சிறகடிக்க ஆசை: ரோகிணியை வீட்டை விட்டு துரத்தியதும், மீனாவை மாட்டி விட்டுட்டாரே! முத்து எடுத்த அதிர்ச்சி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில், ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் ரோகிணி குடும்பத்திடன் சிக்கியது கனவா? அல்லது நிஜமா? என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் கடைசியில் அது நிஜம் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது. ரோகிணியை வீட்டை விட்டு விஜயா அடித்து துரத்தி இருக்கிறார். அதனால் ரோகிணி போகிற போக்கில் மீனாவை மாட்டி விட்டு விட்டு போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிந்ததும் முத்து குடும்பத்திடம் வந்து சொல்ல, அதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது ஸ்ருதி ரோகினியோட மகன்தான் இந்த கிரிஷ் என்றால் அப்போ அவங்களோட ஹஸ்பண்ட் என்று கேட்க, அவங்க ஹஸ்பண்ட் கல்யாணம் ஆன ஏழு மாசத்துல ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு அதற்கு பிறகு தான் அதையெல்லாம் மறைச்சு மனோஜ் கல்யாணம் பண்ணி இருக்கா, என்று முத்து சொல்ல விஜயா இது எல்லாம் உண்மையா என்று ரோகினியை போட்டு அடிக்கிறார்.

உன்னை போய் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி அவன் வாழ்க்கையே கெடுத்துட்டேனே. நீ இத்தனை நாளா எங்க கிட்ட நடிச்சி ஏமாத்திட்டு இருந்திருக்கிறாயே.. உன்ன மாதிரி எந்த பொம்பளையும் இருக்கவே முடியாது. எத்தனை பொய் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க ரோகிணி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜயா சமாதானம் ஆகவில்லை.
உடனே அண்ணாமலையிடம் சென்று மன்னிப்பு கேட்க, அண்ணாமலை ஏற்கனவே நீ பணக்கார பொண்ணு இல்லை என்ற உண்மை தெரிஞ்சதுமே, வேற பொய் சொல்லி இருக்கியானு கேட்டேனே.. அப்போ கற்பூரம் அடிச்சு இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்னு சொன்னியே அப்புறம் கூட இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வைத்திருக்க என்று கோபப்படுகிறார்.
பிறகு ரோகிணி மனோஜிடம் போய் பேச, மனோஜ் ரோகிணியை போட்டு அடித்து, இத்தனை நாளா நான் தான் புத்திசாலின்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீ என்னை இப்படி ஏமாத்தி வச்சிருக்க, ரெண்டு வருஷமா பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்க என்று அடிக்க, அதற்கு ரோகிணி உன் கூட உண்மையா வாழ்ந்தேன். உன்னை தான் லவ் பண்ணுனேன் அதனால தான் எல்லா உண்மையும் சொல்லல என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.
ஆனாலும் விஜயா கேட்காமல் ரோகிணியை பிடித்து வெளியே தள்ள சொல்கிறார். ரோகிணி எவ்வளவோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னாலும் விஜயா கேட்கவில்லை. அவ கழுத்தில் இருக்கும் தாலியை பிடிங்கிட்டு வெளியே தள்ளு என்று சொல்ல, மனோஜ் இனி வா சம்பந்தமா எந்த பொருளும் எனக்கு வேண்டாம். அந்த தாலி கூட எனக்கு தேவையில்லை என்று ரோகினியை பிடித்து வெளியே இழுத்து விடுகிறார்.
போகிற போக்கில் ரோகிணி மீனாவை மாட்டி விடுகிறார். ரொம்ப நன்றி மீனா என்னை பத்தி முழு உண்மையும் இந்த வீட்ல உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நீ எந்த உண்மையையும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு கடைசில எல்லாத்தையும் முத்துகிட்ட சொல்லிட்டீங்களே என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரோகிணி போனதும், விஜயா என்னடி இவ சொல்லிட்டு போற என்று கேட்க, முத்து, அண்ணாமலை எல்லோரும் உனக்கு ஏற்கனவே ரோகிணி பற்றி உண்மை தெரியுமா? எப்போ தெரியும் என்று கேள்வி கேட்கின்றனர்.
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்.. எதிர்நீச்சலுக்கு மரண அடி! மாஸ் காட்டிய விஜய் டிவி
அப்போது மீனா நாம தீபாவளிக்கு பாட்டி ஊருக்கு போன சமயத்தில் ரோகிணி பற்றி தெரிய வந்த உண்மைகளை சொல்கிறார். பிறகு ரோகிணி அவருடைய மகன், அம்மா எல்லோரும் தற்கொலை செஞ்சு கொள்வோம் என்று மிரட்டியதை பற்றியும் சொல்கிறார். ஆனால் இதை விஜயா ஏற்கவில்லை. எவளோ ஒருத்தி செத்துப்போனா உனக்கென்ன?
உன்னை இத்தனை நாளா இந்த குடும்பத்தில் ஒருத்தியா பார்த்தவங்களுக்கு நீயும் நல்ல மரியாதை செஞ்சிட்ட... அவ கூட சேர்ந்து நீயும் உண்மையை மறைத்து என் பிள்ளைக்கு துரோகம் பண்ணிட்ட என்று கோபப்பட, அதற்கு முத்து ஏண்டி இப்படி பண்ணுன உன்ன இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அப்பா முகத்தை பார்க்கும்போது கூட உனக்கு உண்மைய சொல்லணும்னு தோணலையா என்று கேட்க மீனா அழுது கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஒரு வழியாக ரோகிணி பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கின்றனர். அதோடு மீனா ரோகிணிக்காக உண்மையை மறைத்தது இப்போது அவருக்கே பிரச்சனையாக இருக்கிறது. இதனால் நாளைக்கு மீனாவும் வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications