சிறகடிக்க ஆசை: மலேசியா மாமா முத்துவிடம் சிக்கிட்டாரு! பரிதாபமாக ரோகிணி.. விஜயா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைகாரரை மீனா பார்த்ததும் அவர் மனோஜ் ஷோரூமிற்க்குள் நுழைந்து விட அங்கு முத்துவும் வந்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா மீனாவை கூப்பிட்டு உன்னால்தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு என்று பழி போட, முத்து இது உனக்கு தேவைதானா? நீ அவங்களுக்கு பரிதாபப்பட்ட பாரு என்று கூப்பிட்டு செல்கிறார். பிறகு ரவி ரொம்ப வலிக்குதா என்று விஜயாவிடம் கேட்க, இந்த பக்கம் வாடா என்று பாசமாக கூப்பிட்டு பளார் என்று ஒரு அரை கொடுத்து திரும்ப முடியாமல் தவிக்கிறார்.

நானே திரும்ப முடியாமல் தவிக்கிறேன் நீ வலிக்குதா என்று கேட்கிறாயா? என்று கேட்கிறார். அதை தொடர்ந்து முத்து மீனாவிடம் எங்க அம்மாவுக்கு சுளுக்கு பிடிக்க வச்சுட்ட என்று கிண்டல் செய்ய, அதற்கு மீனா அப்போ அதுக்கு காரணம் நான் தான் என்று நீங்களும் சொல்றீங்களா? என்று கோவப்பட்டு முத்து கேட்ட டீ போட்டு தரமாட்டேன் என்று அடாவடி செய்கிறார். பிறகு அண்ணாமலை விஜயாவிடம் படி வைத்து கீழே படு என்று சொல்கிறார்.
அதோடு விஜயாவுக்கு துணையாக மீனா இருக்கட்டும் என்று சொல்ல விஜயா மீனாவை என்னோடு படுக்க வேண்டாம் என்று துரத்தி விடுகிறார். ரோகிணியை கூப்பிட்டு தன்னோடு படுக்க சொல்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி வந்து ஆன்ட்டி எப்படி படி வச்சு படுக்குறாங்க என்பதை பார்க்கணும் என்று காத்திருக்க, அவர் படுக்கப் போகும்போது கொஞ்சம் லெஃப்ட்... கொஞ்சம் ரைட்டு... கழுத்து லேண்ட் ஆயிடுச்சு என்று விளையாட்டு செய்கிறார். அதை பார்த்து ரோகிணி ஸ்ருதியை திட்டுகிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் மனோஜ் கடைக்கு வந்ததும் வித்யா ஃபோட்டோ ஒன்று கொடுக்க, அதற்கு தினமும் பூ போட்டு பூஜை செய்ய வேண்டும் என்பதால் ரோகிணி மீனாவை பூ கொண்டு வர சொல்ல மீனா கடைக்கு கிளம்பும்போது அங்கு ரோகிணியின் மலேசியா மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரரை பார்க்க, அவரும் மீனாவை பார்த்து எஸ்கேப்பாக முயற்சி செய்ய பின்னாடியே மீனா துரத்தி செல்கிறார்.

ஆனாலும் மலேசியா மாமா ரோகிணி பாப்பா பக்கத்துல தான் இருக்கு என்று அங்க போயிடலாம் என மனோஜ் கடைக்கு வருகிறார். பிறகு அவரை காணவில்லை என்பதால் மீனா கடைக்கு வருகிறார். அந்த நேரத்தில் முத்து செல்வத்திற்காக ஒரு பிரிட்ஜ் வாங்குவதற்காக கடைக்கு கிளம்பி வருகிறார்.

அங்கு முத்து மற்றும் மீனாவை பார்த்த கறிக்கடைக்காரர் அங்கு இருக்கும் ஃபிரிட்ஜுக்குள் ஒளிந்து கொள்கிறார். கறிக்கடைக்காரரை பார்த்ததும் ரோகிணியும் வித்யாகவும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். அந்த நேரத்தில் செல்வம் கறிக்கடைக்காரர் ஒளிந்திருக்கும் பிரிட்ஜ் தான் வேணும் என்று சொல்ல, முத்து அந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்க்க போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications