சிறகடிக்க ஆசை: நகை பற்றிய உண்மை தெரிந்த முத்து.. மனோஜ் செய்த செயல்.. பாட்டி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவிற்கு போலி நகை பற்றிய உண்மை தெரிய வந்திருக்கிறது. ஆனால் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மீனா மனோஜை காப்பாற்றி விட்டிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் நகைக்கடையில் கொடுக்கப்பட்ட காபியை குடித்து பார்த்த முத்து காபி நல்லா இல்லை என்று சத்தம் போட கடைக்காரர் அவருக்கு ஜூஸ் கொடுக்க சொல்ல, அந்த நேரத்தில் நகையை பரிசோதனை செய்தவர் இது கவரிங் நகை என்று சொன்னதும் கடைக்காரர் கவரிங் நகை கொண்டு வந்துட்டு தங்க நகை வேண்டுமா?

எத்தனை கடைக்கு போய் இப்படி ஏமாற்றி இருக்கீங்க. இதுல உங்களுக்கு காபி வேற கேடா என்று முத்துவின் சட்டையை பிடித்து போலீசுக்கு போன் போட போகும் சமயத்தில் கடை ஓனர் அங்கு வருகிறார். அவர் மீனாவை பார்த்ததும் என்னம்மா என்ன பிரச்சனை என்று கேட்க, கடையில் நடந்த விஷயங்கள் மீனா சொல்ல, அதற்கு முத்து நீங்கதான் நகையை மாற்றி இருக்கீங்க என்று கடைக்காரரிடம் கோபப்பட, அவர் எங்க கடைக்குனு மக்கள்கிட்ட ஒரு பெயர் இருக்கு.
அப்படியெல்லாம் இங்க பண்ண மாட்டோம் நடுவுல ஏதோ தப்பு இருக்கு என்று சொல்லி இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். கடையை விட்டு வெளியே வந்ததும் அண்ணாமலைக்கு போன் போடுவதற்காக போனை எடுக்க முத்து மீனா அதை தடுத்து நிறுத்து விஷயம் முழுசா தெரியாம எதையும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். முத்து மனோஜை அடித்து கேட்டா உண்மை தெரிந்து விடும் என்று கோபப்பட, மீனா பாட்டி பிறந்தநாள் முடியுற வரைக்கும் இதை பத்தி யார்கிட்டயும் எதுவும் கேட்கக்கூடாது என்று தன் மீது சத்தியம் வாங்குகிறார்.
மறுபக்கத்தில் அண்ணாமலை வீட்டில் அம்மாவின் பிறந்த நாளுக்காக அலங்கார ஏற்பாடுகளை சந்தோஷமாக கவனித்துக் கொண்டிருக்க விஜயா நகைகளோடு இவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்கன்னு தெரியலையே என்று பதற்றத்தோடு இருக்கிறார். முத்து வீட்டுக்கு கோபமாக வர அண்ணாமலை சந்தோஷமாக இருப்பதை பார்த்து அமைதியாக இருக்கிறார்.
பிறகு விஜயா கீழே வந்து மீனாவை பார்த்து எங்க ஊரை சுத்த போன? சமைக்க வேண்டாமா? நீ வந்து சமைக்கிற வரைக்கும் காத்துக்கொண்டு இருக்கணுமா? என்று சத்தம் போட முத்து நீங்க போய் சமைக்க வேண்டியது தானே என்று கோபமாக பேச, விஜயா முத்துவை பார்த்து பயப்படுகிறார். பிறகு மனோஜ் முத்துவின் நடவடிக்கையை பார்த்து பயந்து ரூமுக்குள் திரும்பி திரும்பி பார்த்தபடி போக முத்து ஒரு பலூனை எடுத்து ஊதியப்படியே மனோஜை பார்த்து கோபப்படுகிறார்.

பிறகு மனோஜ் ரூமுக்கு வந்து ரோகினி இடம் முத்து உன்கிட்ட ஏதாவது கேட்டானா என்று விசாரிக்க, நீ எதுக்கு முத்து பத்தியே கேட்டுக்கிட்டு இருக்கா என்று ரோகினி கேட்க, மனோஜ் ஒன்னும் இல்ல சும்மா கேட்டேன் என்று சமாளிக்கிறார். பிறகு மனோஜ் பாத்ரூம் சென்ற நேரத்தில் ரோகிணிக்கு அவருடைய மகன் போன் பண்ண நான் இப்போ ஸ்கூல்ல நல்லா படிச்சு மார்க் எடுத்து இருக்கிறேன்.
டீச்சர் என்னை பாராட்டுனாங்க. எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னை பாக்கணும் போல இருக்குமா? என்று கிரிஷ் சொன்னதும் ரோகிணி சீக்கிரம் வரண்டா செல்லம் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது மனோஜ் வெளியே வர
ரோகிணி போனை கட் பண்ணி விடுகிறார். உடனே மனோஜ் செல்லம்மா அது யாரு என்று ரோகினி இடம் துருவி துருவி கேள்வி கேட்க ரோகினி அது என்னுடைய பிரண்ட்.
அவ பேரு செல்லம்மா நாங்க ஷார்ட்டா அப்படித்தான் கூப்பிடுவோம் என்று சமாளிக்கிறார். பிறகு பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கலாம் என்று ரோகினி கேட்க மனோஜ் முதலில் வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி ஏதாவது கொடுக்கணும் என்று சொல்லி ஒரு புடவை எடுத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.

அதுபோல ரவி மற்றும் ஸ்ருதியும் என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரவி நான் சுகர் இல்லாத கேக் செய்யப் போகிறேன் என்று சொல்கிறார் ஸ்ருதி நான் செல்போன் ஆர்டர் செய்ய போகிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதை தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் அண்ணாமலை வீட்டில் நடக்கும் ஏற்பாடுகள் குறித்து அம்மாவிடம் சொல்ல அதற்கு முத்துவின் பாட்டி என்னுடைய பேரப்பிள்ளைகளில் யார் என்னுடைய மனசுக்கு பிடிச்ச கிப்ட் தராங்க என்று பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications