சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு மீண்டும் பிரச்சனை! அடித்து உதைத்த முத்து.. மனம் மாறிய மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 8ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து சிட்டியின் ஆட்களை அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் ஷோரூமில் இருக்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு சாமியார் மனோஜ்க்கு திருநீறு வைத்துவிட்டு ஒரு பார்சலை கொடுத்துவிட்டு போகிறார். அதை பார்க்கும்போது மனோஜ்க்கு ரோகிணி போல தெரிகிறது. கடைசியில் சாமியார் என்று தெரிந்ததும் மனோஜ் ஃபீல் பண்ணுகிறார். மறுபக்கத்தில் முத்து கார் ஓட்டி கொண்டு போகும்போது காரில் இரண்டு நபர்கள் வருகிறார்கள்.

காருக்குள் வாக்குவாதம்
அவர்கள் கார் சிறிது தூரம் போனதும் மது குடிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இதனால் முத்து கோபமாகி என்னுடைய காருக்குள் வைத்து யாரும் குடிக்க கூடாது இறங்குங்கடா என்று ரோட்டில் ஒரு பக்கத்தில் காரை நிறுத்தி மிரட்டி இறங்க வைக்கிறார். அப்போது அவர்கள் நாங்கள் சிட்டி உடைய ஆள்கள் என்று திமிராக பேச, உடனே முத்து எனக்கும் சிட்டியை தெரியும் நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கணும் வாங்க இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று அந்த நபர்களை மீண்டும் காரில் ஏற்றுக்கொண்டு போகிறார்.
இது தப்பான செயல்
அடுத்ததாக சிட்டியின் ஆட்கள் சத்யாவை இழுத்துக்கொண்டு சிட்டி முன்பு வந்து விடுகிறார்கள். இதனால் சத்யா கோபப்பட்டு சிட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நான் படிச்சு நல்ல வேலைக்கு போகணும் எதுக்குடா இன்னும் இங்க கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்கும் போது, நீ இங்க கணக்கு சரியா பார்த்திட்டு இருந்த அதற்குப் பிறகு யாராலும் உன்னை மாதிரி கணக்கு பார்க்க முடியல.
சிட்டிக்கு விழுந்த அடி
நீ இங்கே வேலைக்கு சேர்ந்துரு. வேற இடத்துக்கு வேலைக்கு போனா எப்படி சம்பளம் தருவாங்களோ அதையே தந்துவிடுவேன் நீ வேற எதுவும் பார்க்க வேண்டாம் கணக்கு மட்டும் பாரு என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு சத்யா முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சிட்டி மிரட்டி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து அங்கு வருகிறார்.
மிரட்டிய முத்து
முத்து சிட்டியின் ஆட்களை சிட்டி முன்பு அடித்து உதைத்து அவரை மிரட்டுகிறார். பிறகு சத்யாவிடம் எதுக்குடா இங்க வந்து இருக்க என்று கேட்க, அதற்கு சத்தியா இவனுக தான் என்னை தூக்கிட்டு வந்துட்டானுங்க. இவன் கூட மீண்டும் வேலை பார்க்கணும்னு மிரட்றான் என்று சொல்ல, அதற்கு முத்து சிட்டியிடம் இதுக்கு மேல என் குடும்பத்து மேல கை வச்சா நான் எப்படி மாறுவேன்னு எனக்கே தெரியாது என்று மிரட்டி விட்டு போகிறார்.
காதலை சொன்ன வித்யா
மறுபக்கத்தில் ரோகிணி வித்யாவுக்கு போன் பண்ணி வீட்டில் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முருகன் அங்கு வருகிறார். தனக்கு பிறந்தநாள் என்று முருகன் கேக் கொண்டு வர அப்போது அந்த கேக்கை வெட்டும்போது தன்னுடைய காதலை வித்யா தெரிவிக்கிறார். இதனால் முருகனும் சந்தோஷப்படுகிறார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கேக்கை பூசி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அசிங்கப்படுத்தும் ஸ்ருதி
அடுத்ததாக ரோகிணி கிச்சனில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஸ்ருதி என்ன ஆச்சு நீங்க சமைக்க வந்திருக்கீங்க என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். மீனா வந்து நீங்க இதுவரைக்கும் சமைக்க மாட்டீங்களே நானே சமைக்கிறேன் என்று சொல்ல, அத்தை என்னதான் சமைக்க சொல்லி இருக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி சிரித்துக்கொண்டே இருக்கிறார். நீங்க இதுவரைக்கும் அத்தையின் ஃபேவரைட் மருமகளா இருந்தீங்க இப்போ சாப்பாடு செய்யும் மருமகளா மாறிட்டீங்க என்று சொல்ல, ரோகிணி கோபத்தில் உச்சத்துக்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications