன் என்று சமாளித்து விஜயாவை அனுப்புகிறார். பிறகு விஜயா போனதும் முத்து மனசு மாறுனானா? என்று கேட்க, அவர் அப்படியேதான் இருக்கிறார் மாமா என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை பஞ்சாயத்து

பிறகு அண்ணாமலை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் மீனா நீங்க ஹோட்டலில் சாப்பாடு வாங்கினா அதை எதுக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வரீங்க? அங்க வச்சி சாப்பிட வேண்டியதுதானே என்று கேட்க உன்னை வெறுப்பேத்த தான் எடுத்துட்டு வந்தேன். என்னை நீ சத்தம் போடக்கூடாது என்று வெளியே அனுப்பினாளா? என்று சொன்னதும் உங்களை மட்டும் இல்லை அவரையும் தான் வெளியே அனுப்பினோம் என்று மீனா சொல்கிறார்.

அருண் பற்றி தெரிந்த உண்மை

என்னை திட்டி அனுப்பிட்டு அவனை சமாதானமா அனுப்பி வெச்சீங்களா? என்று முத்து கேட்கிறார். அதற்கு இருங்க நான் மாமா கிட்டயே பேசுகிறேன் என்று மீனா அண்ணாமலையை கூப்பிட, முத்து வா கேப்போம் என்று அண்ணாமலையிடம் வந்து தன்னுடைய காரை எடுத்து சென்று கையில் அடிபட்ட கான்ஸ்டபிளுக்கு தான் சாப்பாடு வாங்கி கொடுத்ததும் அவர் அருண் பற்றி சொன்ன விஷயங்களை சொல்கிறார்.

மாட்டிக்கொண்ட மீனா

அதாவது அருணுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்பதால் மேல் அதிகாரியை கட்டம் கட்டி பழிவாங்கி விட்டார் என்று கான்ஸ்டபிள் சொன்னதாக சொல்லி இப்ப சொல்லுங்கப்பா பழி வாங்குறது, இந்த ஈகோ புடிச்ச ஆளுக்கு எப்படி சீதாவை கட்டி வைக்கிறது என்று கேட்கிறார். அதற்கு மீனா அவரிடம் சில தப்பான குணம் இருந்தாலும் எனக்கு அந்த பூ ஆர்டருக்கு சீதாவுக்கு ஒரு லட்சம் இவர்தான் கொடுத்தார் என்று சொல்கிறார். அதைக்கேட்டு முத்து கோபம் அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+