சிறகடிக்க ஆசை: முத்து மிரட்டினாலும் மனோஜுக்காக ரோகிணி செய்த செயல்.. ஸ்ருதி இப்படி மாறிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கவரிங் நகையை யாரு மாற்றி வைத்தது என்ற உண்மையை கண்டுபிடிப்பதற்காக முத்து ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து வீட்டில் கேம் விளையாட முத்துவின் பிளானை ரோகிணி உடைக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா அண்ணாமலை இடம் பேசிக்கொண்டு இருக்க, அங்கு பட்டையோடு எலுமிச்சை பழத்தை கையில் கொண்டு வரும் முத்து வீட்டிற்கு வந்ததும் வாசலில் படியில் நின்று அருள் வந்தது போல சாமி ஆடிக்கொண்டு இந்த வீட்டிற்குள் கெட்ட சக்தி இருக்குது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் நகையை எடுத்தவங்களை கண்டுபிடிக்க சாமியார் ஒருத்தரை பார்த்தேன் அவர் எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சு தந்து இருக்காரு. இதை பூஜை அறையில் வைத்தால் 24 மணி நேரத்தில் அவங்களோட வாய் கோணையாகிவிடும் என்று சொல்ல விஜயாவும் மனோஜும் பதட்டமடைகின்றனர். பூஜை அறையில் முத்து பணத்தை கொண்டு போய் வைக்க போகும்போது விஜயா அதை தடுக்கிறார்.
நான் நாகர்கோவில்காரன்.. அப்பா ஜீப் ஓட்டுவாரு.. "சிறகடிக்க ஆசை" ஷூட்டிங்கில் நடந்த கஷ்டம்- செல்வம்
அதற்கு முத்து நீங்க எதுக்கு பயப்படுறீங்க என்று கேட்க, எனக்கு பயம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். மனோஜ் யாருக்காவது ஏதோ ஆகிட போகுது என்று சொல்ல நகையை எடுத்தவர்களுக்கு மட்டும்தான் வாய் கோணையாகும் மற்ற யாருக்கும் எதுவும் நடக்காது என்று முத்து சொல்கிறார். இதைத்தொடர்ந்து விஜயா மனோஜ் தங்களுடைய வாய்க்கோணை ஆகிவிட்டது போல பயந்து நடுங்கி கொண்டிருக்கும் போது ரோகிணி அங்கு வருகிறார்.
உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகல, பயப்படாதீங்க முத்து உங்கள மாட்ட வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கிறார். அவர் சும்மாவே கோவில் பக்கமே வர மாட்டார். சாமியாரை நம்பவே மாட்டான் என்று மனோஜை கூல் செய்து பாட்டு கேட்க சொல்கிறார். அதற்கு மனோஜ் ரோகிணி இடம் இன்னைக்கு என் கூடவே இரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் எந்த சாமியாரை பார்த்தீங்க என்று மீனா முத்துவுடன் கேட்க அவர் எலுமிச்சம்பழத்தை கடையில் வாங்கிட்டு வந்த கதையை சொன்னதும் அப்ப பொய் சொன்னீங்களா? என்று கேட்க, ஆமா பொரி வைத்திருக்கிறேன் அவர்களே கண்டிப்பாக வந்து மாட்டுவாங்க என்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.
அதுபோல ரவியும் ஸ்ருதியும் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கேரளாவில் இந்த மாதிரி மாந்திரீகம் எல்லாம் இருக்கு. அப்பா சொல்லி இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கும்போது வந்த மீனாவிடம் முத்து திட்டத்தை சொல்ல, ஸ்ருதி இதுவும் நல்லா தான் இருக்கு என்று முத்துவுக்கு சப்போர்ட் செய்கிறார். அதோடு நான் வேலைக்கு போன பிறகு என்ன சம்பவம் நடந்தாலும் எனக்கு போன் போட்டு சொல்லிருங்க என்று சொல்லிவிட்டு போகிறார். இறுதியாக மனோஜ்க்கு முத்து கொண்டு வந்த எலுமிச்சம்பழம் தூங்க விடாமல் செய்து கொண்டே இருக்க, மனோஜ் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications