சிறகடிக்க ஆசை: வீட்டுக்கு திரும்ப வந்த பாட்டி.. விஜயா மற்றும் ரோகிணிக்கு வைத்த ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 25ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைப்பதற்காக மீனாவும் முத்துவும் செய்த பிளான் காரணமாக மீண்டும் பாட்டி வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு வழியாக மனோஜ் தான் மீனாவின் நகைகளை திருடியது என்ற உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஜீவா கொடுத்த பணத்திலிருந்து ரோகிணி முத்துவிடம் 2 லட்சம் பணம் கொடுத்து இருக்கிறார். அந்த பணத்தில் இருந்து முத்துவும் மீனாவும் கார் வாங்கலாம் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் இன்று முத்து கார் வாங்க போன இடத்திற்கு வந்த மீனா அத்தையும் மாமாவும் வீட்டில் பேசாமல் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் நாம புது கார் வாங்கிட்டு போனா அவங்க சந்தோஷமா பேச மாட்டாங்க. எல்லாரும் மன வருத்தத்தில் இருக்கும்போது நாம மட்டும் நம்முடைய சந்தோஷத்தை எப்படி கொண்டாட முடியும் என்று சொல்லி இருந்தார். அதுபோல ஸ்ருதி இன்று டப்பிங் பேச போன இடத்தில் ஒரு சீரியலில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடக்கும் காட்சிகளுக்கு டப்பிங் பேசி இருந்தார். அப்போது அந்தப் பெண் பட்ட பிரச்சனைகளை பார்த்து பயந்து போய் இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைப்பதற்காக முத்து பிளான் போட்டு இருக்கிறார். அதாவது தன்னுடைய பாட்டியை மீண்டும் வீட்டிற்கு வர வைத்திருக்கிறார். வீட்டில் நடந்த மொத்த கதையும் சொல்லிதான் கூட்டிட்டு வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிற்கு பாட்டி வந்ததும் அதை பார்த்த விஜயா என்ன அத்தை மீண்டும் வந்துட்டீங்க என்று கேட்க ஏன் நான் என் புள்ள வீட்டுக்கு வரக்கூடாதா என்று வந்ததுமே விஜயாவுக்கு பாட்டி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி குழந்தை பிறப்பு பற்றி பயந்து போய் இருந்த நேரத்தில் ரோகிணி குழந்தை பிறப்பு பற்றி முதல் மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் நேரம் வரை என்ன மாதிரி எல்லாம் மாற்றம் ஏற்படுமோ அது பற்றி உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இது பற்றி ஸ்ருதி மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. இதனால் இது பற்றி மீனா அல்லது ஸ்ருதி பாட்டி இடம் சொன்னால் பாட்டி ரோகிணி இடம் துருவி துருவி கேள்வி கேட்டு அவர் பற்றிய உண்மைகளை கொண்டு வருவாரா என்றும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
அதே நேரத்தில் போன வாரம் முழுக்க மனோஜ் பற்றிய உண்மைகளை வீட்டிற்கு தெரிய வைப்பதற்காக முத்து போராடிக் கொண்டிருந்தார். இந்த வாரத்தில் அப்பாவையும் அம்மாவையும் பேச வைப்பதற்காக அடுத்த பிளானை போட்டு இருக்கிறார். அடுத்த வாரம் முழுக்க விஜயா பாட்டி இடம் மாட்டிக்கொண்டு பாடாய்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.













Click it and Unblock the Notifications