சிறகடிக்க ஆசை: சொந்த வீட்டுக்கே துரோகம் செய்த விஜயா! குடும்பத்தை பிரியும் ஸ்ருதி, முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு குடும்பத்திற்கு தெரியாமல் விஜயாவும் மனோஜும் சேர்ந்து பெரிய பிரச்சனையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் நீத்து செய்த சூழ்ச்சியால் ரவியை ஸ்ருதி பிரிந்து இருக்கிறார். இவர்கள் பிரச்சனையில் முத்து மீனா தலையிட்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையே இப்போது நீத்துவால் புது பிரச்சனையும் வந்திருக்கிறது. ரவியை நான் லவ் பண்ணுகிறேன் என்று நீத்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போட, அதை பார்த்து கோபமான ஸ்ருதி பிரச்சனை செய்திருந்தார்.
ஆனால் நீத்து நான் ரவியை உண்மையாக லவ் பண்ணுகிறேன் அவன் என்னை லவ் பண்ணவில்லை என்றால் எனக்கு பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார்.

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவி நீத்து சொன்ன பேச்சைக் கேட்டு அதிர்ச்சியாகி எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு எதற்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நீத்து நான் உங்களை காதலிக்க சொல்லல, உங்க மேல எனக்கு காதல் இருக்கின்றது என்று சொல்றேன் என சொன்னதும் ஸ்ருதி கடுப்பாகி அவரை அடிக்கப் போகிறார்.
உடனே ரவி வேண்டாம் என்று தடுக்கிறார். இதனால் கோபமான நீத்து வெளியே கிளம்புகிறார். அடுத்து அதை தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும் சண்டை போட்டுக் கொண்டே வெளியே வருகின்றனர். அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றனர். அவர்கள் நடக்கும் பிரச்சனையை பார்த்து பதறிப் போய் ரவியிடம் என்ன ஆச்சுடா என்று கேட்க, அப்போது ரவி நடந்த விஷயத்தை சொன்னதும் மீனா கோபமாகி நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் நீத்துவை அடித்திருப்பேன் என்று சொல்கிறார்.
பிறகு ஸ்ருதியை சமாதானம் செய், நாங்க நீத்து கிட்ட பேசுறோம் என்று முத்து ரவியை அனுப்பி வைக்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் கார் செட்டுக்கு வர வைத்து பேசுகின்றனர். அப்போதும் நீத்து நான் ரவியை காதலிக்கிறேன். அவர் ரொம்ப நல்லவரா இருக்கிறார் அதனால் அவர் மேல எனக்கு காதல் வருகிறது அவ்வளவுதான் என்று திமிராக பேச, அதற்கு முத்துவும் மீனாவும் அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு இப்ப உங்களால ரவி ஸ்ருதி இடையே பிரச்சனை வந்து இருக்கு என்று சொல்ல அதற்கு கேட்டு நீத்து மனதிற்குள் சிரிக்கிறார்.
ரவியிடம் சொன்னது போலவே முத்துவிடமும் நான்தான் ரவியை காதலிக்கிறேன்னு சொல்றேன், அவர் என்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தல என்று சொன்னதும் மீனா ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சதுல இருந்துதான் இவ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க என்று மீனா சொல்கிறார். அதற்கு நீத்து அவங்க தொடங்கினது ஒரு ரெஸ்டாரண்ட் தான் ஆனா என்கிட்ட 20 பிரான்ச் இருக்கு, ரெஸ்டாரண்டுக்காக என்னுடைய காதலை வெளிப்படுத்தவில்லை நீங்க யாரு நினைச்சாலும் நான் ரவியை காதலிக்கிறதை தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதனால் முத்துவும் மீனாவும் கடுப்பாகி இந்த பிரச்சனையை வேற மாதிரி தீர்க்கணும் என்று சொல்கின்றனர். மறுபக்கத்தில் மனோஜியும் விஜயாவும் ஷோருமில் இருக்கின்றனர். அப்போது சிந்தாமணியும் பைனான்ஸியரும் அங்கு வந்து மனோஜ் கடனை கொடுப்பதற்கு டைம் கொடுப்பதாக சொல்கின்றனர்.
அதோடு விஜயாவின் வீட்டு பத்திரம் பேங்கில் இருப்பதை திருப்புவதற்காக செக்கை கொடுக்கின்றனர். பைனான்சியர் விஜயாவிடம் நீங்கள் அந்த பத்திரத்தை கொடுத்தால் மட்டும் போதும் அப்புறம் உங்களுக்கு பணம் எப்ப வருகிறதோ அப்போ அதை கொடுத்து வாங்கிக்கலாம் என்று சிந்தாமணி விஜயாவை சிக்க வைக்க பார்க்கிறார்.
அதைக்கேட்டு விஜயாவும் மனம் மாறுகிறார். ஆனாலும் பத்திரத்தை பேங்கில் இருந்து கொண்டுட்டு வர வேண்டும் என்றால் என் புருஷன் கையெழுத்து போடணுமே அதற்கு என்ன பண்ண என்று விஜயா கேட்க, அதற்கு மனோஜ் அப்பா கையெழுத்தை நானே போடுறேன் என்று சொன்னதும் சிந்தாமணி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications