சிறகடிக்க ஆசை: குழந்தையை தத்தெடுக்க போறேன்.. அதிர்ச்சி கொடுத்த மருமகள்.. மனோஜை அடித்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவும் மீனாவும் போட்ட பிளானால் அண்ணாமலையும் விஜயாவும் பேசி இருக்கின்றனர். வீட்டில் கலகலப்பாக எல்லோரும் இருக்கும் நிலையில் ஸ்ருதி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதியும் பாட்டியும் பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க ரவி டிரஸ் இல்லாமல் இருக்கும் போட்டோவை பார்த்து இதில் நீ க்யூட்டா இருக்க என்று ரவியை கலாய்த்து இதை நான் டிபியா வைக்கப் போறேன் என்று சொல்ல ரவி வேண்டாம் என்று போனை பிடுங்க ஸ்ருதி சுத்தி சுத்தி வந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் முத்து காரை தாறுமாக ஓட்டி வீட்டிற்கு முன்னாடி வந்து நிறுத்துகிறார்.

அண்ணாமலையும் விஜயாவும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை விஜயாவிடம் தண்ணீர் கொண்டு வா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு அண்ணாமலையின் கழுத்தில் ஒட்டி இருக்கும் விஜயாவின் பொட்டை பார்த்து எல்லாரும் கலாய்க்க அண்ணாமலை வெட்கப்படுகிறார். அப்போது பாட்டி அண்ணாமலையும் விஜயாவும் ஒருமுறை சண்டை போட்டு பேசாமல் இருந்தாங்க.. அப்போது நான் தான் சமாதானம் செஞ்சுட்டு போனேன்.
அடுத்த பத்தாவது மாசத்துல ரவி பிறந்துட்டான் என்று சொல்ல, முத்து அப்படின்னா இன்னும் பத்து மாசத்துல எங்களுக்கு தங்கச்சி வரப்போகுதா என்று கிண்டல் அடிக்கிறார். அதைத்தொடர்ந்து ரூமுக்குள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதியை ரவி கட்டிப்பிடிக்க ஸ்ருதி கொஞ்ச நாளைக்கு என்னை தொடாத என்று அவரை போட்டு அடிக்கிறார். நான் குழந்தை பெற்றுக்கொள்ள போறது கிடையாது என்று சொன்னதும் ரவி இரண்டு மூன்று வருடத்திற்கு தானே அது பரவால்ல என்று சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதி ரெண்டு மூணு வருஷத்துக்கு இல்ல நான் எப்பவுமே பெத்துக்க போறது இல்ல. என்னால அந்த வலியை தாங்க முடியாது. வேணும்னா வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்ல, அதற்கு ரவி என்னதான் இருந்தாலும் நீ பெத்துக்கிற மாதிரி வராது என்று சொல்ல என்னால பெத்துக்க முடியாது என்று உறுதியாக சொல்கிறார்.

நண்பர் வீட்டில் ஹோம் டூரில் துப்பாக்கி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவிற்கு வந்த பிரச்சனை
அடுத்ததாக மொட்டை கடுதாசியால் மனோஜ் தூக்கமில்லாமல் விஜயாவுக்கு போன் போட்டு எனக்கு தூக்கமே வரல வெளியே வாமா என்று கூப்பிட்டு மொட்டை கடுதாசியை காட்டி எனக்கு என்னமோ பயமா இருக்கு என்று சொல்ல, மாசம் ஐம்பதாயிரம் பணம் தரணும்ங்கறதுக்காக புது கதையை ரெடி பண்ணுறியா என்று விஜயா திட்ட எனக்கு யாரால் பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சு போச்சு உங்களால தான் என்று சொல்ல விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார்.
உனக்காக எவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கிறேன். நீ என்னையே சந்தேகப்படுறியா என்று கோபப்படுகிறார். அடுத்தநாள் காலையில் முத்து தன்னுடைய இன்னொரு காருக்கு டிரைவராக தன்னுடைய நண்பன் கார்த்தியை கூட்டிட்டு வர அவரிடம் சாவியை கொடுக்க சொல்லி அண்ணாமலை இடம் சொல்கிறார். விஜயா ஏதோ பெரிய ஏரோபிளேனை வாடகைக்கு விடுறான் என்று நக்கல் பேச அண்ணாமலை திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications