மக்கு மீனாவை அதிர வைத்த பாட்டி.. விஜயாவுக்கு போட்ட செம கண்டிஷன்.. சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலை வீட்டிற்கு வந்திருக்கும் அவருடைய அம்மா விஜயா மற்றும் மனோஜை கேள்வி கேட்டு பாடாய்படுத்தி எடுக்கிறார். அதோடு அண்ணாமலையும் விஜயாவையும் பேச வைப்பதற்காக அவர் புது முயற்சி எடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இது இரண்டு மூன்று வாரங்களாக மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் மீனா தியாக சுடராக மாறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கதாநாயகியாக இருந்து கொண்டு இவர் பொறுமை காக்கிறேன் என்று ஒவ்வொரு இடத்திலும் அவமானப்பட்டு கொண்டிருப்பதும்... என்னதான் அவமானப்பட்டு, கேவலப்பட்டாலும் விஜயாவிடம் எதிர்த்து பேசாமல் பூரி சுடவா? பொங்கல் வைக்கவா? என்று கிச்சனுக்குள் எதையாவது கிண்டி கொண்டே இருக்கும் மீனாவை பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து இணையத்தில் பலரும் சிறக்கடிக்க ஆசை சீரியல் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் பேசாமல் இருக்கின்றனர். விஜயா மீனாவின் நகைகளை மனோஜ்க்கு எடுத்துக் கொடுத்துவிட்டு அதை மனோஜ் விற்றுவிட்டு கவரிங் நகையை மாற்றி வைத்தது விஜயாவிற்க்கு தெரிந்து இருந்தும் விஜயா அதை வீட்டில் சொல்லாமல் மீனா குடும்பத்தின் மீது பழியை தூக்கி போட்டதால் அண்ணாமலை விஜயா மீது கோபத்தில் இருக்கிறார்.
அதனால் அண்ணாமலை விஜயா மீனாவிடம் மன்னிப்பு கேட்டால் தான் நான் அவரிடம் பேசுவேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் மீனா அண்ணாமலை மற்றும் விஜயாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று முத்துவிடம் நச்சரித்துக் கொண்டிருக்க முத்து பாட்டியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். பாட்டி வந்ததுமே இந்த சீரியலில் பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது.
இப்போது அதுபோல வீட்டிற்கு வந்த பாட்டி விஜயாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கிறார். அதோடு அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைத்திருக்கிறார். பொதுவாக கிச்சனில் எப்போதும் மீனாவே வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவில் மீனா அவ புருஷனுக்கு மட்டும்தான் வேலை செய்வா... உன் புருஷனுக்கு நீ தான் சாப்பாடு செஞ்சு கொடுக்கணும் என்று பாட்டி சொல்ல, அண்ணாமலைக்காக விஜயா தோசை சுட்டுக்கொடுத்து கொண்டு இருக்கும்போது அண்ணாமலை பக்கத்தில் வந்து நின்று எனக்கு இரண்டு தோசை போதும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
இவர்களின் காட்சியை மொத்த குடும்பமும் கதவு வழியாக உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். போன வாரம் முழுக்க சண்டைக்காட்சிகள் பரபரப்பாக இருந்த நிலையில் இந்த வாரம் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications