சிறகடிக்க ஆசை: வசீகரனை மிரட்ட சிட்டியிடம் போன ரோகிணி! முத்துவிடம் வசமா சிக்கியாச்சு.. பாவம் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் வசீகரன் மீண்டும் ரோகிணியை மிரட்ட அவரை தீர்த்து கட்டுவதற்காக ரோகிணி சிட்டியிடம் உதவி கேட்கிறார். ஆனால் வசீகரன் முத்துவிடம் மாட்டுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யா முத்துக்கு எதிராக இனி நான் எதுவும் செய்யப்போவது கிடையாது. அவர் என்னைப் பற்றி உண்மை தெரிந்த பிறகும் வீட்டில் சொல்லாமல் இருக்கிறார் என்று சொன்னதும் சிட்டி அதிர்ச்சி ஆகிறார். அதை எடுத்து ரோகிணி மனோஜ் கடைக்கு வரும்போது அங்கு வசீகரன் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். ரோகிணியிடம் கல்யாணத்துக்கு பணம் கேட்க ரோகிணி என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று சொல்ல, அப்போ பணமா வேண்டாம் பொருளா கொடு என்று மிரட்டுகிறார்.

பிறகு பிரிட்ஜ் வாஷிங் மெஷின் டிவி என எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வேண்டும் என்று கேட்க, அதற்கெல்லாம் யார் பணம் தருவா என்று ரோகிணி கேட்க, சீர்வரிசைக்கு யாராவது பணம் தருவாங்களா? என்னுடைய கல்யாணத்துக்கு நீ தான் சீர்வரிசை கொடுக்கணும் இல்லன்னா மனோஜ் கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டி பொருள்களை வாங்கிக் கொண்டு செல்கிறார். வெளியே போயிருந்த மனோஜ் கடைக்கு வரும்போது பொருட்கள் வண்டியில் ஏற்றுவதை பார்த்து பெருசா சேல்ஸ் ஆகி இருக்கு போல என்று உள்ளே வந்து கல்லாப்பெட்டியை பார்க்க அங்கு பணம் இல்லாததை பார்த்து ஷாக் ஆகிறார்.
பிறகு ரோகிணியிடம் பொருள் விற்றிருக்க பணம் இல்லையே என்று கேட்க, ரோகிணி எனக்கு தெரிஞ்சவங்கதான். இன்ஸ்டால்மெண்டில் கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல டவுன் பேமெண்ட் கூட இல்லாமல் எப்படி கொடுக்க முடியும் என்று மனோஜ் கேட்டதும் ரோகிணி கோவப்பட்டு மனோஜை அடக்குகிறார்.
அடுத்த கட்டத்தில் ஸ்ருதியும் மீனாவும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவிடம் ஸ்ருதி நான் உங்களை மாதிரி அமைதியா இருக்க மாட்டேன். எனக்கும் ரவிக்கும் சண்டை வந்தா ரவியோட மூக்கிலேயே குத்திடுவேன். அப்புறம் பேண்டேஜ் போட்டுக்கிட்டு தான் சுத்தணும் என்று சொல்ல, மீனா நான் உங்களை கோபப்படுத்தினால் என்ன பண்ணுவீங்க என்று கேட்க அதுதான் நகம் வைத்திருக்கிறேனே புடிச்சு கீறி விட்டுடுவேன் என்று சொல்ல, இதை ஒட்டு கேட்ட விஜயா சந்தோஷப்படுகிறார்.

அப்போது மீனா அத்தை கோபப்பட்டால் என்ன பண்ணுவீங்க என்று கேட்டதும் அவங்களை கடித்து விடுவேன். அப்படியும் அடங்கலைன்னா சூடு போட்டு விட்டுடுவேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் . பிறகு கிச்சனுக்கு வந்து ஸ்ருதியை அனுப்பிவிட்டு வழக்கம்போல மீனாவை திட்டி இருக்கிறார். பிறகு ரோகிணி வித்யாவிடம் வசீகரன் வந்து மிரட்டிய விஷயத்தை சொன்னதும் ரோகிணியும் வித்தியாவும் சிட்டியிடம் சென்று வசீகரனை தட்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதற்கு சிட்டி எதுக்கு உங்களை அவன் பிளாக் பண்ணி பிளாக்மெயில் பண்றான் என்று துருவித் துருவி கேட்க ரோகிணி உன்னால் உதவி பண்ண முடியுமா முடியாதா? என்று கேட்க ரோகிணியை வைத்து முத்துவை பழிவாங்க திட்டம் போட்டு சரி என்று ஒப்புக்கொள்கிறார். பிறகு வசீகரனை வரவழைத்து பிளாக்மெயில் பண்ணுவியா என்று அடி கொடுக்க அவர்களிடம் இருந்து வசீகரன் தப்பி ஓடி வெளியே வந்து தன்னுடைய பைக்கை எடுத்துவிட்டு வேகமாக போய்க் கொண்டிருக்கும்போது தெருவில் நடந்து வந்த ஒரு பாட்டி மீது மோதி விட்டு போகிறார்.

அந்த நேரத்தில் முத்துவும் செல்வமும் பைக்கில் பேசிக்கொண்டே வர வசீகரன் பாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் போவதை பார்த்து வசீகரனை துரத்தி போகின்றனர். அது போல சிட்டியும் அவருடைய நண்பர்களும் வசீகரனை துரத்திப் போய்க் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications