சிறகடிக்க ஆசை: ஸ்ருதி செய்த செயல்.. 4 லட்சம் ரகசியத்தை உளறிய மனோஜ்.. விஜயா சிக்கியாச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் தான் நகையை திருடினார் என்பதை கண்டுபிடிப்பதற்காக முத்து ஸ்ருதியோடு சேர்ந்து புது பிளான் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ரோகினி இடம் மனோஜ் உண்மையை உளறி இருக்கிறார். என்ன நடந்தது பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா இவங்க கொடுக்கும்போதே கவரிங் நகை தான் கொடுத்து இருப்பாங்க என்று சொல்ல, ஸ்ருதி அவங்க கொடுத்திருந்தால் அவர்களே எப்படி அதை விக்கிறதுக்காக கடைக்கு எடுத்துட்டு போயிருப்பாங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா நகை இவங்க அம்மா வீட்ல தான் மாறி இருக்கணும். இவ அவங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வரா என்று சொல்ல, மீனா அப்படியெல்லாம் எதுவுமே நடந்திருக்காது.

எங்க வீட்டில யாரும் அப்படி பண்ண மாட்டாங்க என்று சொல்ல, ஏன் உன் தம்பி பண்ணி இருக்கலாமில்ல, அவன் திருடன் தானே என்று சொல்ல, மீனா கோபப்படுகிறார். ஆனாலும் மீனா அம்மா வீட்டில் தான் நகை மாறி இருக்கணும் என்று விஜயா உறுதியாக சொல்ல அண்ணாமலை அந்த செயின் எங்க அம்மா போட்டது அது எப்படி கவரிங்கா மாறி இருக்கும் என்று கேட்க, முத்து அப்படி கேளுங்கப்பா என்று சொல்கிறார்.
அதற்கு விஜயா உங்க அம்மாவும் கவரிங் நகை போட்டாங்களோ என்னவோ என்று சொல்லி வார்த்தையை விட அண்ணாமலை கண்டபடி பேசாத எங்கம்மா கவரிங் நகை போட்டு ஏமாத்த பார்க்கிறாங்களா? அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபப்பட நான் அப்படி சொல்ல வரல, அவங்க ஊர்ல மாறி இருக்கலாம்ல என்று சொல்ல, ஸ்ருதி அது எப்படி ஒரே நேரத்துல இரண்டு நகையும் கவரிங்கா மாறி இருக்கும் என்று மடக்கி கேட்க ரவி எனக்கென்னமோ நம்ம வீட்ல தான் ஏதோ மாறின மாதிரி இருக்கு என்று சொல்கிறார்.

விஜயா என்னடா நான் என்னவோ மாற்றி வைத்த மாதிரி சொல்றீங்க என்று கோபப்பட, ரோகினி மீனா கார் வாங்கி கொடுக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவங்களுக்கு எப்படி இவ்வளவு வருமானம் வந்தது என்று நகையை வித்து இருப்பார்களோ என்று சொல்ல, எதுவும் தெரியாம கண்டபடி பேசாதீங்க என்று மீனா கோபப்படுகிறார். விஜயா அவங்க அம்மா வீட்ல தான் மாறி இருக்கும் என்று மீண்டும் சொல்ல ஸ்ருதி பேசாமல் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம் என்று சொன்னதும் மனோஜ் பதறி போய் போலீஸ் எல்லாம் எதுக்கு நம்ம வீட்டு பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணுமா என்று கேட்கிறார்.
அண்ணாமலை வழக்கம் போல அதெல்லாம் வேண்டாம் என்று தடை போட்டு விடுகிறார். முத்து உண்மையை நான் கண்டுபிடிக்கிறேன் என்று சவால் விட, மனோஜ் ரூமுக்கு வந்து விஜயாவிடம் நல்லவேளை சூப்பரா சமாளிச்சிட்டம்மா. நாம தப்பிச்சுட்டோம் என்று சொல்ல, எனக்கு இப்பதான் பயமே அதிகமாக இருக்கு முத்துவுக்கு நிச்சயமா சந்தேகம் இருக்கும். அவன் உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டான் அதுக்குள்ள நகையை மாற்றி வைக்கணும் என்று சொல்கிறார்.
பணத்திற்கு ஏற்பாடு பண்ணு என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக நகை விஷயத்தில் எப்படி உண்மையை வெளியே கொண்டு வருவது என்று முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதியை வைத்து போனில் பேச வைக்கலாம் என்று பிளான் போட்டு ரவி ரெஸ்டாரண்டில் இருந்து மனோஜ்க்கு கவரிங் நகை கடையில் இருந்து பேசுவது போல பேச ப்ளான் போடுகின்றனர்.

அடுத்ததாக மனோஜ் ஷோரூமில் கல்லாப்பெட்டியில் இருந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு ரோகிணி வந்து தட்டி எழுப்ப மனோஜ் 4 லட்சம் பொருள் எனக்கு தான் கொடுத்துடுங்க. நகை பிரச்சனை ஆயிடுச்சு என்று உளர ரோகிணி என்னென்னமோ சொல்ற என்று கேட்க மனோஜ் சமாளித்து கொண்டிருக்கும்போது ரோகிணிக்கு க்ரிஷ் போன் செய்ய தனியா சென்று பேசுகிறார்.
இதற்கிடையில் மனோஜ்க்கு ஸ்ருதி குரலை மாற்றி போன் பண்ணி எங்க கடையில் நீங்க கவரிங் நகை வாங்கி இருக்கீங்க. அதனால உங்களுக்கு புதுசா நகை வாங்கினால் 20% டிஸ்கவுண்ட் இருக்கு என்று பேசுகிறார். மனோஜ் நான் எதையும் வாங்கலையே என்று இழுத்துக் கொண்டே இருக்க ஸ்ருதி நீங்கதான் இரண்டு வளையல், ஒரு செயின் ஒரு தாலி வாங்கிட்டு போனீங்க. நீங்க எங்க கடையில வாங்கின அனுபவத்தை பத்தி சொல்லுங்க என்று கேட்க, மனோஜ் அது வந்து என்று இழுத்துக் கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications