சிறகடிக்க ஆசை: நீலாம்பரியாக வந்த ரோகிணி.. விஜயாவுக்கு கிடைத்த அவமானம்! மீனா பிளான் இப்படி ஆகிடுச்சே
சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோடில், மீனாவுக்கு பெரிய பூ ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. அதற்காக அபார்ட்மெண்ட் வாசலில் பூக்கடை ஒன்றை திறக்க முடிவு செய்கிறார்.
இந்த கடை திறப்பு விழாவுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அழைக்கிறார். அதே நேரத்தில், ஸ்ருதியையும் அழைத்து வர வைத்து, ரவி - ஸ்ருதி இடையிலான பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதும் மீனாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பார்வதி வீட்டில், பார்வதி மற்றும் சிவன் இருவரும் வீட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிந்தாமணியும் விஜயாவும் அங்கு வந்து அதைப் பார்க்கிறார்கள். இதை பார்த்த விஜயா கோபமடைந்து, இப்படி கூத்தாடிக் கொண்டிருக்கிறீர்களே என திட்டுகிறார். அதற்கு, நாங்கள் சந்தோஷமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? எதற்காக தவறாக பேசுற என்று பார்வதி பதிலடி கொடுக்கிறார்.
அப்போது விஜயா, நீத்து ஏற்படுத்திய பிரச்சனையால் ரவி, ஸ்ருதி இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்கிறார். இதைக் கேட்ட சிந்தாமணி, உங்கள் வீட்டுப் பிரச்சனைகளுக்கே ஒரு தனி கோர்ட் நடத்தலாம் போல இருக்கிறது என்று கிண்டலாக பேசுகிறார்.
சிந்தாமணி கிண்டல்
பின்னர் விஜயாவிடம், இதெல்லாம் கண் திருஷ்டி காரணமாக இருக்கலாம் என்றும், வீட்டில் பூஜை செய்தால் சரியாகிவிடும் என்றும் சிந்தாமணி கூறுகிறார். விஜயாவும் அதற்கு சரி என்று ஒத்துக்கொள்கிறார். அதே சமயம், மீனாவின் பூ ஆர்டர் குறித்து பேசும் போது, அந்த ஆர்டரை தான் எடுக்காமல் விட்டது தன் மகளால் ஏற்பட்ட பிரச்சனை தான் என்றும், விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சிந்தாமணி கூறுகிறார்.
மீனாவின் பூக்கடை திறப்பு விழா
அதன்பின்னர் மீனாவின் பூக்கடை திறப்பு விழா நடைபெறுகிறது. உறவினர்கள் ஒருவருக்கொருவர் வரத் தொடங்குகிறார்கள். அங்கு ரவி, ஸ்ருதி எப்படியாவது வருவாள், அவளிடம் பேசிவிடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். ஆனால் ஸ்ருதி வராமல், மீனாவுக்கு வீடியோ கால் செய்து, தன் ரெஸ்டாரண்டுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு வர உள்ளதால், தன்னால் கடை திறப்பு விழாவுக்கு வர முடியாது என்று தெரிவிக்கிறார்.
அதற்குப் பிறகு ஒரு கார் வந்து மீனாவின் பூக்கடை முன் நின்று விடுகிறது. காரிலிருந்து ரோகிணி இறங்கி வருகிறார். அவரைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். விஜயா, இங்கே ஏன் வந்தாய் என்று கேட்க, மீனா அழைக்கவில்லை, நானே வந்தேன் என்று ரோகிணி கூறுகிறார். மேலும், மீனாவுக்கு பூ ஆர்டர் கொடுத்த மேனேஜர் தான் தன்னை வரச் சொன்னதாகவும், ஹோம் அப்ளையன்ஸ் தொடர்பான ஆர்டரை மீண்டும் பெற்றுள்ளதாகவும் ரோகிணி தெரிவிக்கிறார்.
இதன் மூலம், இனி மனோஜ் உடன் பிசினஸ் பார்ட்னராக இணைந்து வேலை செய்ய இருப்பதாக ரோகிணி கூற, அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இதையடுத்து அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications