சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு கிடைத்த சரியான தண்டனை.. மக்கு மீனாக்கு இது தேவையா? அண்ணாமலை ஓவரா போறாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 21 ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவை ரோகிணி கொலை பண்ண பார்த்த விஷயம் மீனாவின் தோழிகளுக்கு தெரிந்து அவர்கள் ரோகிணியை கடத்திக்கொண்டு போய் தர்ம அடி கொடுத்து இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து வீட்டில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சத்யா மீனாவின் தோழிகள் எல்லோரிடமும் வீட்டில் நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்கிறார். ரோகிணி இதுவரைக்கும் அண்ணாமலை வீட்டிற்குள் செய்த சூழ்ச்சிகள், முத்துவின் கார் வயரை கட் பண்ணி விட்டு அவரை கொலை பண்ண பார்த்தது, அப்புறம் அவருடைய செல்போனை திருடி தன்னுடைய வீடியோவை லீக் பண்ணியது, வீட்டில் இருந்து பணத்தை திருடியது என எல்லா உண்மைகளையும் சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அப்போது மீனாவின் பிரண்ட்ஸ் எல்லோரும் முத்து அண்ணனை எப்படி அவ கொலை பண்ண பார்ப்பா? அவளை ஒரு வழி பண்ணனும் என்று சொல்ல, அதற்கு மீனா விடுங்க இது மட்டுமா பண்ணுனா அம்மாவோட கடையையும் காலி பண்ணுனது அவதான் என்று புலம்புகிறார். அதனால் பிரண்ட்ஸ் எல்லோரும் கோபத்தில் உச்சிக்கு போய் ரோகிணியை ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து ரோகிணியின் அம்மா கிரிஷை ஸ்கூலில் விட்டு விடு என்று சொல்கிறார். அதற்கு ரோகிணியும் சரி என்று கிளம்பும்போது அவருக்கு ஒரு மெயில் வருகிறது. அதை பார்க்கும்போது மனோஜ் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைய அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கிறார். நான் உனக்கு பார்த்து வச்ச வாழ்க்கையும் நல்லா இல்ல, இப்ப நீயை அமைச்சுக்கிட்ட வாழ்க்கையும் இல்லாமல் போச்சே என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணி என்னுடைய வாழ்க்கையை விட மாட்டேன். எப்படியாவது மனோஜை என்கிட்ட வர வைப்பேன் என்று சபதம் போடுகிறார். அதை தொடர்ந்து கிரிஷை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகிறார். அப்போது ஸ்கூலுக்கு வந்த கிரிஷ் நாம எப்போ அம்மா மீனா ஆன்ட்டி வீட்டுக்கு போவோம் என்று கேட்க, அதற்கு ரோகிணி அது மீனா ஆன்ட்டி வீடு இல்ல நம்முடைய வீடும் தான். நாம சீக்கிரமா போவோம்.

Siragadikka Aasai serial Vijay TV

இல்லன்னா டாடி நம்ம கூட வந்துருவாரு, நீ எதையும் யோசிக்காம நல்லா படிக்கணும் என்று சொல்லி கிரிஷை அனுப்பி வைக்கிறார். அப்போது அங்கு வந்த மீனாவுடைய பிரண்ட்ஸ் எல்லாரும் முத்து அண்ணணை கொல்ல பார்த்த.. வண்டியில ஏறு என்று மிரட்டுகின்றனர். அதோடு நாங்க உங்க வீட்டுக்கு வரும்போது எங்களை எவ்வளவு அசிங்கப்படுத்துன, ஆனால் நீ உன் புருஷனை ஏமாத்திட்டு இருந்திருக்கிற.. ஏமாற்றுக்காரி என்று சொல்ல ரோகிணி கோவப்பட்டு திட்டுகிறார் .

ஆனால் மீனாவின் தோழிகள் ரோகிணியை அடிக்க பாய்ந்து மிரட்டி வண்டியில் ஏற்றி போகின்றனர். போகிற வழியில் ரோகினியை எல்லோரும் சேர்ந்து போட்டு அடிக்கின்றனர். பிறகு முத்து கார் செட்டுக்கு கொண்டு போகின்றனர். இதற்க்கிடையே முத்துவுக்கு போன் செய்து மீனாவையும் அதே இடத்திற்கு வர சொல்கின்றனர்.

இதனால் முத்துவும், மீனாவும் என்ன விஷயமாய் இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகிணியை அங்கு கூட்டிக்கொண்டு வர, அதை பார்த்து மீனாவும் முத்துவும் அதிர்ச்சியாகி ஏன் இப்படி பண்ணுனீங்க என்று கேட்கின்றனர். அதற்கு மீனாவின் தோழிகள் உங்களை கொல்ல முயற்சி பண்ணுனவளை நாங்க சும்மா விட மாட்டோம் என்று ரோகிணியை மன்னிப்பு கேட்க சொல்கின்றனர்.

அடுத்ததாக கார் செட்டுக்கு வந்த முருகனும் வித்யாவும் நாங்க அறுபடை வீட்டுக்கு போகிறோம், செய்த பாவத்தை கழிக்க போறோம் என்று சொல்கின்றனர். உடனே முத்து அவ செஞ்ச பாவத்துக்கு நீ என்ன பண்ணுவ, சரி பார்த்து போயிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். மறுபக்கத்தில் அடி வாங்கிய கையோடு மனோஜை பார்க்க போகும் ரோகிணி மனோஜின் மனதை மாற்ற பார்க்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ஆனால் மனோஜ் எதற்கும் மனம் இறங்காதவனாகவே பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவும் மீனாவும் தான் என்னை அடிச்சிட்டாங்க என்று மீண்டும் பொய் சொல்லி அழுகிறார். அதற்கு மனோஜ் நீ என் தம்பியை கொல்ல பார்த்திருக்கிற, உனக்கு எப்படி அந்த அளவுக்கு மனசு வந்துச்சு? எனக்கு அவனை பிடிக்காது ஆனா அவன் சாகணும்னு நினைச்சதே கிடையாது.

நீ இனிமேல் என் வாழ்க்கையில் வராத, இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா நானும் சேர்ந்து அடிச்சிடுவேன் போயிரு என்று விரட்டி விடுகிறார். அடுத்ததாக மனோஜ் வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னதும் அண்ணாமலை கோபத்தில் இருக்கிறார். அப்போது முத்து மீனா வர அவர்களை திட்டுகின்றார்.

கடைசியில் முத்துவும் மீனாவும் இதற்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்கின்றனர். இவ்வளவு நடந்தும் இப்படி பொய் சொல்லிட்டு அலைகிறா என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு விஜயா நீங்க அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்கள் ஆள்களை வைத்து அடித்து இருக்கீங்க. அது சரி, ஆனா எனக்கும் தெரிஞ்சிருந்தா நானும் சேர்ந்து அடித்திருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+