சிறகடிக்க ஆசை: மீனாவிடம் ரோகிணி பற்றிய உண்மையை உளறிய வித்யா! முத்து கண்டுபிடித்த உண்மை! செம பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணிக்காக வித்யா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரோகிணி பற்றி வித்தியாவிடம் மீனா கேள்வி மேல் கேள்வி கேட்க, வித்யா உண்மையை உளறுகிறார். அதோடு இன்று மேலும் பல பரபரப்பான சம்பவம் நடைபெற்றது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி எல்லாரையும் ஒவ்வொரு காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்ட நிலையில் முத்துவும் கிளம்புவார் என்று நினைத்த நிலையில் முதலில் ஒரு சவாரி கிடைத்து முத்து வெளியே போக பிறகு சவாரி கேன்சல் ஆகிவிட்டதும் முத்து மீண்டும் வீட்டிற்கு வந்ததும் ரோகிணி கோபப்படுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, வித்யா தன்னுடைய ஃபிரண்டு மூலமாக முத்துவிற்கு ஃபோன் போட்டு அவரையும் வெளியே கிளப்பி விடுகிறார்.

பிறகு எல்லோரும் வெளியே போனதும் க்ரிஷை தட்டி தூங்க வைத்துவிட்டு, அம்மாவிடம் வந்து நீ எதுக்கு இங்கே வந்தாய் என்று சத்தம் போடுகிறார். அதோடு சென்னைக்கு வந்தா ஒழுங்கா ட்ரீட்மென்ட் எடுக்க மாட்டியா? இங்கே வந்து ஏன் என் உசுர வாங்குற? என்னை நிம்மதியா வாழ விட மாட்டியா? வேணும்னா என்ன கொன்னுரு என்று அழுது கொண்டு இருக்க.. அதற்கு கோபப்பட்ட அவருடைய அம்மா நானாடி உன் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறேன்? என்று கோபப்படுகிறார்.
நீ பெத்த புள்ளையை நான் வளர்த்துக்கிட்டு இருக்கிறேன். நாளைக்கு எனக்கு ஒன்னுனா அவன் நிலைமை என்ன ஆகணும்னு நினைச்சு நினைச்சு தினமும் நான் பயந்துட்டு இருக்கேன். அவனை கூட்டிட்டு போயிடு இல்லன்னா அவனை ஆசிரமத்தில் சேர்த்து விடுவார்களோ என்று பயமா இருக்கு என்று திட்டி கொண்டு இருக்கிறார்.

அதற்கு ரோகிணி ஏமா இப்படி எல்லாம் பேசுற.. எனக்கு மட்டும் க்ரிஷ் மேல அக்கறை இல்லையா? அவன் நான் பெத்த பையன் என்று சொல்ல, அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த க்ரிஷ் எழுந்து விடுகிறான். பாட்டி எங்க இருக்கீங்க என்று கேட்டபடி வரும் க்ரிஸ் அத்தை நீ தான் என்னுடைய அம்மாவா என்று கிட்ட நெருங்கி வரும்போது தவறி கீழே விழும்போது ரோகிணி தாங்கி பிடித்து நான் தான் உன் அம்மா என்று கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுகிறார்.
மறுபக்கத்தில் வீட்டுக்கு வந்த மீனாவை வித்யா உட்கார வைத்து எப்படியாவது நேரத்தை கடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா ரோகிணி பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்க, அதற்கு வித்யா அங்க ரோகிணி என்ன சொல்லி இருக்கான்னு தெரியலையே என்று வித்யா சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.

அப்போது நானும் ரோகிணியும் சின்ன வயசுல இருந்தே பிரண்டு என்று சொல்லிவிடுகிறார். அதற்கு மீனா நீங்களும் மலேசியாவில் இருந்தீங்களா என்று கேட்க, இல்லை ரோகிணி இங்கே வரும் போது நாங்க எல்லாரும் ஒன்றா விளையாடுவோம் என்று வித்யா சமாளிக்க, பிறகு நீங்க சின்ன வயசுல எடுத்த போட்டோ எல்லாம் இருக்கா என்று மீனா கேட்க வித்யா இருக்கு என்று சொல்ல, அதை எனக்கு காட்டுறீங்களா என்று மீனா ஷாக் கொடுக்கிறார்.
அந்த நேரத்தில் யாரோ ஒருவர் காலிங் பெல் அடிக்க வித்யா வெளியே போய் பாத்துட்டு வரேன் என்று கிளம்பி போக அங்கே மலேசியா மாமாவாக நடிக்க வந்த கறி கடைக்காரர் நிற்பதை பார்த்து வித்யா அதிர்ச்சி அடைகிறார். வித்யா அவரை தனியாக அழைத்து சென்று ஏன்யா இங்க வந்த? என்று கோபப்பட்டு கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதுபோல நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ரோகிணி தன்னுடைய மகன் க்ருஷ்க்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கும்போது வெளியே போன முத்து வீட்டிற்கு வந்து பார்த்து விடுகிறார். அதை பார்த்து இது என்ன புது கதையா இருக்கு? என்று கேள்வி கேட்க ரோகிணி திரு திருவென்னு முழித்துக் கொண்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications