சிறகடிக்க ஆசை: பாட்டி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்.. நகை பஞ்சாயத்தை கூட்டிய முத்து.. உளறிட்டாரே மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 9ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாட்டி ஸ்பெஷல் கிப்ட் யாருக்கு என்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல கவரிங் நகை விஷயத்தை பற்றியும் முத்து இன்று வீட்டில் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாட்டி பேசிய வீடியோவை பார்த்து எல்லோரும் சந்தோஷப்பட்டு ரொம்ப அழகாகவும் பாட்டி சரியாகவும் பேசி இருக்காங்க என்று பாராட்டுகின்றனர். அதோடு அண்ணாமலை மீனா செய்த விசயம் நான் ரொம்ப நல்லா இருக்கு என்று பாராட்டி இந்த வீடியோ தினமும் நம்ம வீட்டுல டிவில வரணும் என்று சொல்ல, முத்து கண்டிப்பா வரும் என்று சொல்கிறார். இதை பார்த்து விஜயாவும் மனோஜும் கடுப்பாகின்றனர்.

அதைத் தொடர்ந்து பாட்டியின் தோழிகள் கேக் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கு என்று பாராட்ட, அதற்கு பாட்டி அது என்னுடைய பேரன் ரவி எனக்காக செஞ்சான். அந்த கேக் பெயர் கூட என்னுடையதுதான் என்று சொல்லி, சந்தோஷப்பட மனோஜ் பொறுமையை இழந்து உங்களுடைய ஸ்பெஷல் கிப்ட் யாருக்கு பாட்டி என்று கேட்கிறார்.
பாட்டு சொல்லுறேன் என்று சொல்லி விஜயாவை கூப்பிட்டு போய் என்னுடைய பையை எடுத்துட்டு வா என்று சொல்ல, விஜயாவும் கொண்டு வந்து கொடுத்து நமக்கு தான் அந்த கிப்ட் கிடைக்கும் என்று சந்தோஷமா வெயிட் பண்ணுகிறார். அப்போது பரம்பரை நகை ஒன்றை பேக்கில் இருந்து எடுத்த பாட்டி இது 4 தலைமுறையா இந்த நகை நம்மகிட்ட இருக்கு. இது வெறும் நகை இல்ல இந்த குடும்பத்தோட கவுரவம் என்று சொல்கிறார்.

அதோடு இது சரியானவங்க கிட்ட ஒப்படைக்கனும்னு தான் இருந்தேன் என்று சொல்லி, விஜயா எனக்காக டிவி கொடுத்தா அது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஊரில் எல்லாரிடமும் என்னுடைய மருமகள் வாங்கித்தந்த டிவின்னு சொல்லுவேன். அவளுக்கு கண்டிப்பா ஏதாவது நான் செய்வேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து மனோஜ் வாங்கி கொடுக்க நவரத்தின மாலை பற்றி பேசியதும் மனோஜ் அந்த கிப்ட் எனக்கு தானா? என்று கேட்க அண்ணாமலை பொறுமையாக இருடா என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து இறுதியாக எல்லாருடைய கிப்ட்டையும் பாராட்டி விட்டு நீங்க எல்லாரும் கொடுத்த கிப்ட் எனக்கு மனசு நிறைவா இருந்தது. ஆனால் முத்து மீனா எனக்கு உணர்வுபூர்வமான கிப்ட் கொடுத்து இருக்காங்க. மீனா என்னுடைய நினைவுகளை அடுத்த தலைமுறைக்காக அப்படியே படம் பிடிச்சு இருக்கா. முத்து என்னுடைய 30 வருஷ ஏக்கத்தை தீர்த்து வச்சிருக்கான். அதனால முத்து மீனாவுக்கு தான் இந்த பரம்பரை நகை என்று சொன்னதும் விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு இந்த நகையை தினமும் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணனும், வருஷத்துக்கு ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு கொண்டுட்டு போய் வச்சு பூஜை பண்ணி எடுத்துட்டு வரணும். எந்த காரணத்தை கொண்டும் இந்த நகை நம்ம குடும்பத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று நிபந்தனை சொல்லி, நகையை கொடுக்க முத்துவும் மீனாவும் பாட்டி காலில் விழுந்து சந்தோஷமாக நகையை வாங்கிக் கொள்கின்றனர்.
பிறகு மீனா ரூமில் கையில் நகையோடு நின்று கொண்டிருக்க அங்கு வரும் முத்து பூஜை பண்ணிட்டு எடுத்துட்டு வந்து லாக்கர்ல வச்சுடு. இந்த மனோஜை நம்பி எந்த நகையையும் வீட்ல வைக்க முடியாது என்று சொல்கிறார். மறுநாள் பாட்டி ஊருக்கு கிளம்பியதும் முத்து கொண்டு போய் பாட்டியை பஸ் ஏற்றி விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து கதவை பூட்டிவிட்டு எல்லா கவரிங் நகையும் கொண்டுவந்து மேஜை மீது கொட்டுவதை பார்த்து விஜயாவும் மனோஜூம் அதிர்ச்சடைகின்றனர்.

அண்ணாமலை என்னாச்சுடா என்று விசாரிக்க பாட்டிக்கு நாங்க ஒரு செயின் வாங்கலாம்னு தான் கடைக்கு இந்த நகைகளை வாங்கிட்டு போயிருந்தோம். ஆனா அங்க இது கவரிங் நகைன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். எப்படி மாறுச்சுன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும் என்று சொல்ல அண்ணாமலை விஜயா உன்னிடம் தானே இருந்தது என்று கேள்வி கேட்க எனக்கு எப்படிங்க தெரியும் அன்னைக்கு கழட்டி கொடுத்ததை பீரோவில் வைத்து திருப்பி கேட்டதும் எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.
இது எல்லாம் கவரிங் நகையா? தங்கம் இல்லையா என்று ஒன்றும் தெரியாதது போல கேள்வி கேட்டு விஜயா கொடுக்கும் போது கவரிங் நகையை கொடுத்தார்களோ என்னவோ என்று பழியை மீனா மீது திருப்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications