சிறகடிக்க ஆசை: விஜயா நாடகத்தை கண்டுபிடிக்கும் முத்து! ரோகிணி கேட்ட கேள்வி! அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: விஜய் டிவியில் நம்பர் 1 தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இன்றைய எபிசோடில் விஜயாவின் திடீர் மாற்றம், குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில், சீதாவை ஏற்க மறுத்த விஜயா, தற்போது அவருக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த முன்வந்தது, அனைவரையும் நெகிழ்ச்சியடையவும் சந்தேகம் அடையவும் செய்துள்ளது.

Siragadikka aasai serial vijay tv

மீனாவின் மனதில் இருந்த தயக்கம்

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மீனாவின் அம்மா, சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு மீனாவை அழைக்க வருகிறார். "அங்கே உனக்கு மரியாதை இருக்காது," என்று மீனா தயங்க, அவரது அம்மா, "அவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா? நீ கோபப்படாமல் இரு," என்று சமாதானம் செய்கிறார். வீட்டுக்கு வந்து எல்லோர் நலத்தையும் விசாரித்த அவர், சீதாவிற்குத் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடத்த இருப்பதாகச் சொல்கிறார். அப்போது விஜயா, எங்க நடத்த போறீங்க நக்கலாகப் பேச, அண்ணாமலை, "எனக்கு அன்னைக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டும், இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன். நான் இல்லை என்றாலும் என் உங்க வீட்டின் மூத்த மருமகளாகவும் இந்த வீட்டின் மகனாகவும் முத்து வந்து நிற்பான் அதோடு மீனா வருவாள் ரவி, மனோஜ், ரோகினி என எல்லோரும் வருவார்கள்," என்கிறார்.

விஜயாவின் மனமாற்றம்

அப்போது விஜயா, "ஏன், நான் வந்து நடத்தக்கூடாதா?" என்று கேட்கிறார். இதைக் கேட்டு, மீனா முதற்கொண்டு, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். விஜயா, "நான் நன்றாகப் பேசி சமாளிக்கிறார் அதை பார்த்து, மனோஜ், "ஒருவேளை பழசை மறந்துவிட்டாரோ?" என்று கேட்கிறார். விஜயா, பார்வதியையும் வரச் சொல்ல, அனைவரும் சம்மதிக்கின்றனர். மீனா, "விஜயாவின் இந்த மாற்றத்தைக் கண்டு" மகிழ்ச்சியடைகிறார். ஆனால் ரோகிணி உங்க அம்மா எப்படி இப்படி மாறிட்டாங்க என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சீதாவின் வீட்டில் விஜயா

அடுத்ததாக எல்லோரும் சீதா வீட்டிற்குச் செல்கின்றனர். அப்போது விஜயாவும் பார்வதியும் ஆட்டோவில் வருகின்றனர். பார்வதி விஜயாவிடம் உன்னுடைய மாற்றம் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு என்று சொல்ல நீ இத்தனை வருஷமா என் கூட இருந்த உனக்கு என்ன பத்தி தெரியலையா? நான் அந்த டாக்டர் பட்டம் வாங்குவதற்காக தான் இப்படி எல்லாம் நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். நீ அந்த வீட்டுக்கு போனதிலிருந்து வீடியோ எடுத்துட்டு இரு என்று சொல்கிறார்.

பிறகு சீதா வீட்டிற்கு வந்த விஜயா, மீனாவின் தோழிகளிடம் அழகாகக் கொஞ்சிப் பேசுகிறார். பின்னர், சீதாவிற்குத் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்க, விஜயா சீதாவை உச்சி முகர்ந்து கொஞ்ச, அதை எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்க்கின்றனர். விஜயா அனைத்து சடங்குகளையும் செய்ய, அதை பார்வதி வீடியோவாகப் பதிவு செய்கிறார். விஜயா, பாசமாகப் பேசுவதை யாரும் நம்பாமல் இருக்கின்றனர். இதைக் காணும் மீனா, விஜயாவின் மனமாற்றத்தால் நெகிழ்ந்துவிடுகிறார். ஆனால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.

விஜயாவின் இந்த திடீர் மாற்றம் உண்மையா? அல்லது இதற்குப் பின் வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா? என்று முத்துவும் ஸ்ருதியும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் விஜயா பற்றிய உண்மை எப்படி குடும்பத்திற்கு தெரிய போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+