மீனாவை அசிங்கப்படுத்திய விஜயா.. ஸ்ருதி கேட்ட கேள்வி.. பிரச்சனையில் சிக்கிய ரோகிணி.. சுதா வைத்த செக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனாவின் முகத்தில் வளையலை கழட்டி வீசிய விஜயாவிற்கு ஸ்ருதியின் அம்மாவின் மூலமாக அவமானம் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் ரோகிணியும் புது பிரச்சனையில் சிக்குகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களை கோபம் மூட்டும் வகையில் தான் சில காட்சிகள் இருந்தது. நகைகளை எடுத்து கொடுத்து தப்புகளை செய்த விஜயா, மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னதால் நான் மீனாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தன்னுடைய கையில் போட்டு இருந்த வளையல்களை கழட்டி மீனா முகத்தில் தூக்கி வீசி திமிராக பேசி இருக்கிறார். ஆனால் இதற்கு அண்ணாமலை கன்னத்தில் இரண்டு அடி போடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று வழக்கம் போல ஏமாற்றம்தான். இதைப் பார்த்து அதிர்ச்சியான அண்ணாமலை இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே இருக்க ஸ்ருதி தான் மீனாவிற்காக பேசியிருக்கிறார்.

விஜயா மீனா முகத்தில் நகையை வீசிவிட்டு ரூமிற்கு சென்று விட விஜயா செஞ்சது தப்பு இல்லை என்பது போல ரோகிணி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்க அதனால் கோபமான ஸ்ருதி என்ன ரோகிணி நீங்க பேசுறீங்க ஆன்ட்டி செஞ்சது தப்பு அவங்க மீனாவிடம் மன்னிப்பு கேட்கணும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி அவங்க மனோஜ்க்காக ஹெல்ப் பண்ணுனாங்க அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்ல, ரவி இத்தனை பிரச்சனைக்கு காரணம் இவன்தான் என்று மனோஜை திட்டுகிறார்.

அதோடு முத்து மீனாவிடம் நீ தானே அவங்க வெளியே வரவேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டா அதான் வந்து அவங்க உன் மேலேயே கோபத்தை காட்டிட்டு போறாங்க. இப்ப உனக்கு சந்தோசமா என்று மீனாவை திட்டிக்கொண்டு இந்த ஓடுகாளி செஞ்ச வேலையால அன்னைக்கு நாங்க நகை கடையில் அவமானப்பட்டோம் என்று மனோஜ் எங்களுடைய நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்க,
அதற்கு மனோஜ் என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று சொல்ல ரோகிணி நான் அந்த பணத்தை தரேன் எனக்கு டைம் வாங்கி கொடுங்க மாமா என்று அண்ணாமலையிடம் சொல்ல அண்ணாமலையும் முத்துவிடம் கண்ணை காட்டியதும் நான் இவனுக்காக இப்போ சரின்னு சொல்லல, உனக்காக சொல்லுறேன் நீ சரியா பணத்த தரலனா முத்து யாருன்னு தெரியும் என்று மிரட்டுகிறார்.

அடுத்த கட்டத்தில் ஸ்ருதி, முத்து, மீனா மூவரும் மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இவ்வளவு அசிங்கப்பட்டும் திருந்தாத மீனா மாமாவும் அத்தையும் இனி பேசவே மாட்டாங்களா? நீங்க மாமா கிட்ட சொல்லி அத்தை கிட்ட பேச சொல்லுங்க என்று சொல்ல அதற்கு முத்துவும் ஸ்ருதியும் மீனாவை திட்டுகின்றனர். அவங்க பிரச்சனையை அவங்க பாத்துக்குவாங்க இவ்வளவு அவமானப்பட்ட பிறகும் எப்படித்தான் உங்களால இப்படி எல்லாம் பேச முடியுதோ என்று சொல்லி மீனாவை திட்டி விட்டுப் போகிறார்கள்.
அதைத் தொடர்ந்து விஜயாவும் பார்வதியும் கோவிலுக்கு போகின்றனர். அங்கு பார்வதி விஜயாவிடம் நீ செஞ்சதும் தப்புதான் மீனாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். உன் புருஷன் உன்கூட இனி பேச மாட்டாரு என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு விஜயா அவர் பேசலாட்டாலும் பரவாயில்லை நான் அந்த பூக்காரி கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கையில் வளையல் இல்லாததை பார்த்து என்ன ஆச்சு கையில் வளையல் போடாமல் வந்து இருக்கீங்க என்று கேட்க விஜயா வீட்டில் நடந்த பிரச்சனை எதையும் சொல்லாமல் எண்ணை தேய்த்து குளித்தேன் வளையலை மறந்து அங்கேயே வச்சிட்டு வந்துட்டேன் என்று சொல்ல உங்களுக்கு வயசாயிடுச்சு இல்ல அதான் மறதி நோய் வந்துட்டு என்று சொல்லி இப்படி நீங்க கையில் வளையல் இல்லாமல் இருக்கிறது எங்களுக்கு அவமானம் தானே என்று சொல்ல, விஜயா மூக்குடைந்து நிற்கிறார்.
பிறகு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு தள்ளி வந்து இந்த அம்மாவுக்கு பண திமிரு என்கிட்டயே காட்டுது என்று பார்வதியிடம் திட்டிவிட்டு வருகிறார். மறுபக்கத்தில் வாக்கிங் போயிட்டு வீட்டுக்கு வந்த அண்ணாமலை மீனா மற்றும் முத்துவை அமர சொல்லி அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications