சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு கெடு விதித்த மீனா.. இனி அடுத்த சம்பவம் ரெடி! முத்து கண்டுபிடிக்கும் உண்மை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், 2026 ஜனவரி 5ஆம் தேதிக்கான எபிசோடில், கிரிஷ் சம்பந்தமான சந்தேகம் முத்து மற்றும் அண்ணாமலைக்கு அதிகரித்து இருக்கிறது அதனால் மீனா ரோகிணியை மிரட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்
கிரிஷ், தன் அம்மா இறந்த துக்கம் எதுவுமே இல்லாமல் ஜாலியாக இருப்பது அண்ணாமலைக்கும் முத்துவுக்கும் முதல் சந்தேகமாகிறது. அதிலும், அவன் மனோஜை "அப்பா" என அழைப்பதும், அவன் அம்மா உயிரோடு இருப்பது போலவே நடந்து கொள்வதும், இந்த விவகாரத்தில் ஏதோ பெரிய உண்மை மறைக்கப்படுகிறது என்ற சந்தேகம் முத்துவுக்கு வருகிறது.

இதை அண்ணாமலையிடமும் அவர் பகிர, "யாரோ சொல்லிக் கொடுத்து தான் இவன் இப்படிச் செய்கிறான்" என்ற முடிவுக்கு முத்து வருகிறார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மீனா அந்த சந்தேகத்தை தற்காலிகமாக டைவர்ட் செய்து விடுகிறார்.
இந்நிலையில், கிரிஷின் பாட்டி எப்போது வருவார் என்று விசாரிக்குமாறு அண்ணாமலை மீனாவிடம் கேட்கிறார். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் மீனா, மேலே சென்று ரோகிணியிடம் நேரடியாக பேச முடிவு செய்கிறார்.
ரோகிணிக்கு 7 நாள் அவகாசம்
கிரிஷின் பாட்டியிடம் பேசுவதாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்ற மீனா, ரோகிணியை போனில் பேசி மேலே வரவைத்து, "எப்போ உண்மையை சொல்லப் போற?" என்று நேரடியாகக் கேட்கிறார். அதற்கு, கிரிஷுக்கு மனோஜுடன் நல்ல பாண்டிங் வந்த பிறகு தான் உண்மையை சொல்ல முடியும் என ரோகிணி பதிலளிக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த மீனா, "அவ்வளவு நாள் பொறுத்திருக்க முடியாது" என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி, "அம்மாவை வரச் சொல்லி, கிரிஷை கூட்டிட்டு போக சொல்கிறேன்" என சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், கடைசி வரை உண்மையை சொல்லும் எண்ணமே உனக்கு இல்லை என புரிந்து கொண்ட மீனா, இனி உனக்கு 7 நாள் தான் டைம். அதற்குள் உண்மையை சொல்லாவிட்டால், நானே எல்லாருக்கும் சொல்லிவிடுவேன் என கட் அண்ட் ரைட் ஆக பேசி விடுகிறார்.
ரோகிணிக்கு அதிர்ச்சி
பின்னர் கீழே வரும் மீனாவிடம், கிரிஷ் பாட்டியிடம் பேசினியா? என அண்ணாமலை கேட்கிறார். இதற்கு, மீனா பேசினதாக பொய் சொல்லி, "ஊரில் சொத்து பிரச்சனை முடியல. இன்னும் 7 நாளில் வந்துடுவேன் என்று சொன்னாங்க" என சமாளிக்கிறார்.
இதற்கிடையே, ரூமில் இருக்கும் ரோகிணியிடம், "இன்னும் 7 நாள் தான் இருக்கு" என மனோஜ் சொல்வது, அவருக்கு தூக்கி வாரிப்போட வைக்கிறது. மீனா சொன்ன கெடு எப்படி மனோஜுக்குத் தெரிந்தது என்ற குழப்பத்தில் இருக்கும் ரோகிணி, அது அவர்களின் ஷோரூம் ஆண்டு நிறைவு இன்னும் 7 நாளில் முடிவடைவதாக சொன்னதால்தான் என தெரிந்து சற்று நிம்மதி அடைகிறார்.
இந்த "7 நாள்" விஷயம் வீடு முழுக்க ஒரு விதமான கனெக்ஷனாக மாறுகிறது. ஸ்ருதி - ரவி, தங்களது ரெஸ்டாரண்ட் தொடங்கி 100 நாள் நிறைவடைய இன்னும் 7 நாள் இருப்பதாக பேச, மீனாவும் "7ந் தேதி என்னோட அம்மாவுக்கு பிறந்தநாள்" என சொல்லி விடுகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
முத்து, "சரி நம்ம கிஃப்ட் வாங்கிட்டு போகலாம்" என சொல்ல, மறுநாள் மீனாவும் முத்துவும் அவரது அம்மா வீட்டுக்கு சென்று சேலையை பரிசாக கொடுக்கிறார்கள். அங்கு சீதா - அருண் எண்ட்ரி கொடுத்து, சேலையுடன் சேர்த்து கம்மலும் கிஃப்டாக வழங்க, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
ஆனால், இந்த சந்தோஷ தருணத்துக்குள் கூட பிரச்சனை புகுந்து விடுகிறது. ரோகிணியின் தோழி மகேஸ்வரி, மீனாவுக்கு போன் செய்து, 7 நாள் கெடு விதித்த முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி பேசுகிறார். ஆனால், "இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று மீனா தெளிவாக சொல்லி போனை வைக்கிறார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி திக்குமுக்காடி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications