சிறகடிக்க ஆசை: மீண்டும் வீட்டிற்கு வந்த மீனா.. ஆனால் சத்யா கொடுத்த அதிர்ச்சி.. இப்படி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஜூன் 12-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காணாமல் போன மீனா மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மீனாவை பார்த்ததும் முத்து கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுகிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் சில தினங்களுக்கு முன்பு முத்துவின் நண்பர் தன்னுடைய அண்ணனுக்கு கல்யாணம் என்பதற்காக பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தபோது முத்து அவரிடம் பேச்சுவாக்கில் பார்த்துடா உன்னுடைய அண்ணன் கல்யாணத்தின்போது ஓடிப்போயிட்டா, அந்த பொண்ணை உன் தலையில கட்டி வைத்திட போறாங்க.

அப்புறம் காலம் முழுக்க நீ கஷ்டப்பட வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டு விஜயா மீனாவை அசிங்கப்படுத்த அதனால் மீனா எல்லோரிடமும் கோபப்பட்டு இருந்தார். பிறகு வீட்டில் இருந்து காணாமலும் போயிருக்கிறார். இந்த நிலையில் மீனா எங்கே போனார் என்று முத்து பரிதவித்து போயிருக்கிறார்.
ஏற்கனவே மீனாவிடம் பிரச்சனை செய்த வட்டிக்கு விடுபவர் மீண்டும் ஊருக்கு வந்திருக்கும் நிலையில் அவர்தான் மீனாவை கடத்தியிருப்பாரோ என்று அங்கேயும் போய் முத்து பிரச்சனை செய்திருந்த நிலையில் கடைசியில் அவரே ஆக்சிடென்ட் ஆகி அடிபட்டு கிடப்பது தெரிய வந்ததும் முத்து அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும்போது, அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி இருக்கிறார்.
அங்கு போன முத்துக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்பு சத்யா என்னுடைய அக்காவை காணவில்லை. அக்கா காலையில் பேசும் போதே ஏதோ கஷ்டத்தில் பேசினாங்க. எங்க அக்கா காணாமல் போனதற்கு காரணம் அவளோட புருஷன் தான் என்று கம்ப்ளைன்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மீனா வீட்டில் வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பது போன்றும் அப்போது மீனாவை பார்த்த முத்து மீனாவை கட்டிப்பிடித்து அழுவது போன்றும் இருக்கிறது. முத்து அழுவதை பார்த்து மீனா ஃபீல் பண்ணுகிறார். இதனால் நாளைக்கு சத்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் அங்கேயே முத்து பிரச்சனை செய்வார்.
பிறகு போலீஸ் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கும் நிலையில் மீனா மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மீனா உண்மையில் வீட்டிற்கு வந்து விட்டாரா அல்லது இது கனவா? என்ற கேள்விகளும் எழுகிறது. நாளைக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications