சிறகடிக்க ஆசை: காணாமல் போகும் மீனா.. புது நடிகர் அறிமுகம்.. மனோஜால் கதி கலங்கும் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா வீட்டை விட்டு போனதால் முத்து பிரச்சனையில் சிக்குகிறார். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் நடிகர் பொன்வண்ணன் இந்த சீரியலில் புது கேரக்டரில் அறிமுகம் ஆகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கார் செட்டில் சவாரியே வரவில்லை என்று செல்வமும் அவருடைய நண்பர்களும் புலம்பிக்கொண்டிருக்கும்போது முத்து வருகிறார். முத்துவிடம் நண்பர் ஒருவர் 200 ரூபாய் கேட்க முத்து இல்லை என்று சொன்னதும், அவர் உன்கிட்ட இல்லாம இருக்குமாப்பா என்று கேட்டதும் முத்து கோபப்பட்டு திட்டுகிறார். அப்போது உதவி கேட்டவர் என்னுடைய மனைவியிடம் சண்டை போட்டுட்டு வந்துட்டேன். ஏதாவது வாங்கிட்டு போய் சமாதானப்படுத்தணும் என்று சொல்ல முத்து உடனே அவருக்கு பணத்தை கொடுத்து அனுப்புகிறார்.

பிறகு செல்வம் ஏன் நீ ஒரு மாதிரி இருக்க என்று கேட்க, முத்து மீனா கிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன் ஆனால் மீனாவை எப்படி சமாதானப்படுத்தணும்னு தெரியல என்று சொல்ல அதற்கு செல்வம் மீனாக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கி கொடு என்று சொல்ல, முத்து போன் போட்டதும் மீனா போனை கட் பண்ணி விடுகிறார். அடுத்து முத்து நான் சாப்பிடவில்லை என்று சொன்னதால் செல்வம் ஒரு ஹோட்டலுக்கு கூப்பிட்டு போகிறார்.

அங்கு உப்பு புளி காரம் வெப் சீரிஸ் ப்ரமோஷனுக்காக அன்னம் மெஸ்க்கு வருகிறார்கள். அங்கே முத்துவும் செல்வமும் சாப்பிட்டுவிட்டு மீனாவிற்கு அவர்கள் செய்த ஸ்பெஷல் ஸ்வீட் ஒன்றை வாங்கிக்கொண்டு முத்து வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் விஜயா மீனா எந்த வேலையும் செய்து வைக்காமல் எங்கேயோ போயிட்டார் இன்னும் வீட்டுக்கு வரல என்று தீட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த முத்து மீனாவை தேட அண்ணாமலை அவ வீட்டில் இல்லடா என்று சொல்கிறார்.

பிறகு முத்து, மீனாவுக்கு போன் செய்ய போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருகிறது என்று சொல்ல விஜயா ஃபோன் பண்ணி வர சொல்லுவேன்னு போனை ஆப் பண்ணி வச்சுட்டு ஊர் சுத்த போயிட்டாளா? என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவி, ஸ்ருதி, ரோகிணி, மனோஜ் என எல்லோரும் ஒவ்வொருத்தராக வீட்டிற்கு வர இப்போதும் சமைக்கலையா என்று எல்லோரும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ரவி நான் வேணும்னா சமைக்கவா? என்று கேட்க, விஜயா அதுவும் வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது முத்து ஒரு நாள் மீனா சமைக்கல என்றதும் எல்லோரும் பட்டினி தான் இருக்கணும். இப்பவாவது அவளோட அருமை புரியுதா என்று திட்ட, உடனே விஜயா ரோகிணியை கூப்பிட்டு இந்த மீனா இல்லனா இந்த வீட்ல எந்த வேலையும் நடக்காதுனு நினைச்சுட்டு இருக்காங்க. அதை மாற்றனும் நீ சமைத்துவிடு என்று சொல்ல, ரோகினி எனக்கு ஓரளவுக்கு தான் சமைக்க தெரியும் என்று சொல்ல, அதுவே போதும் போய் சமை என்று ரோகிணியை கிச்சனுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதை அடுத்து முத்து சீதாவுக்கு போன் பண்ணி மீனா ஏன் இன்னும் வீட்டுக்கு வரல, அவகிட்ட போனை கொடு என்று சொல்ல சீதா அக்கா இங்கே இல்லை என்று சொல்ல, அப்படி சொல்ல சொன்னாளா..? நீ போன குடு.. என்று வாழ்த்து சொல்ல, மாமா உண்மையாவே அக்கா இங்க வரல காலையில் அம்மா போன் பண்ணும் போதும் கூட கோபமா பேசியதாக சொன்னாங்க என்று சொல்ல முத்து அப்படியா சரி பூ கொடுக்க போயிருப்பா இன்னும் வரல அதனால்தான் போன் பண்ணுனேன் வந்ததும் உனக்கு போன் பண்ண சொல்றேன் என்று போனை வைக்கிறார்.

மீனாவின் அம்மா இவ்வளவு நேரம் மீனா வராம இருக்க மாட்டாளே? எங்க போனான்னு தெரியலையே என்று மீனாவின் அப்பா ஃபோட்டோ முன்னாடி கண்கலங்கி கொண்டிருக்க சத்யா அந்த ஆள் தான் ஏதாவது பண்ணி இருப்பாரு. அதான் அக்கா எங்கேயோ கோவிச்சுகிட்டு போயிடுச்சு... இங்கேதான் வருவா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மீனா இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் எங்கேயோ போயிட்டாளா? என்று எல்லோரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் அம்மா நீங்க தானே காலையில் மீனாவை கிண்டல் பண்ணுனீங்க. அதனால அவ வீட்டை விட்டு கோவிச்சுகிட்டு போயிட்டா.. அவளுக்கு ஏதாவது ஆகிட்டுனா போலீஸ் உங்களை தான் தேடி வரும் என்று சொல்ல விஜயா கதி கலங்கி விடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+