சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு வந்த கடிதத்தால் சிக்கலில் சிக்கும் ரோகிணி.. முத்து கொடுத்த இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ்க்கு ஒரு கடிதம் வந்திருக்கும் நிலையில் அதை பார்த்து ரோகிணி பயத்தில் இருக்கிறார். மறுபக்கத்தில் முத்து புது கார் வாங்கிக் கொண்டு வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவை ஒன்று சேர்க்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி நாச்சியார் பாட்டியிடம் நீங்க காதல் திருமணம் செஞ்சீங்களா என்று கேட்க அதற்கு பாட்டி போடி அம்மா என்று வெட்கப்பட முத்து கலாய்க்க பாட்டி நான் காதலிக்கல... அவர்தான் என் பின்னாடியே சுத்துனாரு என்று தன்னுடைய காதல் கதையை சொல்கிறார். அப்போது ரவி தாத்தா இருந்திருந்தால் இப்படித்தானே ஊட்டி விட்டு இருப்பார் என்று சாப்பாடு ஊட்டி விட பாட்டியின் முகம் திடீரென சோகமாகிறது.

Television Siragadikka aasai serial

அப்போது ஸ்ருதி ஆன்ட்டி அங்கிளுக்கு ஊட்டி விடுங்க என்று சொல்ல அண்ணாமலை வேக வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு நான் சாப்பிட்டு விட்டேன் எனக்கு போதும் என்று எழுந்து செல்ல, பாட்டி கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வாடா என்று முத்துவிடம் சொல்கிறார். அதற்கு பிறகு முத்து கார் எடுக்க கிளம்பி போக மீனா அத்தை மாமாவை கோயிலுக்கு கூட்டிட்டு போகணும் என்பதை ஞாபகப்படுத்தி புது காரில் கூட்டிட்டு செல்லலாம் என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜ் கடையில் இருக்க ஒருவர் ஒரு லெட்டரை கொண்டு வந்து மனோஜிடம் கொடுக்க அதைப் பிரித்து படித்து பார்க்கும்போது அதில் உங்களை சுற்றி இருக்கிறவர்களால் உங்களுக்கு பிரச்சனை வர போகிறது என்று எழுதி இருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வர மனோஜ் யாரால் பிரச்சனை வரப்போகுதுன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருக்கிறார். அதற்கு ரோகிணி யாராவது பிராங்க் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல,

Television Siragadikka aasai serial

வித்யா கடையில் வேலை பார்க்கிறவங்க யாராவது இப்படி பண்ணி இருப்பாங்களா? இல்ல அந்த பிஏ வசீகரன் எழுதி இருப்பானா? என்று சந்தேகப்பட ரோகிணி அமைதியாக இருக்க சொல்கிறார். அடுத்த கட்டத்தில் முத்து புது காருடன் வீட்டிற்கு வர மீனா எல்லாரையும் கூப்பிட்டு காரைக்காட்டியதும் விஜயா ஏதோ ஏரோப்ளேன் வாங்கிட்டு வந்து இருக்கானா என்று இளக்காரமாக பேச பாட்டி ஏரோபிளேனை உன் தலை மேலேயா நிறுத்துவான் என்று பதிலடி கொடுத்து கீழே கூட்டி வருகிறார்.

Television Siragadikka aasai serial

அடுத்ததாக பாட்டி அண்ணாமலை விஜயாவை கோயிலுக்கு கூட்டிட்டு போக சொல்ல விஜயா தனிச்சீட்டிலும் அண்ணாமலை தனி சீட்டிலும் உட்கார வர பாட்டி மீனாவை முன்னாடி வரச் சொல்லி அண்ணாமலையையும் விஜயாவையும் பின்னாடி உட்கார வைக்கிறார். பிறகு கோயிலுக்கு போயிட்டு வரும்போது இவர்கள் பேசிக்கொள்ளாமல் இருக்க முத்து மீனாவை சீட்டு பெல்ட் போட சொல்லி காரை தாறுமாறாக ஓட்ட இருவரும் இடித்துக்கொள்ள ஒரு கட்டத்தில் அண்ணாமலை விஜயாவிடம் தள்ளி உட்காரு, என் கைய புடிச்சுக்க என்று சொல்ல விஜயாவும் பிடித்துக் கொள்ள முத்து மீனாவும் அவர்கள் ஒன்று சேர்ந்ததை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+