சிறகடிக்க ஆசை: விஜயாவை மாட்டி விட்ட மனோஜ்.. ரோகிணி சொன்ன வார்த்தை.. மாஸ் காட்டிய அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 18-ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் வீட்டில் மாட்டியதும் விஜயாவை மாட்டி விட்டிருக்கிறார். ஆனால் விஜயா புது நாடகம் போட்டு பிரச்சனையை கூட்டுகிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரோகிணி மனோஜை கூட்டிக்கொண்டு ரூமிற்கு சென்று விடலாம் என்று பார்க்க இடைமறித்த முத்து இவன்தான் அக்யூஸ்ட் இவன் எப்படி இங்கிருந்து போகலாம் என்று கேட்க ரோகிணி அதான் அவர் 4 லட்சம் அவருடைய நண்பரிடம் கடன் வாங்குனேனு சொன்னாரே என்று சொல்ல,

நான் அவனுடைய பார்க் நண்பரிடம் பேசிவிட்டேன். அவன் நான் கடன் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டான் என்று சொன்னதும் அண்ணாமலை மனோஜிடம் வந்து உண்மையை சொல்லுடா என்று கேட்க நான் தான் நகையை விற்றேன். 4 லட்சம் கடன் வந்ததும் எனக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல அம்மாவிடம் சொன்னேன். அம்மா தான் மீனா நகை சும்மாதான் இருக்குன்னு சொல்லி எடுத்து தந்தாங்க என்று விஜயாவை மாட்டி விடுகிறார்.
மீனா இது என்ன அத்த பழக்கம் இவ்வளவு பிரச்சனையும் நீங்க செஞ்சிட்டு... கடைசியில் எங்க அம்மா வீட்டில் தான் நகை மாறியிருக்கும் என்று என்னை கேவலப்படுத்துறீங்க என்று சொல்ல கோபமான அண்ணாமலை மனோஜை போட்டு அடித்து துவைக்கிறார். நீ எப்பவும் திருந்தவே மாட்டியா என்று அடித்துக் கொண்டிருக்கும் போது விஜயா வந்து பிடிக்க வர இத்தனைக்கு காரணமே நீதான் உன்னால தான் இவன் வாழ்க்கை இப்படி போயிட்டே இருக்கு இவன் மீண்டும் மீண்டும் தப்பு செய்வதற்கு காரணமே நீதான் என்று விஜயாவை அடிக்க போகிறார்.

முத்து அண்ணாமலையை பிடித்துக் கொள்கிறார். அதோடு விஜயாவிடம் அண்ணாமலை இனி நீ என்னிடம் சாகுற வரைக்கும் பேசக்கூடாது என்று அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்ததும் நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க? என் பையனுக்காக தானே நான் இப்படி எல்லாம் பண்ணுனேன். நான்தான் இந்த வீட்டில் தப்பு இல்ல... நான் இந்த வீட்டில் இருக்கிறதுதானே பிரச்சனை என்று ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறார்.

மனோஜ், ரோகிணி, ரவி என்று எல்லோரும் சேர்ந்து கதவைத் தட்ட விஜயா கதவை திறக்காமல் இருக்க மீனா முத்துவை விட்டு அண்ணாமலையை சமாதானம் செய்ய சொல்கிறார். முத்துவும் அண்ணாமலையிடம் வந்து அம்மா ஏதோ அவசரத்துல பண்ணி இருப்பாங்க, நகை எடுக்கிற பிளான் கூட இந்த மனோஜ் தான் போட்டிருப்பான்.

இப்பதான் உண்மை தெரிஞ்சிருச்சே... நீ அம்மாவை வந்து கூப்பிடுப்பா என்று முத்து அண்ணாமலையிடம் சொல்ல அண்ணாமலை இப்படி அவ பண்ணினதை எல்லாம் மன்னிச்சு விட்டுட்டு போனதாலதான் இப்படி வந்து நிற்கிறது. இப்பவும் நான் பேசலனா இந்த வீட்டில் நான் ஜடம் மாதிரி இருக்கேன்னு அர்த்தம். இப்ப சொல்லு நான் ஜடமா என்று கேட்டு கோபப்படுகிறார். அதோடு இது எனக்கும் என் பொண்டாட்டிக்குமான பிரச்சனை இதுல நீ தலையிடாதே என்று சொல்லிவிடுகிறார்.
அதற்கு பிறகு ரூம் கதவை தட்டியவர்களும் அங்கிருந்து சென்றுவிட அண்ணாமலை சோபாவில் படுத்து தூங்கிவிட மீனா விஜயா கதவை திறக்காததால் பயமாக இருப்பதாக சொல்ல முத்து அவங்க எதுவும் பண்ணிருக்க மாட்டாங்க. இதுபோல பலமுறை பண்ணியிருக்காங்க. இப்போ அவங்க மாட்டியதால் முகத்தை வெளியே காட்ட முடியாமல் உட்கார்ந்து இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications