சிறகடிக்க ஆசை: மனோஜ் பற்றிய உண்மையை சொன்ன நண்பர்.. ஸ்ருதி கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் 4 லட்சம் ஏமாந்து போன விஷயம் வீட்டிற்கு முத்துவால் தெரிய வந்திருக்கும் நிலையில் நகை பற்றிய உண்மையை கண்டுபிடிப்பதற்காக முத்து அடுத்த பிளான் போட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா மனோஜை போட்டு அடிக்க, ரோகிணி தடுத்து நிறுத்தி ஆன்ட்டி விட்டுடுங்க... அவர் ஒன்னும் யாரையும் ஏமாத்தலையே என்று மனோஜ்க்கு சப்போர்ட் பண்ண ஸ்ருதி ஏமாந்து போய் நிற்கிறதும் தப்பு தானே என்று கேட்க, கோபத்தில் மனோஜை ரூமுக்கு அழைத்து சென்று எதுக்கு இப்படி பண்ணுன என்று கேட்க, உன்னிடம் சொல்ல பயமா இருந்தது அதனால்தான் சொல்லல என்று சொல்ல ஆன்ட்டி ஏன் இவ்வளவு கோபப்பட்டாங்க? என்று சந்தேகப்பட்டு கேட்கிறார்.

அதற்கு மனோஜ் அம்மாவுக்கு ஏற்கனவே நாலு லட்சம் உண்மை தெரியும். அதற்காகத்தான் மீனா நகையை நான் தான் விற்றேன் என்று இன்னொரு உண்மையையும் உடைக்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி மனோஜை அடித்து திட்டிவிட்டு இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளனும் என்று முடிவெடுக்க, மறுபக்கம் ரவி ஸ்ருதிக்கு மனோஜ் மீது சந்தேகம் வருகிறது.
மறுபக்கத்தில் மீனாவும் முத்துவும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா உங்க அண்ணன் நகையை எடுக்கல போல, அத்தையும் நகையை கொடுக்கல அதனால்தான் அவரை போட்டு அந்த அடி அடிச்சாங்க என்று சொல்ல, முத்து அவனை காப்பாத்த தான் அடிச்சாங்க என்று தன்னுடைய சந்தேகத்தை சொல்கிறார்.

அதோடு மனோஜ் உண்மையில் அவனுடைய நண்பனிடம் கடன் வாங்கினானா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்கணும் அதை கண்டுபிடித்துவிட்டால் நகை விசயம் தெளிவு பெற்று ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார். மறுநாள் முத்து மனோஜின் பார்க் நண்பர் சந்தோஷை பார்த்து பேசுவதற்காக பார்க்கிற்கு வந்து கடன் கேட்பது போல பேச, அவர் மனோஜிக்கு தான் ஏற்கனவே 20,000 கடன் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் அண்ணனுக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நான் கடன் கொடுக்கவே மாட்டேன். நான் எப்படி அவனுக்கு நாலு லட்சம் கடன் கொடுக்க முடியும் என்று தன்னிடம் கடன் வாங்காததை சொல்லிவிடுகிறார். பிறகு முத்து மீனாவிடம் விஷயத்தை சொன்னதும் மீனா அப்புறம் எப்படி பணம் வந்தது என்று யோசிக்க நகையை விற்றுதான் வந்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்.

உடனே மீனா எங்க ஏரியாவில் ஒரு சாமியார் இருக்காரு அவர போய் பார்த்தா மை போட்டு பார்த்து சொல்லிடுவாரு என்று மீனா சொல்ல, முத்து அதெல்லாம் வேண்டாம் என்று யோசித்து ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி மஞ்சள் தடவி தனது நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு கெட்டபை மாற்றிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். அடுத்ததாக அண்ணாமலை வீட்டில் நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட ரவி மற்றும் ஸ்ருதி அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications