சிறகடிக்க ஆசை: முத்து சொன்ன ஒரு வார்த்தை.. வீட்டில் எல்லாரையும் அலறவிட்ட மீனா.. விஜயாவுக்கு இது தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 8-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த சீரியலில் பார்க்கலாம். இத்தனை நாட்களாக ரோகிணி க்ரிஷ் விஷயத்தில் வீட்டில் மாட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றம் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் மீனாவால் புது பிரச்சனையும் தொடங்கி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ரோகிணி அவருடைய அம்மாவிடம் நீங்க ஏதோ முத்துக்கு காசு தரணும்னு சொன்னிங்களே என்று சொன்னதும், ஆமா தம்பி எவ்வளவுப்பா ஆச்சு சொல்லு நான் கொடுக்கிறேன் என்று மீனாவின் அம்மா சொல்ல அதற்கு முத்து நாமெல்லாம் ஒரே குடும்பமா பழகிட்டு இருக்கோம், இப்படி பேசுறீங்களே என்று முத்து பணம் வாங்க மறுக்க ரோகிணி அதிர்ச்சி ஆகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் வாங்க டிஸ்சார்ஜ் செய்து உங்களை பஸ் ஏற்றி விடுகிறோம் என்று சொல்ல, அதற்கு முதலில் அவர்கள் மறுக்கவும் பிறகு முத்து அவர்களை கொண்டு விட்டு விட்டு வருகிறார். அடுத்ததாக மீனா அண்ணாமலைக்கு கஞ்சி செய்து கொடுக்க, அதை குடித்துவிட்டு அவர் நெல்லூர் போகிறேன் என்று கிளம்ப, முத்து விஜயாவை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது முத்துவின் நண்பர் வீட்டிற்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வர, அவரிடம் முத்து உனக்கா கல்யாணம் என்று கேட்ட, இல்லை என்னுடைய அண்ணனுக்கு என்று சொன்னதும் உஷாரா இரு இல்லன்னா உங்க அண்ணன் ஓடிப்போய்விட்டால் அந்த பொண்ணை புடிச்சி உன் தலையில் கட்டி வைத்து விடுவார்கள். அதற்கு அப்புறம் காலம் முழுக்க கஷ்டப்படணும், அனுபவத்துல சொல்றேன் என்று சிரித்தப்படியே சொல்லி நண்பனை அனுப்பி வைக்கிறார்.
அப்போது விஜயா மனசில் இருக்கிறதை சொல்லிட்டான் இதுதான் இவங்க ஒரு வருஷமா வாழ்ந்த லட்சணம் என்று சொல்கிறார். இதை கேட்டு மீனா ஃபீல் பண்ணுகிறார். பிறகு முத்து தோசை கேட்க மாவு இல்லை என்று மீனா சொல்ல, ரவை கேட்க அதற்கும் ரவை இல்லை என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு யார் சாப்பாடு கேட்டாலும் எதுவும் நான் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ரோகிணி ஒரு தோசை மட்டுமாவது சுட்டு கொடுங்க என்று கேட்க அதற்கு நீங்கதான் ஏபிசி ஜூஸ் போட்டு குடிப்பிங்களே பிரிட்ஜ்ல காய்கறி இருக்கு வேணும்னா எடுத்து ஜூஸ் போட்டு குடிங்க என்று சொல்கிறார்.
பிறகு அது விஜயா என்னடி எல்லாருக்கும் ஆர்டர் போட்டுட்டு இருக்க என்று கேட்க, நான் யாருக்கும் ஆர்டர் போடல நீங்க தான் எல்லாரும் எனக்கு ஆர்டர் போட்டுட்டு இருக்கீங்க என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு மனோஜ் நீங்க ரெண்டு பேரும் ஓவரா பண்றீங்க, நான் பசியோட போகணுமா? நான் என்ன உன்ன மாதிரி வேலை பாக்குறேனா? மூளைய யோசிச்சு பிசினஸ் பண்றேன் என்று ஏற்கனவே பேசிய டயலாக்கை இன்றும் திரும்ப பேச முத்து கொஞ்சம் அமைதியா இருடா நானே குழப்பத்தில் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
பிறகு மீனாவிடம் உனக்கு என்ன ஆச்சு என்று கேட்க, உங்க அம்மா சொல்றது சரியா தான் இருக்கு என்று மீனா சொல்ல, அவங்க என்ன சொன்னாங்க என்று முத்து கேட்க, மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க விஜயா அவளுக்கு ஏதோ ஆகி இருக்கு வேப்பிலை அடி என்று சொல்கிறார். இதை அடுத்து முத்து என்ன ஆச்சு மீனா என்று கேட்க நீங்க உங்க பிரண்டு கிட்ட என்ன சொன்னீங்க? என்னை உங்க தலையில கட்டி வச்சிட்டாங்களா? இன்னும் அதே ஞாபகத்துல தான் இருக்கீங்களா என்று கோபப்படுகிறார்.

உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல என்று மீனா திட்டியதும், நான் விளையாட்டா சொன்னதிற்கு நீ இப்படி பேசிட்டு இருக்க என்று கோபப்பட்டு முத்து கிளம்பி சென்று விடுகிறார். பிறகு மீனாவின் அம்மா போன் பண்ணி முத்து பற்றி விசாரிக்க மீனா கோபப்பட்டு போனை வைத்து விடுகிறார். வீட்டில் அவருடைய அம்மா மீனாவுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ சண்டை போல என்று புலம்பி கொண்டு இருக்க, சத்யா அவரு குடிச்சிட்டு ஏதாவது பேசி இருப்பார். அந்த ஆளுக்கு அதானே வேலை என்று பேசிவிட்டு கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications